கதை…
ஜூன் மாதம் என்றாலே தமிழகத்திற்கு டென்ஷன் தான்.. காரணம் வெயில் அதிகமாக இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் ஜூன் மாதம் வந்தாலும் அங்குள்ள மக்கள் அலறி துடிக்கிறார்கள்.. ஒவ்வொரு ஏழு வருடத்திற்கு ஒரு முறை வரும் ஜூன் மாதத்திற்கு அந்த ஸ்பெஷல் அலறல்..
மக்கள் அனைவரும் பயத்தில் உறைந்து கொண்டிருக்க அங்கு உள்ள காவல் நிலையத்திற்கு புதிதாக வருகிறார் காவல் அதிகாரி சித்து.. திடீரென ஒரு முக்கிய செய்தி வருகிறது.. கேரளாவில் இருந்து ஒரு சைக்கோ கொலைகாரன் தமிழக பகுதியில் வந்து விட்டான்.. அந்த சமயத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடக்க ஒரு கட்டத்தில் சித்துவின் மனைவியும் கொல்லப்படுகிறாள்..
நிஜமாலுமே சைக்கோ கொலைகாரன் தான் கொன்றானா? அல்லது இதில் பின்னணியில் வேறு ஒரு கொலைகாரன் இருக்கிறானா என்று தேடுதல் வேட்டை இறங்குகிறார் நாயகன் சித்து…
அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் அதிரடியான திருப்பங்கள் நிறைந்த பக்கா ஸ்கிரீன் பிளே..

நடிகர்கள்…
சித்து – தர்ஷிகா – ரித்விகா – ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்திருக்கிறார் நாயகன் சித்து வரும்போது ஒரு பக்காவான சீரியஸ் சப்ஜெக்ட்டில் களம் இறங்கி சிக்ஸர் அடித்திருக்கிறார் சித்து..
ரித்விகா கேரக்டர் சூப்பர் ட்விஸ்ட் கொடுத்து ரிச் ஆக காட்டியிருக்கிறார்..
மற்றொரு நாயகி தர்ஷிகா தரமான நடிப்பில் கவருகிறார்..
போலீஸ் ஜெயக்குமார்.. போலீஸ் அழகு உள்ளிட்ட அனைவரும் அந்த கேரக்டருக்கு பக்கா பொருத்தம்.. இவர்கள் கேரக்டர் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது
தொழில்நுட்பக் குழு…
Lபெரும்பாலும் இருட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது காரணம் இது திரில்லர் நிறைந்த கதை… முக்கியமான மழைக்கால காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் அதில் லைட்டிங் சூப்பர் சிறப்பு..
படத்தின் பின்னணி இசையும் கூடுதல் பலம்.. ஒரு திரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது..
அடுத்தடுத்து கொலைகள்… கொலைகாரன் யார்.? என்ற என்ற பதட்டத்தை படத்தின் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் பாலாஜி..
அடுத்த பாகத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருப்பதால் இந்த படத்தில் சில காட்சிகளுக்கு விடை இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அதற்கான எதிர்பார்ப்பையும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் நமக்கு உண்டாக்குகிறது..

The Dark Heaven movie review
