விண்ணுக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், புயலுக்கும், விளம்பரம் தேவையில்லை. துருவ் விக்ரம் ஒரு புயல்! அது நின்று, சுழன்று, திரைத்துறையை, உலக சினிமாவை சுழன்றடிக்கும். He Proves his Fathers Blood. தான்பட்ட இன்னல்களை, கழனி, வாய்க்கால், வயல், அருவி, ஓடைகள், நதி, கடலிலிருந்து வெப்பமாய், ஆவியாய், பெரு மேகக் கூட்டமாய், நன்னீராய், கருவுற்று பன்னீராய், பூமிக்கு பொழியும் தாய். விண்ணைப் போல் சாதிய கொடுமை நெருப்பில் வெந்து தப்பித்து, இடியாய்… படைப்புகளை மக்களிடம் சேர்க்கும். வேறுபாடு, சாதித்துவம் ஒழிய பாடுபடும். மாரி செல்வாஜ் இன்னும், படைக்க வேண்டியது நிறைய காலடி தடம்… பதி! பாதை உருவாக்கு…. பின்தொடர்வர்…. கோடி!… பைசன் காளமாடன்… சிறந்து, வெற்றி குவிக்கட்டும்! நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்
Read MoreCategory: சினிமா செய்திகள்
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. “ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன், வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின்…
Read Moreபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பிரpபாஸ்! இந்தியாவின் தடுக்க முடியாத “ரெபெல் ஸ்டார்” பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் !
இந்திய நாடு முழுக்க பரவுயிருக்கும் பெயர் — பிரபாஸ்! பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. இந்த மாதம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள். இதோ அந்த அபாரமான ரெபெல் ஸ்டாரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்! இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார் பிரபாஸ் “ரெபெல் ஸ்டார்” எனப் போற்றப்படுவதற்குக் காரணம் வெற்றிப்…
Read Moreபைசன்: தீப்பொறியாக பிறந்து, எரிமலையாக எழுந்த படம்! -நந்தா பெரியசாமி
“எந்த நாடெல்லாம் தோற்றுப் போகிறதோ அவை எல்லாம் என் தாய் நாடு” “எங்கெல்லாம் மானுடம் காயம்படுகிறதோ அவர் எல்லாம் நம் தோழமை” என்கிறார் மகாகவி தாந்தே . காளமாடன் திரைப்படத்தை பார்க்கும் பொழுது நினைவுக்கு வந்தது தாந்தே வரிகள் ஒரு திரைப்படம் எழுதும் போதே வெற்றி அடைய வேண்டும். ஆன்மா மண்டியிட வேண்டும்.பைசன் திரைப்படம் அதை வலியோடு செய்திருக்கிறது சகப் போட்டியாளர்களை வெல்வது அவன் நோக்கம் அல்ல .பல நூற்றாண்டு பகையை அவன் வென்று இருக்கிறான் பைசன் ஒரு தீப்பொறி .ஆனால் பெரும் எரிமலையின் வெப்பம் கொண்டிருக்கிறது. “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் “என பாடிய மகாகவி பாரதியின் வரிகளுக்கு தன்னை ஒப்படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் போராளியாக தன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் அவருக்கு நம் வாழ்த்துக்கள் அன்புடன் நந்தா பெரியசாமி…
Read Moreஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன
‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு…
Read Moreமர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, அக்டோபர் 24 முதல் ZEE5-இல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத…
Read Moreஇந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த வருடம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக வெளிவர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பண்டோரா உலகம் அதிகாரப்பூர்வமாக இந்திய திரையரங்குகளில் நுழைந்ததை அடுத்து, இந்த தீபாவளி இன்னும் கொண்டாட்டமாக மாறியது. இந்திய மக்களின் உணர்வுகள் மற்றும் பண்டிகை கால கொண்டாட்டத்தை எதிரொலிக்கும் ‘அவதார்’ திரைப்படம் நீண்ட காலமாக இந்திய ரசிகர்களின் இதயங்களில் தனியிடம் பிடித்துள்ளது. முதல் இரண்டு பாகங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து, அடுத்த பாகமும் நிச்சயம் வெற்றி அடையும். இந்த பண்டிகைக் காலத்தில் பண்டோராவின் வருகையைக் கொண்டாடும் வகையில், அவதாரை குறிக்கும் ‘A’ என்ற எழுத்து வடிவில் நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றியும் பண்டோராவின் துடிப்பான உலகத்தைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்களுடனும் ரசிகர்கள் கொண்டாடினர். கதைசொல்லல்…
Read Moreபைசன் படம் பார்த்து மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பைசன் படம் வெளியாகி பெறும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்று பெரும் வெற்றிபடமாக திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது பதிவில் இது பற்றி குறிப்பிட்டு பதிவுசெய்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். “சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” ‘ -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும்…
Read Moreஇயக்குநர் வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வை!
நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை! ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். போஸ்டரின் ஆழத்தையும் தெளிவையும் பாராட்டி வெற்றிமாறன் தெரிவித்ததாவது, “முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இன்னும் இளைமையாக இருக்கிறார். ‘அன்பு மட்டும் அண்டம் தேடும் ‘ என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. ‘மெல்லிசை’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார். வெற்றிமாறனின் அன்பார்ந்த வாழ்த்துக்கு ‘மெல்லிசை’ படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட்…
Read Moreநடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று ‘திரெளபதி2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!
சென்னை, தமிழ்நாடு:*நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று ஆக்ஷன் கதையான ‘திரெளபதி 2’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி அரசன் வீர சிம்ஹா கடவராயனாக நடித்திருக்கிறார். நேதாஜி புரொடக்ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்திருக்க, மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியாகிறது. இந்தக் கதை தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு மற்றும் நீதி பற்றி பேசுகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் வெளியீடு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் ரிச்சர்ட் ரிஷி அரச கலையுடனும் தீவிரமாகவும் இருப்பது ரசிகர்கள் மத்தியில்…
Read More