கதை…
ஒரு வீட்டில் பாக்யராஜ் மற்றும் அந்த வீட்டில் குடியிருக்கும் அஜய் கார்த்திக் இருவரும் இறந்து கிடக்கின்றனர்.. அங்கு விசாரணைக்காக செல்கிறார் காவல்துறை அதிகாரி நட்டி நடராஜ்.. போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்க திடீரென அஜய் கார்த்திக் எழுந்து விடுகிறார்..
இதன் பின்னர் பிளாஷ்பேக் படம் நகர்கிறது.. பாக்யராஜ் வீட்டில் மூன்று இளைஞர்கள் வந்து தங்க ஒரு கட்டத்தில் மூவரும் தீ வைத்து இறந்து விடுகின்றனர்..
பேய் வீடு என்று அழைக்கப்படும் அந்த வீட்டிற்கு யாருமே வாடகைக்கு வர தயங்குகிறார்கள்… இந்த சூழ்நிலையில் அந்த வீட்டிற்கு சில வருடங்களுக்குப் பிறகு வாடகைக்கு வருகிறார் அஜய் கார்த்திக்..
அப்போது சில அமானுஷ்யங்கள் நடக்கிறது அது என்ன? போலீஸ் நட்டி விசாரணையில் என்ன தெரிய வந்தது.? என்பதெல்லாம் மீதிக்கதை
நடிகர்கள்…
நாயகன் அஜய் கார்த்திக்.. இவர் பரத் நடித்த காளிதாஸ் படத்தில் நடித்தவர்.. இந்த டார்க் படத்தில் பயம் பதட்டம் என வெரட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பேய் அறைந்த முகம் என சொல்வது போல பயத்தை முகத்தில் காட்டியிருக்கிறார்.
ஆனால் ஒரு வீட்டில் பேய் இருக்கும் என்று தெரிந்த பின்னும் அவர் அந்த வீட்டிலேயே இருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கு சரியான விளக்கம் இல்லை..
மறைந்த இயக்குனர் பாக்யராஜின் கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய பலம்… ஆனால் இந்த படத்திலும் அவர் இறப்பது போலவே முதல் காட்சி காட்டப்பட்டுள்ளது நம்மை சோகத்தில் ஆழ்த்தும்..
அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் தங்கள் கேரக்டருக்கு நடிப்பில் நியாயம் சேர்த்துள்ளனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி.. ஒரு வீடு ஒரு ஆபீஸ் இரண்டிலும் அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து படம் ஆக்கி இருக்கிறார்.. காட்சி கூட பயத்தை உண்டாக்கும் வகையில் இருக்கிறது..
கலை இயக்குனரும் அவரது பணிய சிறப்பாக செய்திருக்கிறார்
மனு ரமேஷின் பின்னணி இசை.. திகில் பட உணர்வை ஒவ்வொரு ஃபிரேமிலும் காட்டுகிறது.. கதை ஓட்டத்துடன் நகர்கிறது பாடல்கள் என்பதால் கவனிக்க வைக்கிறது..
டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இந்த டார்க் படத்தை தயாரித்திருக்கிறார்
இயக்குனர் கல்யாண் கே.ஜெகன்,..
மற்ற பேய் படங்களை காட்டிலும் இந்த டார்க் படம் வித்யாசமான திகில் அனுபவத்தை கொடுக்கிறது… ஆனாலும் படத்தின் சில புரியாத காட்சிகளுக்கு இன்னும் விளக்கம் கொடுத்திருக்கலாம்.. இது எதனால் நடக்கிறது அதை எதனால் நடக்கிறது என்பதற்கு இயக்குனரிடம் விடை இல்லை..

