ஆகஸ்டில் வெளியாகும் நயன்தாரா – கவின் நடிக்கும் ‘ஹாய்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா – நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள.. கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா- விக்னேஷ்…

Read More

‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனைத்து ஏழு எபிசோடுகளும் இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரே நேரத்தில் வெளியாகும்!

சென்னை, ஜூலை 2026: ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’, முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும், அந்த வாரத்திற்கான அனைத்து 7 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும். இதன் மூலம், காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வில்லா வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை ரசிகர்கள் தங்களது வசதிக்கேற்ப தொடர்ச்சியாக கண்டு ரசிக்கலாம். மனதைத் தொடும் கதை சொல்லல், இயல்பான உணர்வுகள் என ‘செகண்ட் லவ்’ கான்செப்ட் முதல் வாரத்திலேயே ரசிகர்களை ஈர்த்துள்ளது. மனம் திறந்த உரையாடல்கள், எதிர்பாராத காதல் தொடக்கங்கள், மற்றும் மனதை உருக்கும் தருணங்கள் என காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடும் பயணத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சி தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.…

Read More

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தை, 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். தனது முந்தைய படைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களத்துடன் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தை ரசிகர்களுக்காக உருவாக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் ‘தட்டுவண்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையும், திறமையான கலைஞர்களின் பங்களிப்பும்…

Read More

நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா – திரைப்பிரபலங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து !!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனர் மற்றும் இயக்குநர் குரு துளசி அவர்களின் மாணவியான P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. J. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான P.U.சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியிடம் பரதநாட்டியம் பயின்று, தனது நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அரங்கேற்ற நிகழ்வை சிறப்பாக நிறைவு செய்தார். இந்நிகழ்விற்கு தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது பெற்ற நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், பரதநாட்டிய உலகின் முன்னணி கலைஞரும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான சாந்தா தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுப்ரஜாவிற்கு ஆசி வழங்கினார். இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆபவாணன், காஜா…

Read More

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘OKUU’-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் 551 முறை தயாரிப்பு கலவையில் மாற்றங்களைச் செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார். பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படும் நிலையில், சாக்ஷி அகர்வால் தனது பெயரை ஒரு தயாரிப்புடன் இணைப்பதை விட, தரமான ஊட்டச்சத்து தயாரிப்பைத் தானே உருவாக்க முடிவு…

Read More

ஜியோஸ்டார் இந்த பண்டிகைக் காலத்தை மேலும் பிரம்மாண்டமாக்குகிறது; இந்தியா முழுவதும் ஆறு பிக்பாஸ் பதிப்புகளை ஒன்றிணைக்கிறது மற்றும் ‘India’s Bigg Reality’ காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது

ஜியோஸ்டார், *ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம்* ஆகிய மொழிகளில் *பிக்பாஸ்* நிகழ்ச்சியின் ஆறு புதிய பதிப்புகளை செப்டம்பர் 2026 முதல் அறிமுகப்படுத்த உள்ளது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமையும். *சல்மான் கான், விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப், மோகன்லால் மற்றும் சௌரவ் கங்குலி* ஆகியோரின் நட்சத்திர வரிசையுடன், இந்த சீசன் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நிகழ்வாக அமையும். இந்த முக்கிய தருணத்தை நினைவுகூரும் வகையில், ஜியோஸ்டார் *‘India’s Bigg Reality’* என்ற, முதல் முறையாக வெளியிடப்படும் காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புத்தகம், *பிக்பாஸ்* நிகழ்ச்சியின் கலாச்சார தாக்கம், பார்வையாளர்களின் ஈடுபாடு மற்றும் வணிக வெற்றிப் பயணத்தை பதிவு செய்கிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும்…

Read More

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த மகத்தான திரைப்பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது. கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வலுவான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் மிகப் பெரிய திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியின் அடையாளமாக ‘அமரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உணர்வுகளையும், உண்மைத்தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’…

Read More

மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே ஒரு மகத்தான பாரம்பரியம்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சிறப்புமிக்க பயணத்தில் மேலும் ஒரு பொற்கால அத்தியாயத்தை பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும், இப்படத்தில் தனது ஆழமான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், சிறப்பு பாராட்டு (Special Mention) விருதையும் பெற்றிருப்பது படக்குழுவினருக்கும், சத்யஜோதி பிலிம்ஸுக்கும் பெருமை சேர்த்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸுக்கு இந்த தேசிய அங்கீகாரம் வெறும் விருதாக மட்டுமல்ல; ஏழு தசாப்தங்களாக, மூன்று தலைமுறைகள் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகள், கலைநயம் மிக்க படைப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய திரைப்படங்களை உருவாக்கி வந்த பாரம்பரியத்திற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். இந்த மகத்தான பயணத்தின் தொடக்கம் 1950-களின் இறுதியில் வீனஸ் டி. கோவிந்தராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட…

Read More

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் And இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

72nd National Film awards 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது

Read More

தேசிய விருது ஜூரியாக கலா மாஸ்டர், இயக்குநர் And இ.வி.கணேஷ்பாபு பங்கேற்பு

72nd National Film awards 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அளவில் சில முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான பிரிவில் (feature film) கலா மாஸ்டர் பங்கேற்றார் Non feature film – குறும்படங்கள்,ஆவணப் படங்கள்,அனிமேஷன் ஆகிய பிரிவுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அவர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டு இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற படைப்புகளுக்கான விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இருந்து பல மொழிகளில் உருவாக்கப்பட்ட படைப்புகளுக்கான தேசிய விருதை பிரம்மாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக திரையுலகில் கொண்டாடப்படுகிறது

Read More