தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற *‘Demonte Colony 2’* திரைப்படத்தை தயாரித்ததோடு, பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருவதுடன், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியத் திரைப்படங்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வரும் *White Nights Entertainment* நிறுவனம், ரஷ்யாவைச் சேர்ந்த Smena Film Company LLC நிறுவனத்துடன் இணைந்து புதிய இந்தோ-ரஷ்ய திரைப்படமான ‘SMASH’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பேட்மிண்டன் வீரரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. விளையாட்டு, உணர்வுகள், போராட்டம் மற்றும் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் *‘SMASH’*, ரசிகர்களுக்கு ஒரு புதிய திரைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இந்தியாவைச் சேர்ந்த *White Nights Entertainment*…
Read MoreAuthor: reporter
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18 (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது ‘பத்தா’ படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில்…
Read Moreபாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா
தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது ‘இசை மேதை’, ‘பாரத ரத்னா’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் ‘எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் பாரம்பரியமான தொடக்க நிகழ்வை மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, தொடங்கி வைத்தார். தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்-…
Read Moreசைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – 6 விருதுகளை வென்று குவித்தது!
தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா () விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும்…
Read Moreசில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ( Silver Tree Studios) தயாரிக்கும் முதல் திரைப்படம் – ரஞ்சித் ஜெயக்கொடி (Ranjit Jeyakodi) இயக்கத்தில் உருவாகிறது!
விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. மேலும் இப்படத்தில்…
Read More‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. ‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் PAN Indian வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், இந்தி பதிப்பிற்கு நடிகர் Pankaj Tripathi, தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் Rana Daggubati, மலையாள பதிப்பிற்கு நடிகர் Soubin Shahir, கன்னட பதிப்பிற்கு நடிகர் Kiccha Sudeep ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’, பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக்…
Read Moreஅண்மையில் தங்கள் தயாரிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தைத் தொடர்ந்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படமாக ‘பிக்னிக்’ (Picnic) உருவாகிறது.
இந்தப் படத்தின் மூலம் ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இயக்குநராக அறிமுகமாகிறார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சமீபத்தில் உலகளாவிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தினைத் தொடர்ந்து, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இப்படம் 2027 ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களைத் தயாரிக்கும் பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய தனது அடுத்த திரைப்படமான ‘பிக்னிக்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி…
Read Moreஅண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி ‘.
இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் எனப் பணியாற்றியிருந்தனர்.ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்திருந்தார். ‘மண்டாடி’ படத்தின் வெற்றி மகிழ்ச்சி பகிர்வுக் கொண்டாட்டம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வருகை தந்திருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி ஒளி படர்ந்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “ஒரு படத்தைப் பற்றி பேசும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்களுடைய ஏற்புதான் .மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறார்கள்…
Read Moreசண்டக்காரி – விமர்சனம்..
கதை… லண்டனில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார் ஸ்ரேயா.. அவருக்கு உதவியாளராக வந்து சேர்கிறார் திறமையான விமல்.. ஸ்ரேயா ஒரு சண்டைக்காரி திமிரான பொண்ணு என ஊழியர்களே அவரை வெறுக்கும் நிலையில் விமல் அங்கு தாக்கு பிடித்து தன் பணியை செய்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் ஸ்ரேயாவின் விசா முடிவடையும் நிலையில் அவர் இந்தியா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.. இதனால் விமலின் உதவி நாடுகிறார்.. அப்போது விமல் ஒரு நிபந்தனை விதிக்கிறார்… நீங்கள் உதவி செய்தால் நான் செய்வேன் என கண்டிஷன் போடுகிறார்.. யார் நிபந்தனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்.? ஜெயித்தது யார் என்பதெல்லாம் மீதி திரைக்கதை.. நடிகர்கள்.. Vemal, Shriya saran, Punnagai poo Gheetha, Sathyan, Prabu, KR Vijaya, Rekha, Dhev khill, Uma padmanaban, Crane Manohar,…
Read Moreநல்ல படம் – விமர்சனம்…
கதை… நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி.. குடி குடி என்று இருப்பவன் நாயகன்.. பார் நடத்தி வருபவர்.. இன்பம் துன்பம் எதுவென்றாலும் குடித்து தீர்ப்பவர் இவர்.. மது கடை விடுமுறை என்றாலும் ஏற்கனவே ஸ்டார்ட் எடுத்து வைத்து அதிலிருந்து குடித்துக் கொண்டிருப்பவர்.. ஆனாலும் இவரை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி.. அம்மா தங்கை காதலி யார் சொன்னாலும் குடியை விடாமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.. இந்த நிலையில் ஒருநாள் இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது.. அனைத்து மது கடைகளும் அடைக்கப்படுகிறது.. அப்போது குடிகாரர்கள் நிலை என்ன என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை நடிகர்கள்… நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி.. குடித்தால் என்ன பிரச்சனை.. குடிக்காவிட்டால் என்ன நன்மை என்பதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்… இயக்குனர் ஆனால்…
Read More
