லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். சிரிப்பு, மகிழ்ச்சி என நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை…
Read MoreCategory: சினிமா செய்திகள்
என் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய “காகிதமலர்” என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் “Asian Future” பிரிவில் ‘World Premiere’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது…
Read Moreநம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜேசன் சஞ்சய பகிர்ந்து கொண்டதாவது, ”’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அறிமுக இயக்குநராக என் மீது…
Read Moreடோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!
நடிகர் சனந்த்தின் திரைப்பயணம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அவரது திறமை முழுமையாக வெளிப்படாமல் போன வலிமிகுந்த காலகட்டமும் இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பின் மூலம் உச்சத்தைத் தொட்டு சனந்த் மிளிர்வது, அவருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘டோரதி’ படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் சனந்த் தோன்றியதால், அவர் ஒரு கிராமத்து முரட்டு இளைஞராக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. ஆனால், சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த சனந்த், தற்போது தனது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பு எனப் பலரும் பாராட்டும் ஒரு கதாபாத்திரத்தைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து…
Read Moreநகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.
நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது. இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு. கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை…
Read Moreநடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி!
அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார். அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும் லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும்…
Read Moreடிசம்பரில் வெளியாகும் மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan)
பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) – நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios ) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை ‘மக்கள் காவலன்’ படத்தின் மைய…
Read Moreஎதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல், பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்மனுதாரர்கள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவான ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தைத் தழுவி…
Read Moreஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !
தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோகத்தினை முன்னணியில் உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘ஹைக்கூ’ படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையில் உள்ள பரஸ்பர நம்பிக்கையையும் இது காட்டுகிறது. திரையரங்க விநியோகத்தில் முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வணிக ரீதியாக நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தை இந்நிறுவனம் விநியோகம் செய்வது படம் மீதான எதிர்பார்ப்பை…
Read Moreபா.ரஞ்சித் பார்த்து, பாராட்டிய ‘யானைமரம்’!
ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘யானைமரம்’ படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டினார் பா.ரஞ்சித். “யானைமரம்” படத்தின் First Look போஸ்டரை தனது ‘சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2’ படப்பிடிப்பு தளத்தில் வெளியிட்டார் பா.ரஞ்சித்! அருகில் நடிகர்கள் ஜெயிலர் சீனு, ஜான் கொக்கன், ஹரீஷ் உத்தமன், கே.பிரபாகரன், இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன். பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை தற்போது யானையின் உருவத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான். பரமு, அந்த யானை மரத்தை நண்பனாக பாவித்து அதனிடம் தன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த சமூகத்தில் அவனுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும்…
Read More