பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு அற்புதமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான ‘அலா வைகுந்தபுரமுலூ’ தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது. திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக…

Read More

‘நேஷனல் க்ரஷ்” ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘மைசா’வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ‘மைசா’ திரைப்படம்- ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பான்-இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று, படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த வீடியோவில், ‘மைசா’‌வின் இருண்ட மற்றும் தீவிரமான உலகத்தைப்பற்றிய ஒரு விறுவிறுப்பான பார்வை இடம்பெறுகிறது. மேலும் இந்த காணொளி, கதாநாயகியின் தாயின் சக்திவாய்ந்த பின்னணிக் குரலுடன் தொடங்குகிறது. அவர் தனது மகளின் மரணத்தை மீறிய துணிச்சலைப் பற்றிப் பேசி, உலகத்தைப்பார்தது “அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள — மைசா” என்று உரக்க வலியுறுத்துகிறார். இந்தக்…

Read More

மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது!!

இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான ‘மார்கழியில் மக்களிசை’ ஆறாவது ஆண்டாக இம்முறை வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ‘மார்கழியில் மக்களிசை’ தமிழ்நாட்டில் இதுவரை நான்கு மாவட்டங்கள், மூன்று மாநிலங்கள் என 12 அரங்குகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் அரங்கேறியிருக்கிறது.  நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப், ஹிப் ஹாப் என ஆறு இசை வகைமையின் கீழ் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். மூவாயிரத்திற்கு அதிகமான தனியிசைக் கலைஞர்கள் இசைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 35 இசைக்குழுக்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 8 இசைக்குழுக்களையும் சேர்த்து இதுவரை 43 இசைக்குழுக்கள் பங்கெடுத்திருக்கிறது. நீலம் பண்பாட்டு மையம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வை ஒருங்கிணைத்துவருகிறது. இம்மண்ணில்…

Read More

ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்ட வித் லவ் ( With Love ) படத்தின் “ஐயோ காதலே”  முதல் சிங்கிள் பாடல்!!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படமான  வித் லவ் ( With Love ) படத்திலிருந்து முதல் சிங்கிளான  “ஐயோ காதலே” ரொமான்ஸ் மெலடி பாடல்  வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்பாடலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தும், ஒரு ஜாலியான, மனதுக்கு நெருக்கமான உணர்வை தரும் இப்பாடல், கேட்டவுடன் அந்த இசைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார். விஜய்நரேன் பாடியுள்ளார். முழுக்க…

Read More

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா ’ படத்தின் பாடலை, கர்நாடக துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார் பெங்களூருவில் வெளியிட்டார் !!

பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார் கலந்துகொண்டு, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவரது பங்கேற்பு விழாவுக்கு தனித்துவமான பெருமையும் மரியாதையும் சேர்த்தது. பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற நடிகர் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘விருஷபா ’ திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும். சமர்ஜித் லங்கேஷ் மற்றும் நயன் சாரிகா நடித்துள்ள இந்தப் புதிய பாடல், இளமையும், காதல்,உணர்வுகளும் நிறைந்த மென்மையான ரொமான்டிக் பாடல். இப்பாடல் வெளியான கணத்திலிருந்தே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார், படத்தின் தலைப்பின் அர்த்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். ‘விருஷபா ’ என்றால் ‘காளை’ என்றும், அது…

Read More

விஜய் தேவரகொண்டா, தில்ராஜு மற்றும் ரவி கிரண் கோலா கூட்டணியில் டிசம்பர் 2026-ல் வெளியாகும் ‘ரவுடி ஜனார்தனா’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது!

மதிப்புமிக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி காரு’ மூலம் பாராட்டுகளைப் பெற்ற ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை, தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இரத்தம் தோய்ந்த உலகத்தை அறிமுகப்படுத்தியதுடன் ‘ரவுடி ஜனார்த்தனா’ என்ற கிளிம்ப்ஸூடன் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. படம் பற்றிய ஆர்வத்தையும் பல கேள்விகளையும் பார்வையாளர்களுக்கு இந்த கிளிம்ப்ஸ் எழுப்புகிறது. புதிய இடம், புதிய பேச்சுவழக்கு, வித்தியாசமான தோற்றம் மற்றும் இதுவரை பார்த்திராத உலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை இந்தப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான நம்பிக்கையை…

Read More

‘கராத்தே பாபு’ டீசர் வெகு விரைவில் வெளியிடப்பட்டு திரைப்படம் விரைவில் உலகெங்கும் ரிலீஸ்

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை குறிக்கும் வகையில், ரவி மோகன் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியில் அவர் பேசும் அரசியல் வசனம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் இறுதி கட்ட…

Read More

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் இந்த விடுமுறை காலத்தில் குடும்ப பொழுதுபோக்கு படமாக வெற்றி பெற்றிருப்பது மட்டுமல்லாது, அதிகளவிலான பார்வையாளர்களையும் திரையரங்கிற்குள் வரவழைத்துள்ளது. பிரம்மாண்டம், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை இந்த படம் பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளது. ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் படமாக புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் அதிக முன்பதிவுகளைப் பெற்ற படங்களில் ஒன்றான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் வெளியான வெள்ளிக்கிழமை முதலே அனைத்து மொழிகளிலும் சிறப்பான திரையரங்க வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உற்சாகத்தோடு பண்டிகை காலங்களில் குடும்பங்கள் இந்தப் படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர். அதிகளவில் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவதோடு பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்தப் படம் பெரும் வெற்றி…

Read More

’மெகா ஸ்டார்’ மம்மூட்டி – இயக்குநர் காலித் ரஹ்மான் – தயாரிப்பாளர் ஷெரீஃப் முஹம்மதுவின் க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் கூட்டணி இணையும் பிரம்மாண்ட பட்ஜெட் படம்

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் ஒரு புத்தம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ‘மெகாஸ்டார்’ மம்மூட்டி நடிக்கிறார், இந்த திரைப்படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்குகிறார். அத்துடன் அகில இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ‘மார்கோ’ மற்றும் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘காட்டாளன் ‘ ஆகிய படங்களைத் தொடர்ந்து க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படமாகும். நியூக்- சுஹாஸ் – ஷர்ஃபு ஆகியோரின் எழுத்தில் தயாராகும் இந்தப் படம், நடிகர் மற்றும் ஒரு பிம்பமாகத் திகழும் ‘மெகா ஸ்டார் ‘ மம்மூட்டிக்கு ஒரு சமர்ப்பணமாக உருவாக்கப்படுகிறது. ‘மெகா ஸ்டார் ‘ மம்மூட்டி – ஒவ்வொரு முறையும் தனது அற்புதமான சினிமா மாற்றங்கள் மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும்போது, அவர் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். அத்துடன் அவர் புதிய…

Read More

‘கராத்தே பாபு’ டீசர் வெகு விரைவில் வெளியிடப்பட்டு திரைப்படம் விரைவில் உலகெங்கும் ரிலீஸ்

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை குறிக்கும் வகையில், ரவி மோகன் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியில் அவர் பேசும் அரசியல் வசனம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் இறுதி கட்ட…

Read More