ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! ‘டாடா’ போன்ற வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளரான எஸ். அம்பேத் குமார் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் ‘டிஎன்ஏ’ படத்தை இயக்கியுள்ளார். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. தன் கதை மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படம் பற்றி பேசுகையில், “‘டிஎன்ஏ’ படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கதையை சொன்னபடியே படமாக்கியதில் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அதர்வா முரளி இந்தப் படம் முடியும் வரை…
Read MoreAuthor: reporter
மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்
‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி நடிப்பிலும் தனது திறமையை நிரூபித்து தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இந்நிலையில், தனது தொய்வில்லாத திரைப் பயணத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்க உள்ளார் சேரன். பெரிதும் பாராட்டப்பட்ட ‘இஷ்க்’ மலையாள வெற்றி படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் முக்கிய வேடத்தில் சேரன் நடிக்கிறார். ‘நரிவேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 26 முதல் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. மலையாள திரையுலகில்…
Read Moreஅன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன்
அன்பு இல்லம் மற்றும் Hope Public Charitable Trust குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் R.பார்த்திபன். த்ரில்லர், ஹாரர் மற்றும் சைன்ஸ் ஃபிக்ஷன் என்ற வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டே நாட்களில் அதிக திரையரங்கில் அதிக காட்சிகளுடன் உலகமெங்கும் வெற்றிநடை போடுகிறது. D. இமானின் இசை, கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு என யாவும் டீன்ஸ்ஸை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற வைத்தது குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களுடன் திரையரங்கிற்கு வந்து டீன்ஸை பெரும் ற்றி பெறச் செய்தனர். இத்திரைப்படத்தில் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பெரும் பங்களித்திருக்கிறார். இதனை முன்னிட்டு அன்பு இல்லத்தை சேர்ந்த நூற்றுக்கும்…
Read Moreகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு
திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. :தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார். எதிர்வரும் ஆகஸ்ட்…
Read Moreரசிகர்களின் பெரும் வரவேற்பை பெரும் ஜெயம்ரவியின் ‘பிரதர்’ முதல் பாடல் ‘மக்காமிஷி’
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஹாரிஸ் ஜெயராஜ் அதிரடி இசையில் பால் டப்பா எழுதி பாடிய உற்சாகமிக்க ‘மக்காமிஷி’ பாடலுக்கு சாண்டி மாஸ்டர் துடிப்புமிக்க நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார் Song Link: https://youtu.be/eF9LRFbkHLQ ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘மக்காமிஷி’ என்றால் என்ன என்று சமூக வலைதளங்களில் சுற்றி வந்த கேள்விக்கு கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தம்…
Read More‘விடுதலை பார்ட் 2’ படத்தின் கர்நாடக திரையரங்க உரிமையை வாங்கிய ஏவி மீடியா!
தமிழ்த் திரைப்படங்கள் எப்போதுமே மொழி போன்ற தடைகளைக் கடந்து கன்னட பார்வையாளர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வரும் உணர்வுப்பூர்வமான கதைக்களங்கள் பிறமொழி பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு படமாக வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வெளியான ‘விடுதலை 1’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஏவி மீடியா, விஜய்சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏவி மீடியாவின் வெங்கடேசன் இதுபற்றி பேசும்போது, “திரைப்படங்களை வாங்கி, வெளியிடுவதை நாங்கள் துல்லியமாகவும் கச்சிதமாகவும் வெற்றிகரமாகவும் செய்து வருகிறோம். ‘விடுதலை 2’ போன்ற ஒரு திரைப்படம் எங்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது. இந்தப் படத்தைப்…
Read Moreவிஷ்ணு மஞ்சுவுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மட்டும் இன்றி தெலுங்கு திரையுலக நடிகர்களின் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA) தலைவரான விஷ்ணு மஞ்சுவின் கலையுலக சேவையை கெளரவிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவருக்கு கோல்டன் விசா வழங்கி வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா என்பது பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கெளரவம் மிக்க மரியாதையாகும். திரைப்பட நடிகராக பல கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் நன்மதிப்பை பெற்றிருப்பதோடு, தயாரிப்பாளராகவும் பல நல்ல திரைப்படங்களை தயாரித்திருக்கும் விஷ்ணு மஞ்சு, ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (MAA) தலைவராக தெலுங்கு திரையுலக ஒற்றுமைக்காக அறும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தி்ய திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவிய திரைப்படமாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை தயாரித்து, கண்ணப்பா வேடத்தில் நடித்து வரும்…
Read Moreசெஸ் தினத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசளித்த விஸ்வநாதன் ஆனந்த்
உலக செஸ் தினத்தன்று தமிழ்நாட்டில் மாநில அளவிலான செஸ் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தனது கையெழுத்திட்ட செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கினார் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டின் பங்கு இந்தியாவில் அதிக அளவில் கிராண்ட் மாஸ்டர்களைக் கொண்ட, உலக செஸ் போட்டிகளில் பெரிதளவில் பங்குபெறும் வீரர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழக கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ் மற்றும் பல தமிழக வீரர்களின் சாதனைகள் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன. கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவில் இவர்கள் போன்ற பல சாதனையாளர்களை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிப்பவர் ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும், மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE)…
Read Moreசாதனைப் படம் “பிதா”! : 23 மணி, 23 நிமிடங்கள் எடுக்கப்பட்டது
இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘பிதா’! எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ். காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன். ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார்…
Read More“சினிமாவை அழித்துவிடாதீர்கள்” – நடிகர் நகுல் ஆவேசப் பேச்சு
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். விழாவில் நடிகை தேவயானி பேசும் போது, “முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன. என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது.…
Read More