மலையாளத் திரைப்பட இசையின் மகத்தான இசை மேதையாக விளங்கிய G. Devarajan அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள முதல் “ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026”, புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக் கலைஞர் T. V. Gopalakrishnan அவர்களுக்கு, தேவராஜன் மாஸ்டரின் அன்புத் துணைவியார் திருமதி Leelamani Devarajan அவர்களால் வழங்கப்படுகிறது. 1927 முதல் 2006 வரை வாழ்ந்த தேவராஜன் மாஸ்டர், மலையாளத் திரைப்பட இசை வரலாற்றின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கவிஞர் Vayalar Ramavarma அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்கள், மலையாளத் திரைப்பட இசையின் பொற்காலத்தை உருவாக்கியவை என்றும் கருதப்படுகின்றன. அவரது இசைப் பங்களிப்பிற்காக, கேரள அரசின் உயரிய திரைப்பட விருதான J. C. Daniel Award உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் Gangai Amaran…
Read MoreAuthor: reporter
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘லவ் பைட்’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ‘தாய் கிழவி’ புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ்…
Read Moreஉத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி :
பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது. பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி…
Read MoreZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!
நடிகை சாயாதேவி பேசியதாவது, “முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார். நடிகர் வையாபுரி பேசியதாவது, “இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி. நடிகர் அருள்தாஸ் பேசியதாவது ,…
Read More6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி -2” ! ஆதிராஜன் இயக்கத்தில் மாளவிகா மேனன்!
தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்கியிருந்தார் ஆதிராஜன். அதே படநிறுவனமும் அதே இயக்குநரும் மீண்டும் கைக்கோர்க்கிறார்கள், சிலந்தி – பார்ட் 2 வுக்காக. இப்படம் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் பிரமாண்டமான பட்ஜெட்டில் மிரட்டலான த்ரில்லர் படமாக உருவாகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் சினிமா வில் கலக்கிவரும் மாளவிகா மேனன் மாறுபட்ட கேரக்டரில் நாயகியாக நடிக்கிறார். பல மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இதன் படப்பிடிப்பு கம்போடியா வியட்நாம் நாடுகளிலும் நடைபெற உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா, மற்றும்…
Read Moreசென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார். சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சி காலத்திலேயே சில மாணவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் பெறுவது மிகவும்…
Read Moreசென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்ஷன் கதையாக உருவாகி வரும் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் பெரிய திரையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க,…
Read Moreநாயகனின் ஸ்டைல், புத்திசாலித்தனம், ஆளுமையை கொண்டாடும் “கான் சிட்டி” செகண்ட் சிங்கிள்!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில்…
Read More29 – திரைப்பட விமர்சனம்
கதை… சென்னைக்கு வேலை தேடி வருகிறார் நாயகன் விது.. வந்த இடத்தில் நாயகி ப்ரீத்தியை சந்தித்த பின் காதல் கொள்கிறார்.. இருவரும் நெருக்கமாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களை உணர்ச்சி பூர்வமாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.. நடிகர்கள்… விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. வாழ்க்கையில் எந்த ஒரு கனவும் இல்லாமல் வாழும் நாயகன்.. ஆனால் லட்சியத்தோடு வாழும் நாயகி இவர்களுக்குள் ஏற்படும் காதலை மிகவும் எளிமையாக ஒவ்வொருவரும் ரசிக்கும்படி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர் விது மற்றும் பிரீத்திஅஸ்ராணி.. அயோத்தி படத்தில் கலக்கியதை விட இந்த படத்தில் அதிகப்படியாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார் பிரீத்தி.. கல்லூரி வில்லனாக வருகிறார் மாஸ்டர் மகேந்திரன் கொஞ்சம் காட்சி தான் என்றாலும் மன நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நாயகனின் ரூம்…
Read Moreசந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும்…
Read More