பரிமளா அண்ட் கோ – விமர்சனம்..

கதை

பரிமளா (ஜெயராம்) & சுதந்திரம் (ஊர்வசி) இந்த தம்பதிகளின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) & மதுமிதா (அனந்திதா)..

ஜெயராமின் இரண்டாவது மகளை காதலிக்கிறார் சாண்டி.. ஆனால் அவர் அந்த ஏரியாவின் ரவுடி என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார் ஜெயராம்..

இதனால் குடும்பத்தை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டுகிறார் இதனால் குடும்பம் ஒன்றிணைந்து அவரை தீர்த்து கட்ட முடிவெடுக்கிறது.. ஆனால் அதற்கு அடுத்த நாள் தீபாவளி அன்று கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார் சாண்டி..

இந்த கொலையை செய்தது யார் என்று இவர்களுக்குள் குழப்பம் வருகிறது.. அப்படி என்றால் அந்த கொலையை செய்தவர் யார்? இவர்கள் மீது பழி என்ன காரணம் என்பதெல்லாம் மீதிக்கதை


நடிகர்கள்…

பரிமளா (ஜெயராம்),
சுதந்திரம் (ஊர்வசி)

மகள்கள் பராசக்தி (சஞ்சனா)
மதுமிதா (அனந்திதா)

வில்லன் வர்கீஸ் (சாண்டி)

அக்கா சஞ்சனா தங்கை ஆனந்திதா.. இதுபோல அக்கா தங்கை செல்ல சண்டைகளை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.. இருவருக்கும் அக்கா தங்கை கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது..

அப்பாவியான தம்பதிகள் ஜெயராம் ஊர்வசி.. தங்கள் குடும்பத்தை ஒருவன் மிரட்ட இவர்கள் செய்வது அறியாமல் இருக்கும் காட்சிகள் எதார்த்த தம்பதிகளை காட்டுகிறது.. லூஸ் டாக் விடும் ஊர்வசியை கண்டு ஜெயராம் மிரட்டும் காட்சிகள் குடும்பத் தலைவனுக்கு அழகு..

காவல்துறை அதிகாரியாக மிஷ்கின் மற்றும் தமிழ் குமரன்.. மிஷ்கின் காமெடி செய்திருக்கிறார் தமிழ் குமரன் கொஞ்சம் சீரியஸ் ஆகவே காணப்படுகிறார்..

வில்லனாக சாண்டி மாஸ்டர்.. இனி பல படங்களை இவருக்கு வில்லன் வேடம் வந்து கொண்டே இருக்கும் போல..

இவர்களுடன் யோகிபாபு, சிங்கம்புலி, பகவதி பெருமாள், சென்ராயன் உள்ளிட்ட பலரும் உண்டு.. யோகி பாபுவின் வழக்கம்போல ஒன்லைன் காமெடி ரசிக்க வைக்கிறது..

தொழில்நுட்பக் குழு …

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. பெரும்பாலும் வீட்டிற்குள் நடக்கும் கதைக்கு ஏற்றவாறு அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..

பாடல்களும் பின்னணி இசையும் ஓகே.. பெரிதாக கவரவில்லை.. பாண்டியராஜ் படங்களில் குடும்பப் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் இதில் மிஸ்ஸிங்..

வாச்சா வுடாத பாடல் துள்ளலாக இருந்தாலும் மாஸ்டர் சாண்டி காகவே அந்த பாடல் வைக்கப்பட்டதாக தெரிகிறது..

குடும்பப்பாங்கான கதைகளுக்கு சொந்தக்காரர் என்று சொல்லலாம். பாண்டிராஜ் படங்களுக்கு எப்போதும் குடும்பங்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்… இதில் புதிதாக திருசியம் பானையில் திரில்லர் கலந்து கொடுத்திருக்கிறார் அது மட்டுமில்லாமல் நெல்சன் பாணியில் டார்க் காமெடியை கையாண்டிருக்கிறார்..

டார்க் காமெடி சில இடங்களில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. முக்கியமாக ஊர்வசியின் ஓவர் டோஸ் படத்திற்கு செட் ஆகவில்லை..

ஆனால் எந்த லாஜிக்கும் பார்க்காமல் குடும்ப கதையை குடும்பத்துடன் ரசிக்க நீங்கள் நினைத்தால் நிச்சயம் இந்த பரிமளாவே ரசித்து விட்டு வரலாம்..

Parimala And Co movie review

Related posts

Leave a Comment