. “கிராவனின் உண்மை முகம்: ஜே.சி. சன்டோரின் ‘ஆர்’ ரேட்டட் படத்தால் மிகச்சிறந்த கதைக்களம்”

“கிராவனின் பயணத்தின் கதையை நேர்மையாகச் சொல்ல இதுவே ஒரே வழி.” – ‘கிராவன் தி ஹண்டர்’ ஏன் ‘ஆர்’ என மதிப்பிடப்பட்டது என்பது குறித்து ஜே.சி. சன்டோர்! மிகவும் எதிர்பார்க்கப்படும் ’கிராவன் தி ஹண்டர்’ இன்னும் 2 வாரங்களுக்குள் அதாவது 2025 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சோனியின் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றான ஸ்பைடர் மேனின் மிகவும் அச்சுறுத்தும் எதிரிகளில் ஒருவரான கிராவனுடன், ’ஆர்’ ரேட்டட் ஆக்ஷன்-பேக் என்டர்டெய்னர் படமாக வெளியாகிறது. படத்திற்கு ‘ஆர்’ ரேட்டட் சரியானது என்றும் இதன் மூலம் கிராவனைப் பற்றி இன்னும் சரியான வழியில் கதை சொல்ல முடிந்தது என்றும் இயக்குநர் ஜே.சி. சன்டோர் தெரிவித்துள்ளார். கிராவனின் கதையை அழுத்தமான, நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக சன்டோர் எந்த சமரசமும் இல்லாமல் படமாக்கியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பது,…

Read More

சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார்.   இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் திரு. பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டனர்.   சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர்…

Read More

பூமிகா சாவ்லா – யோகி பாபு – கே எஸ் ரவிக்குமார் இணைந்து நடித்துள்ள ” ஸ்கூல் “

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்திருக்கும் படம் ” ஸ்கூல் “ இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஸ்கூல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ். எடிட்டிங் : ராகவ் அர்ஸ் கலை : ஶ்ரீதர் ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் இணை தயாரிப்பு : K. மஞ்சு தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் R.K.…

Read More

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது!!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் – பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ்,…

Read More

பட முன் வெளியீட்டு நிகழ்வில், மாஸ்டர் & கேம் சேஞ்சர் இணைந்து தோன்றவுள்ளனர்

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. “கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக்…

Read More

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’*

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்…

Read More

வெளியானது சியான் 63 பட அறிவிப்பு!!

எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம். இந்த திரைப்படத்தை மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது. உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம். நன்றியுடன், அருண் விஸ்வா சாந்தி டாக்கீஸ்

Read More

*’குளோபல் ஸ்டார்’ ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்*

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி – கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘எஸ் ஒய் ஜி’ (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் (‘விருபாஷா ‘ மற்றும் ‘BRO ‘ ) இரண்டு வித்தியாசமான வேடங்களில் தோன்றினார். அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், அவருடைய பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் லட்சிய படைப்பான #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ…

Read More

ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை நுரையீரல் உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது!

மருத்துவ உலகில் ஒரு மைல்கல்: ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் உள்ள குழு, இந்தியாவில் உள்ள மிகச் சில நுரையீரல் தமனி நோயறிதல் வழக்குகளில் ஒன்றைக் குறிக்கும் வகையில், ஒரு முக்கிய செயல்முறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 35 வயதான ஒரு பெண் கடுமையான நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலது இதய செயலிழப்புடன் இருந்தார். அவரது நுரையீரல் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் பல மருந்துகள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர்களது சராசரி நுரையீரல் தமனி அழுத்தம் 85mmHg ஆக அதிகமாக இருந்தது. இதனால் அவர்களது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. ஒரு விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர்களுக்கு இடியோபாடிக் நுரையீரல் உயர் இத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையை, ஒரு பயனுள்ள மருத்துவ சிகிச்சை இல்லாத நிலை என்றே கூறலாம். ஃபிராண்டியர் லைஃப்லைன் மருத்துவ…

Read More

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது !

Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ” பரோஸ்” , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸி கலந்து, அனைவரும் ரசிக்கும் வகையில், பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன்லால். மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இதுவரையிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரை வாழ்க்கையில் முதன்முறையாக இயக்கியுள்ள படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர், மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28…

Read More