கதை…
கானா இசை கலைஞர்களின் மூன்று தலைமுறை கதையை சொல்லி இருக்கிறார்.. மூன்று கதையிலும் நாயகன் ஹிப் ஹாப் ஆதி தான்.. கானா இசைக்காக கர்நாடக இசையை எதிர்த்து போராடும் கலைஞர் ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு பயணத்தை மாற்றிக் கொள்கிறார்..
அதன் பிறகு இவரது மகனாக அடுத்த ஆதி.. அவரும் கானா இசைக்காக போராடி தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு பஸ் டிரைவராக மாறி பயணிக்கிறார்..
தன் தந்தையின் லட்சியம் நிறைவேறவில்லை.. தன் லட்சியமும் நிறைவேறவில்லை.. எனவே தன் மகனின் லட்சியம் நிறைவேற போராடுகிறார்..
இந்த மூன்று தலைமுறையின் ஆசை நிறைவேறியதா என்பதுதான் மீதிக்கதை..
நடிகர்கள்…
மூன்று தலைமுறையிலும் நாயகனாக ஆதி வந்தாலும்.. வயதான கேரக்டரில் தாத்தாவாக கருணாஸ்.. அப்பாவாக டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் நடித்துள்ளனர்.. தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உணர்வுபூர்வமாக இருவரும் செய்துள்ளனர்..
மூன்று தலைமுறை ஹீரோயின்களாக.. நாயகன் ஆதிக்கு ஜோடியாக சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன்.. ஒவ்வொருவரும் தனித்தனியாக கலக்கியிருக்கின்றனர்..
ஜென்சி கூட்டத்தில் கெட்டிகா கெட்டியாக தன் கேரக்டரை பிடித்திருக்கிறார்.. கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கியிருக்கிறார்.. பரதநாட்டியம் கற்ற பெண்மணியாக ரம்யா நடிப்பிலும் நடனத்திலும் சிறப்பு.. தன்னம்பிக்கை ஊட்டும் மனைவியாக சைத்ரா நேர்த்தியான நடிப்பு..
ஆதியின் நண்பராக ஹர்சத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு.. பாய்ஸ் படத்தில் வரும் விவேக் கேரக்டர் போல யோகி பாபு கேரக்டர்.. ஆனால் பெரிய தாக்கம் இல்லை..
தொழில்நுட்ப குழு…
படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர்..
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம்.. மூன்று காலகட்டத்திற்கு ஏற்ப கேமராவை வித்தியாசமான கோணங்களில் படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார்..
படத்தில் கிட்டத்தட்ட 14 பாடல்கள்.. இடையிடையே வசனங்கள் வந்து செல்கிறது.. சில பாடல்கள் தனி காட்சியாக வைக்கப்பட்டது.. சில பாடல்கள் கதையுடன் ஒன்றி பயணிக்கிறது..
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என படத்தை கலர்ஃபுல்லாக ஜாலியாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் ஆதி..
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கம் என அனைத்தையும் ஒருவரே செய்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி..
பத்து வருடங்களுக்கு முன்பு மீசையை முறுக்கு படத்தின் முதல் பாகத்தை எடுத்திருந்தார்.. ஆனால் அந்த படத்திற்கும் மீசைய முறுக்கு இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை..
முதல் பாகத்தில் ஹிப் ஹாப் இசையில் தன் சொந்த வாழ்க்கை பயணத்தை.. தன்னுடைய போராட்டங்களை சொன்ன ஆதி இந்த படத்தில் கானா பாடல் கலைஞர்களுக்காக இந்த படத்தை அர்ப்பணித்து இருக்கிறார்..
இசை பல வடிவங்கள் பெறும் ஆனால் அதுவும் ஒரு கலை தான்.. அதற்கும் மக்கள் இருக்கிறார்கள் ரசிக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்.. கர்நாடக இசைக்கு கானா இசை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்பதை மூன்று தலைமுறை போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் வெற்றியாக சொல்லி இருக்கிறார் ஆதி..
