விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. தனித்துவமான இசை மற்றும் பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.இந்தப் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ள நிலையில் அதன் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது. விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், ‘அப்பா குட்டி’ படத்தின் இசையும் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு தியாகம் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் இசை கூடுதல் பலம் சேர்க்கும். மு.மாறன் எழுதி…
Read MoreAuthor: reporter
அம்மாவாக போகும் ஜூலி, சக அம்மாவாகப் போகும் சமந்தா ரூத் பிரபுவுடன் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்குகின்றார்.
‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக, ஜூலி வைல்டு கார்டு போட்டியாளராக நுழைகின்றார். தன்னுடைய உற்சாகமான குணத்தால் அறியப்படும் ஜூலி, இப்போது முற்றிலும் புதிய அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கடினமான சமையல் சவால்கள், குறைந்த நேரத்தில் உணவுகளைத் தயாரிப்பது எனத் தனது சமையல் திறமையை நிரூபிக்க அவர் களமிறங்குகிறார். ஜூலியின் வருகையை இன்னும் சிறப்பாக்கும் விஷயம் ஒன்று இருக்கின்றது. ஜூலி தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல், நிகழ்ச்சியின் நடுவரான சமந்தா ரூத் பிரபுவும் தாய்மையை எதிர்கொள்ளும் இந்தப் புதிய கட்டத்தில் இருக்கிறார்,இருவரும் வாழ்க்கையின் ஒரே மாதிரியான விஷயத்தை கடந்து வருவதால், உணவின் மீதான ஆசைகள், மாறும் சுவைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சின்ன சின்ன மகிழ்ச்சிகள் என இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான உரையாடல்கள் உருவாகலாம், ஆனால் ஒருவர் போட்டியாளர் மற்றொருவர் நடுவர் என்பதால்…
Read Moreஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ” இறப்பின் ரகசியம் ” படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கப் பணிகளை ஸ்ரீமன் மேற்கொள்கிறார். படத்தொகுப்புப் பணிகளை நந்தா மேற்கொள்கிறார். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ். வெப் தொடர் பற்றி இயக்குனர் இமானுவேல் பேசியதாவது…. கலைஞர்கள் அழிந்தாலும் கலைகள் அழிவதில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவிய கலைகளும்,…
Read Moreசெலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!
எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து சமந்தா ரூத் பிரபு கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. சில உணவுகளின் சுவை நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்படியொரு நெகிழ்ச்சியான தருணத்தைச் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார். பள்ளிக்காலத்தில் தனக்கு மிகப்பிடித்த உணவாக பல்லாவரத்தில் இருக்கும் துர்கா ஹோட்டல் தயிர் வடையை குறிப்பிடுகிறார் சமந்தா. பள்ளிப் பருவத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்யுமாறும், அங்கிருந்து நேராகத் துர்கா ஹோட்டலுக்குச் செல்வதாக நினைத்துப் பார்க்குமாறும் சமந்தாவிடம் சொல்லப்படுகிறது தன்னுடைய பள்ளிப் பருவத்தின் எளிமையான, இனிமையான நாட்களை மனக்கண்ணில் மீண்டும் காணும் சமந்தா,…
Read More‘எல்லம்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 5, 2027 அன்று வெளியாகிறது!
தசரா பண்டிகையை முன்னிட்டு ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, ‘பலேகம்’ புகழ் வேணு யெல்தண்டி இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படம் உருவாகி வருகிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘எல்லம்மா’ திரைப்படம் மார்ச் 5, 2027 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
Read Moreஇசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்
அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. *இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap – in சொல்ல, சசிக்குமார்…
Read Moreதமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை, படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியீடு!
தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay) திரைப்படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாகப் பதிப்பித்து வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பொதுவாக, அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற பின்னரோ அல்லது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற பின்னரோ நடைபெறும் நிகழ்வாக இருந்து வருகிறது. இத்தகைய நடைமுறைக்கு மாறாக, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ‘திண்டுக்கல் சாரதி’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவருமான இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சென்சார்’, திரைப்படம் உருவாவதற்கு முன்பே அதன் முழுமையான திரைக்கதையைப் புத்தக வடிவில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், தமிழ்…
Read Moreஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகவுள்ளது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது. Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் இப்படத்தைப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். 1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் தெய்வீக மர்மங்களையும், ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்மம், பரபரப்பு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது. ‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, தமிழில்…
Read Moreநடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!
நடிகர்கள் ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான ‘ராமாயணா’, தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய டிக்கெட் புக்கிங் தளங்களிலும் முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 5 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தைப் பிரம்மாண்டமான திரையில் காண விரும்பும் ரசிகர்கள், ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான படைப்புக் குழுவினரை ஒன்றிணைத்து, காலத்தால் அழியாத ராமாயணக் கதையை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம்…
Read Moreநடிகர்களே… ‘லோன் வாங்கி, கார் வாங்காதீங்க’! —நடிகர் அப்புக்குட்டி
“பண்டமாற்று” குறும்பட விழாவில் பேசிய அப்புக்குட்டி, இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது. அதனால் வரும் பிரச்சினைகளை சொல்கிறது. நானும் எனது காரை அடமானம் வைத்து, அவதிப்பட்டு உள்ளேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் இல்லை. 10 சதவீதம் நடிகர்கள் தான் வசதியாக இருக்கிறார்கள். அதனால் நடிகர்களே, லோன் வாங்கி கார் வாங்காதீங்க! ஒரு மாதம் வருமானம் வரும். பல மாதங்கள் வருமானம் வராது. மாட்டிக்கிவீங்க. எனது அனுபவத்தில் சொல்கிறேன் என்று பேசினார் அப்புக்குட்டி. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ராசி அழகப்பன், நடிகர் அப்புக்குட்டி, நடிகர் காதல் சுகுமார், இயக்குநர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துக் கொண்டனர். புஷ்வானம் டாக்கீஸ் சார்பில், கண்ணன் சாவித்திரி கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் “பண்டமாற்று”. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பாண்டி அருணாசலம், இசை அர்ஜுன்…
Read More