நல்ல படம் – விமர்சனம்…

கதை…

நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி..

குடி குடி என்று இருப்பவன் நாயகன்.. பார் நடத்தி வருபவர்.. இன்பம் துன்பம் எதுவென்றாலும் குடித்து தீர்ப்பவர் இவர்.. மது கடை விடுமுறை என்றாலும் ஏற்கனவே ஸ்டார்ட் எடுத்து வைத்து அதிலிருந்து குடித்துக் கொண்டிருப்பவர்..

ஆனாலும் இவரை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் மருத்துவக் கல்லூரி மாணவி.. அம்மா தங்கை காதலி யார் சொன்னாலும் குடியை விடாமல் நண்பர்களுடன் ஜாலியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்..

இந்த நிலையில் ஒருநாள் இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது.. அனைத்து மது கடைகளும் அடைக்கப்படுகிறது.. அப்போது குடிகாரர்கள் நிலை என்ன என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை

நடிகர்கள்…

நாயகன் – ஹரிஷ்… நாயகி – தனலட்சுமி..

குடித்தால் என்ன பிரச்சனை.. குடிக்காவிட்டால் என்ன நன்மை என்பதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்… இயக்குனர் ஆனால் அதை ஒரு உணர்வுபூர்வமாக அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.. எந்த காட்சிகளும் நம் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..

இப்படி ஒரு குடிகாரனை எந்த கல்லூரி மாணவி காதலிப்பார் என்பது தான் தெரியவில்லை.. நாயகனின் குடிகார நண்பர்களாக வருபவர்கள் கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளனர்..

முக்கியமாக கல்கி காமெடி செய்து படத்தை கலகலப்பாக எடுத்து செல்கிறார்

 


தொழில்நுட்ப குழு…

சகிஸ்னா சேவியர் இசை அமைத்திருக்கிறார்.. இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..

பிரபு ராம் என்பவர் இயக்கி இருக்கிறார்..

படம் பாத்தீங்களா என்ன படம் என்று கேட்டால் நல்ல படம் என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த தலைப்பை வைத்திருக்கிறார்..

மற்றபடி நல்ல படம் என்று சொல்லும் அளவுக்கு இது தரமான படம் அல்ல.. நல்ல படம் என்ற தலைப்பின் கீழே மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் என்ற தலைப்பும் உள்ளது..

Related posts

Leave a Comment