தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொரோனா காலக்கட்டத்தில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லன் கதாபாத்திரம் (பவானி) மகேந்திரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள் என கதையும், நல்ல கதாபாத்திரமும் போதும் என்ற வகையில், திரை பயணத்தை மாற்றியுள்ளார். இதுதவிர, சமீப காலங்களில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய அளவில் மற்ற மொழி திரைப்படங்களிலும் மகேந்திரன் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் “நீலகண்டா” திரைப்படம் தெலுங்கு, தமிழ்,…
Read MoreCategory: சினிமா செய்திகள்
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 அன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது
சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்ய உள்ளார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன. அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர் திரு ஆர்.…
Read Moreமுழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கதை ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” பிப்ரவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ் தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” Sweety Naughty Crazy ” ” ஸ்வீட்டி நாட்டி கிரேசி ” என்று இளமை ததும்பும் கலகலப்பான பெயரை வைத்துள்ளனர். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜசேகர்.G இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான த்ரிகுண் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமைய்யா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.…
Read More‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
எங்கள் திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை அடிப்படையில் காவல் துறையை மையப்படுத்திய கதை. இதில் பயன்படுத்தப்படும் ’பண்டட்’ என்ற சொல் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு வழக்கத்தில் உள்ள பெயர் மட்டுமே. இந்தக் கதை முழுவதுமே தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் மற்றும் அவர் எடுக்கும் தேர்வுகளை மையமாகக் கொண்டது. எந்தவொரு சாதியையோ, மதத்தையோ அல்லது சமூகத்தையோ பிரதிபலிப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இந்தக் கதை உருவாக்கப்படவில்லை. ஒரு கதை சொல்லியாக மிகுந்த பொறுப்புணர்வோடு என்னுடைய கதைகளை அணுகுகிறேன். என் படங்களின் மூலம் நான் சொல்லும் கதைகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் விதமாகவும் அவர்களை மரியாதையோடு நடத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதற்கு முன்பு நான் இயக்கிய மற்ற படங்களைப் போலவே, இந்தத் திரைப்படமும் பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் தலைப்பு…
Read Moreநடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ’லெகஸி’ களத்தையும் அதன் குழுவினரையும் 2026ஆம் ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ்!
வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்க்ஸ்டரான பெரியவர் தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும் குறிப்பாக தனது பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க வருகிறார். ‘லெகஸி’ அணியினர் பகிர்ந்து கொண்டதாவது, ”’லெகஸி’ எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி மற்றும் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களை எங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக உணர்ந்து நடித்தோம். குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட இந்தக் கதையில், விட்டு சென்ற பாரம்பரியத்தின் மரபு தனது எதிர்காலத்திற்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை இந்த கதை பேசும். இந்தக் கதையை படமாக்க பிரம்மாண்டமும் கூட்டு முயற்சியும் அவசியமாக இருந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்து இந்த பயணத்தை சாத்தியமாக்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு நன்றி. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள ‘லெகஸி’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மாண்டமாக சென்றடையும் என்பதை…
Read Moreதூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்க மோதிரம் பரிசளித்து கௌரவித்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர்
சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா. தூய்மை பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி தி.நகரில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கே கேட்பாரற்று சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை அடங்கிய பையை கண்டதும் அவற்றை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நகைக்கு உரியவரிடம் அந்த நகையும் பத்திரமாக சேர்க்கப்பட்டது. இந்த நிகழ்வை தொடர்ந்து தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் பத்மாவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை தனது இல்லத்திற்கே அழைத்து அவரை பாராட்டியதுடன் தங்க சங்கிலி அணிவித்து அவரை கௌரவித்தார். இந்த நிலையில் தற்போது கடல் தாண்டி பணியாளர் பத்மாவின் நேர்மைக்கான…
Read Moreரசிகர்களுக்கு பிடித்த வகையிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து தரமான படங்கள் தயாரிப்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய நிறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்படியான நடிகர்களை திரையில் கொண்டு வருவது ஆகியவற்றோடு. சமூகத்தை பிரதிபலிக்கும் நல்ல கதைகளை திரைக்கு கொண்டு வருவதையும் முன்னிலைப்படுத்தி ரெளடி பிக்சர்ஸ் இயங்கி வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற கூழாங்கல் (Pebbles) திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அதே ஆண்டில் இந்த திரைப்படத்தில் நடித்த செல்லபாண்டி. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார். படத்தின் வலுவான உணர்வுகளையும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமலும் இந்தக் கதையை…
Read MoreZEE5 தளத்தில், பிளாக்பஸ்டர் பொலிடிகல் டிராமா ‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது !!
இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான “பராசக்தி” திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது. 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன்…
Read More45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கிய பார்த்திபன்
பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, சமீபத்தில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் அவை சேர உதவி புரிந்தார். பத்மாவை தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அரசு பத்மாவை கௌரவிக்கும் நோக்கில் தபால் தலையை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை அவரது இல்லத்திற்கு வரவழைத்து தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். இந்நிலையில் புதுமைகளின் புகலிடமாக விளங்கும் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு அழைத்து சென்று கௌரவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் விருந்தினராக நானும் சிறப்பு விருந்தினராக பத்மா அவர்களும் கலந்து கொண்டால் என்ன என்று…
Read Moreலெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது!!
‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள R.S. துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதை குறித்து விவரித்த படக்குழுவினர், “நிழல் உலகத்திற்கும் காவல் துறைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் ஒரு சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எவ்வாறு காப்பாற்றிக் கொண்டு தப்பிக்கிறான் என்பதே லீடர்,” என்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று சென்னையில் நிறைவுற்றது. மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும். ‘லீடர்’ படத்தில்…
Read More