ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர்…

Read More

தனது மகளின் திருமண அழைப்பிதழை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் கொடுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்து வருகிறார் எல்.கே. சுதீஷ் MP

தேமுதிகவின் பொருளாளரும், ராஜ்சபா எம் பி யும், திரைப்பட தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷ் MP மற்றும் பூர்ண ஜோதி சுதீஷ் தம்பதிகளின் மூத்த மகள் டாக்டர். ஜானு ஸ்ரீ சுதீஷ்க்கும் , ஓசூர் சேர்ந்த தொழிலதிபர் துட்டுகுறி ரவிக்குமார் மற்றும் ராதாரவிக்குமார் ஆகியோரின் மகனான அகில் ரவிக்குமாருக்கும் வரும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் ஞாயிறு காலை 8.30 am மணி முதல் 10 am மணி வரை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது.. நவம்பர் 21ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது  

Read More

மூன்று மொழிகளில் OTT சீரிஸ்கள்… அடுத்ததாகத் திரைப்படத் தயாரிப்பு! திரைத்துறையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!

விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்குத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் முக்கிய OTT தளங்களுடன் இணைந்து சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல படைப்புகளை உருவாக்கும் வகையில் தனது குழுவையும் விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஹன்சா என்டர்டெயின்மென்ட் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், “பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் என்பது படைப்பாற்றல், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைவதில்…

Read More

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. தனித்துவமான இசை மற்றும் பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.இந்தப் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ள நிலையில் அதன் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது. விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், ‘அப்பா குட்டி’ படத்தின் இசையும் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு தியாகம் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் இசை கூடுதல் பலம் சேர்க்கும். மு.மாறன் எழுதி…

Read More

செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில், தனக்குப் பிரியமான உணவான துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையின் சுவை மூலம் பள்ளிப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்து சமந்தா ரூத் பிரபு கண் கலங்கியது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. சில உணவுகளின் சுவை நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும். அப்படியொரு நெகிழ்ச்சியான தருணத்தைச் செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார். பள்ளிக்காலத்தில் தனக்கு மிகப்பிடித்த உணவாக பல்லாவரத்தில் இருக்கும் துர்கா ஹோட்டல் தயிர் வடையை குறிப்பிடுகிறார் சமந்தா. பள்ளிப் பருவத்திற்குத் திரும்பிச் செல்வதாகக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்யுமாறும், அங்கிருந்து நேராகத் துர்கா ஹோட்டலுக்குச் செல்வதாக நினைத்துப் பார்க்குமாறும் சமந்தாவிடம் சொல்லப்படுகிறது தன்னுடைய பள்ளிப் பருவத்தின் எளிமையான, இனிமையான நாட்களை மனக்கண்ணில் மீண்டும் காணும் சமந்தா,…

Read More

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை, படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாக வெளியீடு!

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay) திரைப்படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாகப் பதிப்பித்து வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவது என்பது பொதுவாக, அத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற பின்னரோ அல்லது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்ற பின்னரோ நடைபெறும் நிகழ்வாக இருந்து வருகிறது. இத்தகைய நடைமுறைக்கு மாறாக, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’, ‘ஆதார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ‘திண்டுக்கல் சாரதி’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவருமான இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சென்சார்’, திரைப்படம் உருவாவதற்கு முன்பே அதன் முழுமையான திரைக்கதையைப் புத்தக வடிவில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், தமிழ்…

Read More

ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!

காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகவுள்ளது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது. Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ள இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் இப்படத்தைப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். 1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் தெய்வீக மர்மங்களையும், ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்மம், பரபரப்பு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது. ‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, தமிழில்…

Read More

நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

நடிகர்கள் ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான ‘ராமாயணா’, தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முக்கிய டிக்கெட் புக்கிங் தளங்களிலும் முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 5 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தைப் பிரம்மாண்டமான திரையில் காண விரும்பும் ரசிகர்கள், ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான படைப்புக் குழுவினரை ஒன்றிணைத்து, காலத்தால் அழியாத ராமாயணக் கதையை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம்…

Read More

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திகிலூட்டும் ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் ‘418’!

பிரசாந்த் நீல் வழங்க, ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘418’ திரைப்படம், அக்டோபர் 23 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் நடித்துள்ளனர். பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழ் ரசிகர்களுடனான தனது தொடர்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. வலுவான கதைக்களம், சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் திரையரங்குகளில் ரசிக்கக்கூடிய அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்நிறுவனம், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில்,…

Read More