தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கே என்று பெயர் பெற்றவர் இசை அமைப்பாளர்
சாம் சி.எஸ்.. இவரது இசையில் உருவான பாடல்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது..
தமிழில் இவர் ‘ஓர் இரவு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர், விக்ரம் வேதா படம் இவருக்கு இசை உலகில் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்தது.. இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
தமிழைத் தொடர்ந்து ஹிந்தி பதிப்பிலும் ‘விக்ரம் வேதா’ இசைக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.. எனவே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானார்..

மேலும் ‘அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி போன்ற படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் மொழி மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்..
ஜிவி பிரகாஷ் நடித்த ‘இம்மார்ட்டல்’ படத்திற்கும் கார்த்தி நடித்த ‘சர்தார் 2’ படத்திற்கும் இசையமைத்திருந்தார்.. இந்த இரண்டு படங்கள் கடந்த இரண்டு வாரத்தில் ரிலீசானது.. இரண்டு படங்களிலும் இவரது இசைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது..
‘சர்தார் 2’ படம் இவரது இசையில் வெளியான நூறாவது திரைப்படமாகும்..
மேலும் தற்போது கை வசம் பத்துக்கு மேற்பட்ட படங்களை வைத்துள்ளதாக சமீபத்தில் சாம் சி. எஸ். தெரிவித்திருந்தார்.

