பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.’யூத்’ திரைப்படத்தை முதல் பாடலான ‘முட்ட கலக்கி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘பறந்தனே பெண்ணே’ பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான ‘ஆச புள்ள’ வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது
ஜியோஹாட்ஸ்டார் வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் ” முத்து என்கிற காட்டான் ” வெப் சீரிஸின் சுவாரஸ்யமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் கதைநடையை மேலும் விரிவாக்குகிறது. இதில் பல்வேறு கதாபாத்திரங்களின் அடுக்குகளான விளக்கங்கள் வெளிப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது . முத்துவின் உண்மை முகமும், அவர்…
Read Moreவிஜய் டிவியின் அசத்தலான கலகலப்பான “ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப்” நிகழ்ச்சி
சின்னத்திரை ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் என்றாலே கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்தை இன்னும் இரட்டிப்பாக்கும் வகையில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி ஒரு புதிய கலகலப்பான ரியாலிட்டி கேம் ஷோவை களம் இறக்கியுள்ளது. விஜய் டிவி ஒரு ஷோவை பண்ணாலே அது வேற லெவல் தான். அந்த வரிசையில் ஒரு புத்தம் புதிய கன்ஷெப்ட் தான் “Happy Wife Happy Life” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8, 2026 அன்று பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பெரிய ஹைலைட் என்னவென்றால்.. எப்போதும் எனர்ஜி குறையாமல் பேசும் ரசிகர்களின் ஃபேவரைட் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த ஷோ, தம்பதிகளுக்கு இடையேயான புரிதலை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு வாரமும் மூன்று பிரபல…
Read Moreமிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் படத்தின் டைட்டில் ட்ராக் ‘ஆரி ஆரி’ வெளியானது
சமீபத்தில் வெளியான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரெய்லர் தொடர்ந்து சாதனை படைத்து வருவதோடு, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே, அதில் பின்னணி இசையாக வந்த ‘ஆரி ஆரி’ பாடலை ரசிகர்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். மேலும், இப்பாடலின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த அதிரடியான பாடல் டி-சீரிஸ் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது. துடிப்பான பீட்ஸ், வலிமையான குரல்கள் மற்றும் அதிரடி ராப் வரிகள் அடங்கிய இந்த பாடல், படத்தின் தீவிரமான உலகை பிரதிபலிப்பதோடு, அடுத்த பெரிய வைரல் ஆந்தமாக மாறும் வகையில் ஒரு சிறந்த இசை அனுபவத்தை வழங்குகிறது. ஷாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, அவரே அரேஞ்ச் மற்றும் ப்ரோக்ராமிங் செய்துள்ளார். நவீன இசையுடன் பஞ்சாபி தாக்கத்தை இணைத்து, கேட்போரை ஆட வைக்கும் வகையில் இந்த…
Read Moreபுதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில்…
Read Moreரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் துரந்தர் முதல் பாகம்!
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் படம், துரந்தர் பழிவாங்கல் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக மார்ச் 12 இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் மார்ச் 19 அன்று இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், உலக அளவில் பிளாக்பஸ்டர் ஆன அதன் முதல் பாகம் சர்வதேச அளவில் மீண்டும் திரையிடப்பட உள்ளது. துரந்தர் திரைப்படத்தின் அலையே இன்னும் ஓயவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ள நிலையில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துரந்தர் முதல் பாகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகின்றன. உலகெங்கிலும் சுமார் 500 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. இந்தியாவில் மார்ச் 12 இன்று…
Read Moreவெஞ்சென்ஸ் – விமர்சனம்
ஏசி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.பி.அசோக் குமார் தயாரிக்க, ராகுல் அசோக் இயக்கத்தில் அபர்ணதி நடித்துள்ள பரபரப்பான அரசியல் படம் ‘வெஞ்சென்ஸ்’. கதை… சிறு வயது முதலே தன் பெயர் எப்போது முதன்மையாக இருக்க வேண்டும் தன்னைப் பற்றி பலரும் புகழ வேண்டும் பேச வேண்டும் என விரும்புபவர் அபர்ணதி.. எனவே நன்றாக படித்து மாநில அளவில் முதல் மாணவியாக வருகிறார்.. அதன் பின்னர் அடுத்தடுத்து படித்து பெரிய அளவில் உயர்ந்து மாவட்ட ஆட்சியராக வருகிறார். இவரின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் எப்போதும் இவரது பெயர் பல செய்திகளில் வருகிறது.. அரசியல்வாதிகளை இவரை பார்த்து பயந்து நடுங்குகின்றனர்.. இவர் வளர்ந்து வருவதால் அரசியல் எதிரிகள் உருவாகுகின்றனர்.. இதனால் அடுத்தது என்ன நடந்தது.? அரசியல்வாதிகளை எப்படி இந்த கலெக்டர் சமாளித்தார் என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… அபர்ணதி, காளி வெங்கட்,…
Read Moreஇயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’
ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார். அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை என். பி. ஸ்ரீகாந்த் கவனிக்க கலை இயக்கத்தை வி. சண்முகராஜா மேற்கொள்கிறார். சண்டை பயிற்சியை…
Read More‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படக்குழுவினர் இன்று நடிகை வாழை ஜானகி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தனுஷ் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்தவர். வாழை படத்தில் புகழ் பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகை வாழை ஜானகி பிறந்தநாளை கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடினார். அருகில் விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், ஜெயக்குமார், சிரஞ்சீவி, பிஆர்ஓ கோவிந்தராஜ்.
Read More‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜின் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும். கதையின் தேவையை பொருட்டு படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டன. கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு…
Read More