குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், என் நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஆர். மாதவன், நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகிய முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில், சோஷியல் நையாண்டி டிராமாவாக உருவாகியுள்ளது ‘ஹிசாப் பராபர்’
முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் “சைத்தான்” பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.…
Read Moreரசிகர்களுக்கு சப்ரைஸ் தர்ந்த ஸ்ருதிஹாசன் – பாங்காக் உள்ளூர் இசைக் குழுவுடன் அசத்திய ஸ்ருதி ஹாசன்!
உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார். அவருடைய இந்த…
Read Moreநடிகர் சங்கம் செய்த மாபெரும் உதவிக்கு நன்றி தெரிவித்த குழந்தைகள் அறக்கட்டளை!
HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு கல்வி மற்றும் அனைத்து உதவிகளையும் வழங்கி ஒப்பற்ற பணிகளை செய்து வருகிறது, சென்னை கொளத்தூரை சேர்ந்த “இந்தியா பாசிட்டிவ் நெட்ஒர்க் அறக்கட்டளை”. HIV நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்காக தேவைப்படும் கட்டிடம் கட்டும் பணிகளுக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னால் ௹10 லட்சம் நிதி வழங்கியது. அந்த கட்டிடம் கட்டி இப்பொழுது திறப்பு விழா காண இருக்கிறது. இது சார்பாக இன்று, அறக்கட்டளையின் தலைவி Dr.நூரி, நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களை சங்க அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். காப்பகம் கட்டிடம் கட்ட, முதல் நன்கொடையாக வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் காப்பகத் திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார்.
Read Moreஅடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது.
விரைவில் வெளியாகவிருக்கும் ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தை, அதன் மையத்தை, நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான பாடலாக இந்த டைட்டில் டிராக் உருவாகியுள்ளது. ‘ஆஃபீஸ் பாட்டு’. கேட்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்து, அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. பெப்பி ஜானரில் உருவாகியுள்ள இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையில், முகேஷ் பாடியுள்ளார். நகைச்சுவையுடன் கூடிய கலகலப்பான இந்த சீரிஸை, கபீஸ் இயக்கியுள்ளார், ஜெகன்நாத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்ற சீரிஸான ‘ஹார்ட் பீட்’ இல் தங்கள் நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள இருவர் இடம்பெற்றுள்ளனர். ‘ஹார்ட் பீட்’ சீரிஸில் நடித்த நடிகர்கள் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் இந்த சீரிஸில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், “பிராங்க்ஸ்டர்”…
Read More“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” – நடிகர் மணிகண்டன்!
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயரும் நடிகரின் பெயர் முன்னிலையில் சேர்வது இயல்பான விஷயம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறது. ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான ‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் மணிகண்டன் கூறும்போது, “நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இருந்தே நான் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியின் ரசிகன். எண்டர்டெயின்மெண்ட்டில் அவர் புதிய அலையை உருவாக்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. ’குட்நைட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். ராஜேஷ்வருக்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் திறன் உள்ளது. ’குடும்பஸ்தன்’ படம் வெளியான பிறகு நிச்சயம் ராஜேஷ்வர் அனைவராலும் விரும்பப்படும் இயக்குநராக இருப்பார்” என்றார். ’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களில் தான்…
Read Moreமார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகும் சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்…
Read MoreUK கிரியேஷன்ஸ் முதல் திரைப்படம் “ஃபேமிலி படம்” வெற்றிகரமாக OTT தளங்களில் ரிலீஸ்!
“UK கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான **“ஃபேமிலி படம்”**, கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு வெறும் 28 நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைந்து, டிசம்பர் மாதத்தில் தியேட்டரில் வெற்றிகரமாக வெளியானது. திரையரங்குகளில் மக்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த அன்பும் ஆதரவினாலும், திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, **“ஃபேமிலி படம்”** கடந்த **ஜனவரி 15ஆம் தேதி, பொங்கல் நாளில்** பிரபல OTT தளங்களான **“AHA OTT”, “TENTKOTTA OTT”** மற்றும் **“SIMPLY SOUTH OTT”** தளங்களில் வெளியிடப்பட்டது. வெளியீட்டுக்குப் பிறகு தமிழக மக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்களின் அன்பும் பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருவதற்கு தயாரிப்பு நிறுவனம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும், குறுகிய காலத்திலும், சிறிய முதலீட்டிலும், வெற்றிகரமாக தயாரித்து வெளியிட உதவிய இயக்குநர், நடிகர்கள், டெக்னீசியன்கள் மற்றும்…
Read More’குடும்பஸ்தன்’ திரைப்படம் உங்களை சிரிக்க வைத்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும்” இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி!
’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டனின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘குடும்பஸ்தன்’ உள்ளது. இந்தப் படம் ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பகிர்ந்து கொண்டார். “’குடும்பஸ்தன்’ என்னுடைய சொந்த அனுபத்தில் இருந்து உருவான கதை. பின்னர், நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் கூடிய ஆனந்தமான அனுபவம். இந்தக் கதையில் நம் கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் காட்டியிருக்கிறோம். நம் பக்கத்து வீட்டுப் பையன் போலவே…
Read Moreஇன்று பிறந்தநாள் கொண்டாடும் காமெடி கிங் சந்தானம் – ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது
சந்தானம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பார்வை சந்தானத்தின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் முதல் பார்வை உள்ளது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், ‘டிடி நெக்ஸ்ட் லெவெல்’ திரைப்படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், “‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன்…
Read More
