துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ‘அருகே அருகே’ ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார். ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை…
Read MoreCategory: சினிமா செய்திகள்
Aata khel Badalnar – Sony மராத்தி & Sony LIV-ல் ‘kon honar crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வரலாற்றுப் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார் Madhuri Dixit
மகாராஷ்டிராவின் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய படலம் துவங்குகிறது. Sony மராத்தி மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் ‘kon honar Crorepati’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, பத்மஸ்ரீ விருது பெற்ற Madhuri dixit இணையவுள்ளார். மராத்தி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற அறிவுசார்ந்த வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Kon Honar Crorepati’ நிகழ்ச்சிக்கு இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்து இருக்கிறது. இந்த புதிய மாற்றம் ‘Aata Khel Badalnar’ என்ற பிரச்சாரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. Madhuri dixit தொகுப்பாளராக, ‘kon honar crorepati’ அறிவின் மூலம் கனவுகளை நினைவாக்கும் ஒரு பயணமாக அமையவுள்ளது. அசாதாரணமான மனிதர்களின் கதைகள் முக்கியத்துவம் பெறும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கேள்வியும் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக இந்த நிகழ்ச்சியாக உருவாகிறது. Aata khel badalnar என்பது ஒரு பிரச்சாரம்…
Read More‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இடம்பெறுவதால் படக்குழுவினர் அதன் தனித்துவமான உலகத்தை உயிர்ப்பிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
Read Moreஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’
அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம், தற்போது அதன் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகி வருகிறது. இந்த அதிரடி நிறைந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்குகிறது. மேலும், தமிழிலும் கிடைக்கவுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு வெற்றிப் படங்களில் ஒன்றை, பார்வையாளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள ‘லெனின்’ திரைப்படத்தில், அகில் அக்கினேனி தனது திரை வாழ்க்கையை வரையறுக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸே இணைந்து நடித்துள்ளார். மேலும், சிவாஜி, சுனில், ஈஸ்வரி ராவ், பிரம்மாஜி, கெட்டப் ஸ்ரீனு, ராம்கி, பிரமோத் பஞ்சு மற்றும் பல…
Read Moreஇந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா
~ கங்கனா ரணாவத், கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா, தியாகமும் வீரமும் நிறைந்த ஊக்கமூட்டும் கதையாக அமைந்துள்ளது. இந்த சுதந்திர தினத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு ~ தேசியம், ஆகஸ்ட் 7, 2026: இந்த சுதந்திர தினத்தில், தைரியம், மனவலிமை மற்றும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 14 அன்று பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தி ZEE5 பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு துணிச்சலான, ஊக்கமூட்டும் மற்றும் கலாச்சார ரீதியாக ஒத்திசைவான கதைகளை வழங்கும் தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, நாட்டை வரையறுக்கும் மதிப்புகளை பிரதிபலிக்கும் அசாதாரண வீரச் செயல்களை வெளிப்படுத்திய பெயரிடப்படாத நாயகர்களின் மீது இந்த தளம் ஒளி பாய்ச்சுகிறது. மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள இப்படம்,…
Read Moreகுட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும்…
Read Moreவிஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’.
இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்- புதிரான மர்மம்- ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது. கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான…
Read Moreஉறுப்பினராக நியமித்த தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து…
Read More‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’ ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வெளிப்படுத்துகிறது. கண்கவர் காட்சிகள், வெடிக்கும் ஆக்ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில்…
Read Moreநடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு
நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான ‘வாரணாசி’ படக்குழு – ‘ருத்ரா’வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார். இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest) விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத – அதிகார தோரணையில் பின்னோக்கி…
Read More
