திரைப்பட இயக்குநர் எஸ். யூ. அருண் குமாருக்கும், ஏ. அஸ்வினி என்பவருக்கும் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று மதுரையிலுள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். யூ. அருண்குமார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கினார். பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘வீர தீர சூரன்’ எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், ஏ. அஸ்வினி என்ற பட்டதாரி பெண்ணிற்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானது. இதனைத் தொடர்ந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘விடாமுயற்சி’ ஷுட்டிங் விபத்தில் நடந்த அந்த விஷயம்.. அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!
அஜர்பைஜான் சாலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான BTS வீடியோ கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சில தருணங்கள் ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ‘விடாமுயற்சி’ படக்குழுவின் அர்ப்பணிப்பையும் உணர்த்தியது. குறிப்பாக, அந்த தருணத்தில் காரை பாதுகாப்பாக ஓட்டிச் சென்ற அஜித்குமார், உடனிருந்த நடிகர் ஆரவுக்கு எந்த ஒரு அடியும் படாமல் பார்த்துக் கொண்டார். நடிகர் ஆரவ் அந்த தருணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “இது நன்கு திட்டமிடப்பட்ட ஷாட்! ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம்.…
Read Moreநடிகர் டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம் ‘ ( R P M )என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ‘தி சவுண்ட் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர்…
Read Moreநானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!
தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைத்தள பதிவில்…
Read Moreடென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”
புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் முயர்ச்சிகளுக்கு பெரும் பாராட்டைத்…
Read Moreவீரப்படை ஆண்ட வீரா வெற்றிக்குப் பிறந்த தீரா மக்களுக்காக வாழ்ந்தாயே மாவீரா!
-“கவிப்பேரரசு” வைரமுத்து மண்ணையும் மானத்தையும் காத்த எங்கள் மாவீரனே! மனிதராக பிறந்தவர் எவராக இருந்தாலும் “படையாண்ட மாவீரா”வில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதி மெல்லிசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் மெட்டமைத்து இசைத்து சகோதரி சைந்தவி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டால் உயிரை உலுக்கி கண்களில் கொப்பளித்த கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோடி நெகிழ்வோடு நெஞ்சினை நனைக்கும். அறம் சுமந்த உனது வாழ்வியலை இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு இச்சமூகம் பேசிப் பேசி உனது புகழ் பாடும். எங்கள் படையாண்ட மாவீரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பேரன்போடு, வ. கௌதமன் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பி.எஸ்.எஸ்.ராஜா நிர்மல் இ.குரலமுதன் யு.எம்.உமாதேவன் கே.பாஸ்கர் கு.பரமேஸ்வரி மற்றும் விகே புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பு குழுமம்.
Read Moreசர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘பறந்து போ’ படம்!!
மிர்ச்சி சிவா நடிப்பில், கலக்கல் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம், ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத…
Read Moreஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
இசையமைப்பாளர் – பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ‘ இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி…
Read Moreநடிகர் அசோக் செல்வன் நடிப்பில், “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது. ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ்,…
Read More“ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு””
ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் . நட்சத்திர பட்டாளம் மற்றும் Pan – India விவரங்கள் : பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
Read More
