இந்தியாவின், இந்த ஆண்டின் மிகப் பெரிய படத்தின் எதிர்பார்ப்புமிக்க பாடல் – பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தின் “பைரவா ஆன்தம்” மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பெரும் காத்திருப்பிற்கு பிறகு “கல்கி 2898 கி.பி.” படத்திலிருந்து, தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, “பைரவா ஆன்தம்” பாடலை வெளியிட்டுள்ளனர். உலகளாவிய பிரபலங்களாக திகழும் பிரபாஸ் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் ஆகியோர் இணைந்து கலக்கும் இந்தப் பாடல், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்கி 2898 கிபி திரைப்படம், திரையுலகின் மாயாஜாலம் எனலாம், இது இந்திய நாட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், காமிக்-கான் சான் டியாகோவில் முத்திரை பதித்த முதல் இந்தியத் திரைப்படமாகும், இது அனிமேஷன் முறையில் முன்னுரை வீடியோ தொகுப்பு கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் மற்றும் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பரின் புதிய திரைப்படம் “செளகிதார்”
‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு வண்ண எழுத்துகளில் படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி – இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பாவின் ஆறாவது படைப்பான ‘சௌகிதார்’ படத்தின் தலைப்பை வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சௌகிதார்’ – ஒரு பன்மொழி திரைப்படம். கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகிறது. ‘சௌகிதார்’ எனும் தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா தன்னுடைய ஒவ்வொரு…
Read Moreராமராஜன் திரையரங்குகளுக்கு நேரிலேயே சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்
எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என செல்வாக்குடன் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்ததால் வெள்ளி விழா நாயகன் என்றும் அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சமீபத்தில் வெளியான ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார். ‘சாமானியன்’ மூலமாக இவரை மீண்டும் அழைத்து வந்த பெருமையை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் V.மதியழகனும் படத்தின் இயக்குநர் R. ராகேஷும் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல ராமராஜனின் படங்களில் வெற்றிக்கு தூணாக இருந்த இசைஞானி இளையராஜாவையே இந்த படத்திற்கு இசையமைக்கவும் வைத்துள்ளனர். இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கருத்தை சொல்லும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளதால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதெல்லாம் வெளியான இரண்டு வாரங்களுக்குள்ளேயே…
Read Moreஜூன் 21ல் குணா திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது
சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே. குணா திரைப்படம்…
Read Moreஆத்வி சேஷு மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இணைந்த ‘டகோயிட் திரைப்படம்
ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின் பான்-இந்தியா அதிரடித் திரைப்படமான ‘டகோயிட்’ படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார் !! ஆத்வி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் ஆத்வி சேஷுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்து, இனிமையான ஷீட்டிங் அனுபவம் எனக்குறிப்பிட்டுள்ளார். இரண்டு முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டி, தொடர்ச்சியான கொள்ளைகளை ஒன்றாக இணைந்து செய்கிறார்கள். இதனை பரபரப்பான திருப்பங்களுடன் சொல்லும் திரைப்படம் தான் ‘டகோயிட்’. ஆத்வி சேஷின் ‘க்ஷணம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ உள்ளிட்ட பல தெலுங்கு…
Read More”தோனிமா” திரைப்படத்தில் பொறுப்பற்ற கணவராக காளி வெங்கட்
சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில், இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் – ரோஷ்னி பிரகாஷ் நடித்துள்ள படம் ’தோனிமா’! சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்த அனுபவங்களை இந்தப் படம் திரையில் காட்ட இருக்கிறது. தற்போது இயக்குநர் பாலாவின் ’வணங்கான்’ படத்தில் நடித்து வரும் நடிகை ரோஷ்னி பிரகாஷ், இந்தப் படத்தில் தனது குடும்பத்தை விடாமுயற்சியுடன் போராடி முன்னெடுத்து செல்லும் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக வரும் கோடி கதாபாத்திரம் குடும்பத்தின் மீது பொறுப்பற்ற ஒருவர். இதில் நடிகர் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த…
Read Moreஇனிதே நடந்து முடிந்த உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம்
நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது. விஷால் கார்த்தி துருவா சர்ஜா ஜெகபதி பாபு சமுத்திரகனி K.S. ரவிக்குமார் G.K.ரெட்டி S.R. பிரபு K.E. ஞானவேல்ராஜா விஜய குமார் செந்தில் நாஞ்சில் சம்பத் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
Read Moreதிருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்த கீர்த்தி சாந்தனு
சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது. சின்னத்திரை புகழ் கீர்த்தி சாந்தனு இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தார். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், ஆடை, அணிகலன்கள், வீட்டுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், பேக்ஸ், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு அனைவரும் சுற்றிப்பார்ப்பதுடன் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்யும் வகையில் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த கண்காட்சி இருக்கும். இந்த கண்காட்சியினை திறந்து வைத்த கீர்த்தி சாந்தனு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது… இந்த அருமையான கண்காட்சியினை திறந்து வைத்ததில் மகிழ்கிறேன். வட இந்தியா சென்று தேடித்தேடி வாங்கும் பொருட்களை, இங்கு நீங்கள் எளிமையாக வாங்கலாம். சுற்றுலா…
Read Moreஹாட் ஸ்டாரில் ஸ்டீரிமிங் ஆக இருக்கும் அரண்மணை – 4
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் “அரண்மனை 4” திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார். அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, இது சரவணன் என்ற வக்கீலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சரவணன் தன் சகோதரியும் அவள் கணவனும்…
Read Moreதளபதி பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி ரீ-ரிலிஸ்
கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் ‘தளபதி’விஜய்,அசின்,வடிவேலு,நாசர்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி-14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. 2005-இல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. இத்திரைப்படம் அப்போதே ‘ஷிப்டிங்’ எனப்படும் மறுவெளியீட்டில் வெளியாகி 100-நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள்…
Read More
