‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது ‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படம்- தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ( போஸ்ட்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்
நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, இதற்கு சாட்சியாக அமைந்தது. குறிப்பாக, 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், மியூசிக் அகாடமியில் புதிய வரலாற்றை மாயா எஸ். கிருஷ்ணன் உருவாக்கியுள்ளார். நிகழ்ச்சி நாளன்று அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பியது. மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிரச்சாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்றவற்றை நையாண்டி கலந்து…
Read Moreபிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!
“பேங் பேங்” டீசர் – பிரபு தேவா, வடிவேலு இணையும் வித்தியாசமான ஜாம்பிகள் களம்! KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த…
Read Moreசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை
இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து, தொடரும் இந்தப் பயணத்தில் ‘ரஜினியிசம்’ எனும் உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.…
Read Moreஉசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது..
தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை.. கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகுப்பந்தயம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்: * சூரி * சுஹாஸ் * மஹிமா நம்பியார் * சத்யராஜ் * ரவீந்திர விஜய் * அச்யுத் குமார் * பாலா சரவணன் * மிதுன் * கீர்த்திகா இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான “ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS…
Read Moreகாதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !
முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது. இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின்…
Read More‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை விரிவுபடுத்தும் மனோரமாமேக்ஸ்
மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை முதன்முறையாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலான கதைகளை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மலையாள திரைப்படங்களை மற்ற பிராந்தியச் சந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மனோரமாமேக்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ‘காட்டாளன்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட வெளியீடுகள் இதன் தொடக்கமாக அமைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ரசிகர்களும் மலையாளத் திரைப்படக் கதையைத் தங்கள் சொந்த மொழிகளிலேயே பார்த்து…
Read Moreகுட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!
குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் தைரியம், பெருமை என தேசப்பற்றை பேசும் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ வெளியாகியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் சுதிர் யாதுவன்ஷி பாடியுள்ள இப்பாடலுக்கு இர்ஷாத் தலால் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை உலகை அறிமுகப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை இந்தப் பாடல் இந்திய ரசிகர்களுக்கு நினைவூட்டினாலும் அந்தப் பாடலிலிருந்து நேரடியாக எந்தவிதமான தாக்கத்தையும் பெறாமல், ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் இந்தப் பிரபலமான வார்த்தைக்கு புதிய கோணத்தை தருகிறது. இதன் மூலம் தேசப்பற்று உணர்வையும் நம் நாட்டின் பெருமையையும் வெளிப்படுத்துகிறது. சுதீர் யாதுவன்ஷி தனது ஈர்க்கும் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு கூடுதல்…
Read Moreவிஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் 4.5/5..
கதை… மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் ராதிகா.. இவரது ஒரே மகன் சூர்யா.. தன் அம்மாவிற்கு அப்பா செய்த திருமண துரோகத்தால் திருமணத்தை வெறுக்கிறார் சூர்யா.. ஆனால் 42 வயதான பிறகு அம்மாவின் விருப்பப்படி தங்களின் பாரம்பரியமிக்க குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என நினைக்கிறார்.. ஆனால் அம்மாவுக்கே தெரியாமல் வாடகைக்கு தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து இந்தியாவுக்கு அழைத்து வருகிறார் சூர்யா.. அதன் பிறகு என்ன ஆனது மகனின் வாடகை தாய் விருப்பத்திற்கு ஆதரவு கொடுத்தாரா ராதிகா.? மமீதாவுக்கும் சூர்யாவுக்கும் என்ன உறவு என்பதெல்லாம் சுவாரஸ்யமான திரைக்கதை.. நடிகர்கள்… சூர்யா – விஸ்வநாத் மமிதா பைஜு – மேடி ராதிகா – நிர்மலா தேவி ரவீனா டாண்டன் – அஞ்சலி கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியாக நம்மை கவர்ந்த சூர்யா இதில் சஞ்சய் விஸ்வநாத்தாக கவர்ந்திருக்கிறார்.. ஒரு…
Read Moreஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் – (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்
சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் – ‘ஃபௌஜி- Fauzi’ படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது… மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்… இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல… ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு…
Read More
