Insomniac’s Dream Creations நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில், ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முந்தைய படத்தின் மூலம் நேர்த்தியான மர்மம் மற்றும் எமோஷனல் திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்திலும் பரபரப்பான திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். முன்னணி இளம் நடிகர் மணிகண்டன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் , ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும்…
Read MoreAuthor: reporter
பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது
இந்நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா ரூத் பிரபு, ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஷிதிஜா நஹதா- நிறுவனர் ஃபிட் செஃப் மற்றும் நியூட்ரிஷன் வெல்னஸ் கோச், ஷைனி சுரேந்திரன்- விளையாட்டு, ஹோலிஸ்டிக் தடுப்பு உணவியல் நிபுணர்; மற்றும் முன்னணி மகளிர் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பத்மா ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் நரசா நாராயணி ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். ‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஹார்மோன் சமநிலை, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், மாதவிடாய் காலப் பொருட்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்து இந்த…
Read Moreசிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!
நாம் இதுவரை அதிகம் அறிந்திடாத உண்மையை திரையில் கொண்டு வரும் திரைப்படங்கள் உலகைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகின்றன. இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ திரைப்படமும் அத்தகைய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அமைந்துள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ஆவணப்படம். அப்பகுதியில் நிகழ்ந்த அசாதாரணமான மருத்துவ மற்றும் சமூக மாற்றத்தைப் பதிவு செய்கிறது. 2026ஆம் ஆண்டுக்கான 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் (IDSFFK) இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியான சிட்லிங்கியைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், 1990களில் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் எதிர்கொண்ட மருத்துவ நெருக்கடிகளையும், அதைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் அந்தப் பகுதிக்கு வந்து 1993ஆம் ஆண்டு ‘Tribal Health Initiative’ (THI)…
Read Moreமக்கள் நாயகன் ராமராஜன் நன்றி தெரிவிக்கிறார்…
இன்று எனது பிறந்த நாளினை, நான் பிரமிக்கும் நாளாக உணரும் படியான எண்ணற்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட நற்பணிகளை செய்த தமிழகம் முழுவதும் உள்ள என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சகோதரர்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி! வாழ்த்துக்கள் தெரிவித்தும், பிரார்த்தனைகள் செய்தும், உங்கள் அன்பின் வெளிப்பாட்டினை நான் அன்பனாய் அறிவேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய என் நெஞ்சில் நிறைந்த திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கும், பெருமதிப்புமிகு பத்திரிகை தொலைக்காட்சி ஊடக மீடியாத்துறை நண்பர்களுக்கும், யூடியூப்பர்ஸ், சினிமா சார்ந்த சேனல் கிரியேட்டர்ஸ்களுக்கும், என் வளர்ச்சியில் அன்றும் இன்றும் பெரும் பங்காற்றிவரும் பிஆர்ஓ க்கள், என் உறவினர்கள், நண்பர்கள்,மற்றும் அன்பு பாராட்டி வரும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், நட்புள்ளம் கொண்ட பல்வேறு சங்க தலைவர்கள், அமைப்பு சார்ந்த தோழர்கள், அனைத்து நடிகர்களின் ரசிக பண்பாளர்கள், அன்று முதல் இன்று…
Read Moreமூன்று நண்பர்கள், ஒரு திரைப்படம், ஒரு பயணம்: ஸ்ரீ கார்த்திக்கின் புதுப்பட அப்டேட்
‘கணம்’ படப் புகழ் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்க எடுத்த முயற்சி, தற்போது அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தொடங்குவதில் உள்ள சவால்கள், சரியான கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், நிராகரிப்புகள், அதை தாண்டி தாங்கள் நம்பிய கதையை கண்டறிந்து அதை சொந்த முயற்சியில் உருவாக்க அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் என அனைத்தையும் ரீல்ஸ் (Reels) மூலமாக ஆவணப்படுத்தி வந்தனர். தற்போது இந்த நெகிழ்ச்சியான பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் இவர்களுடன் இணைந்துள்ளது. அமலா அக்கினேனி, சர்வானந்த், ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘கணம்’ படத்தின் மூலம்…
Read Moreதமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அன்புடன் வரவேற்றார். முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்கும், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்கும் முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Read Moreஅட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!
நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடலோரப் பகுதியான ராமேஸ்வரத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கும் ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நீதி, கண்ணியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றையும் படம் பேசியது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படத்தின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக இந்த…
Read More‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை கே.வி கிரண் கவனிக்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொள்ள, கலை இயக்கத்தை காந்தாரா உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய வேலு கவனித்திருக்கிறார். நடனத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்திருக்கிறார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில்…
Read Moreதமிழகத்தை சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் இந்திய- இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் 32 பதக்கங்களை வென்று சாதனை!
சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட வீரர்கள் கோவாவில் நடைபெற்ற போட்டியில் 15 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்றனர். கோவாவில் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்திய-இலங்கை ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் சிறப்பாக விளையாடி, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொத்தம் 32 பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழ்நாடு அணியினர் பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு 15 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 8 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்களை கைப்பற்றினர். போட்டியில் தனிநபர் கட்டா , தனிநபர் குமித்தே, குழு கட்டா மற்றும் குழு குமித்தே உள்ளிட்ட…
Read Moreதடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி!!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களை, சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த அவர்கள் நேரில் பாராட்டி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது Chennai District Masters Athletic Association President திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் பயிற்சியாளர் திரு. நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
Read More