ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கும் இந்தப் படத்தை அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர். வடசென்னை கதைக்களத்தில் ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் அதிரடி மாற்றங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ உருவாகிறது. இந்தப் படத்தில் முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ் மற்றும் ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அஷோக் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். கலை இயக்குநராக ராகவா…
Read MoreAuthor: reporter
ஆரகன் விமர்சனம்.. முதுமையிலும் இளமை
கதை… நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்.. கல்யாணத்திற்கு பிறகு ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்கிறார் நாயகன்.. அதற்காக இருவரும் பணம் சேர்க்க முற்படுகின்றனர். அப்போது ஒரு வீட்டில் நடக்க முடியாமல் அவதிப்படும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ள நாயகி கவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வருகிறது.. இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. அப்படி சம்பாதித்தால் பிசினஸ் செய்யலாம் என எண்ணி அந்த வேலைக்கு செல்கிறார் நாயகி. முதலில் மறுக்கும் நாயகன் பிறகு நாயகியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.. அதன்படி நாயகியும் செல்கிறார்.. அங்கு சென்ற பின்னர் தான் ஸ்ரீரஞ்சனி வீட்டில் ஒரு கண்ணாடி கூட இருக்கக் கூடாது என்கிறார்.. கண்ணாடியில் முகத்தையே கூட பார்க்காமல்.. இப்படியாக சில மாதங்கள் ஆன நிலையில் திடீரென இளமையிலேயே கவிப்பிரியாவுக்கு முதுமை வருகிறது.. தலைமுடி நரைக்கிறது.. வயதான…
Read More