ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது !! ‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம்.
முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவக்கிவைத்த விக்ராந்த் – யோகிபாபு நடிக்கும் புதிய படம். BIG BANG CINEMAS என்ற பட நிறுவனம் தயாரிப்பில் தா,வில் அம்பு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார். விக்ராந்த் – யோகிபாபு இணைந்து நடிக்கிறார்கள். பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடிக்கிறார், மற்றும் இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார். கலை இயக்கம் – ஜெய சந்திரன், ஸ்டண்ட் இயக்குனராக ஃபயர்…
Read Moreசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’.
தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து.இவர் நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார். ‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது.இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர்…
Read More“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.…
Read Moreஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி…
Read Moreமோகன்லாலின் அதிரடியான “மலைக்கோட்டை வாலிபன்” டீசர் வெளியானது !!
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு சிறு துளி போதும், ரசிகர்களுக்கு உற்சாகத்தில் கொந்தளிக்க, தற்போது வெளியாகியுள்ள டீசர், அந்த விருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. புகழ்மிகு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படம் வெளிவருகிறது. ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். நடிகர் மோகன்லால் கூறுகையில், “படைப்பாளி லிஜோ ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார், அதன் ஒரு துளியை இந்த டீசரில் பார்வையாளர்கள் பார்க்க முடியும்.” என்றார். ‘மலைக்கோட்டை வாலிபன்’ யூட்லீ நிறுவனம்…
Read Moreராக்கிங் ஸ்டார் யாஷின் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” !!
ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது. தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல யூகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அது அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பை…
Read Moreதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு இயக்குநர் அமீரின் மடல்
வணக்கம். நான் இயக்குனர் அமீர்.. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல்.. சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது “பருத்திவீரன்” தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, திரு.சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும், “பருத்திவீரன்”…
Read Moreஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநர் என சாதனை படைத்த ”அட்லி”
பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி. தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு,…
Read Moreமிக்ஜம் புயலால் பாதித்த தங்கள் குடியிருப்புவாசிகளுக்கு நிவாரண உதவி அளித்த சின்னத்திரை நடிகர் பாலா
தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.…
Read More
