சமுதாயத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் குறும்படத்தை இயக்கும் கோபிநாத் நாராயணமூர்த்தி

தமிழில் ‘தங்க முட்டை’ மற்றும் தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி, ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்தும் சுவாரசியமான குறும்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை பரிந்துரைக்கிறது. ‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடிக்கிறார். நடிகை நளினி, பாப்பி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் உருவாகும் இந்த குறும்படத்திற்காக ‘தங்க முட்டை’ படக்குழுவினருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தி. பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பையும், பிவி பாலாஜி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றன‌ர்.…

Read More

தன் தாயாரின் பெயரில் கல்வி அறக்கட்டளை துவங்கிய நடிகர் உதயா

தன் பிறந்தநாளை முன்னிட்டு தன் தாயாரின் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை துவங்கியுள்ள நடிகர் உதயா அது தொடர்பான செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். தகுதியுள்ள ஏழை குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வியை தடையின்றி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை உருவாக்கி உள்ளோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த போதும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை அணுகியவர்களுக்கும் எனக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக பல குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை…

Read More