‘மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் – ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றில் படமாக்கப்படுகிறது

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘ விஸ்வம்பரா ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படத்திற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் வசீகரிக்கும் உலகத்தை பற்றிய ஒரு பார்வையை இந்த டீசர் அளித்தது. இயக்குநர் வசிஷ்டா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. தயாரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் சிரஞ்சீவியின் அறிமுக பாடலை படக் குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஷங்கர் பள்ளியில் ஆடம்பரமான அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பினை நடத்தி வருகிறார்கள். இந்த பாடலுக்கான தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ எஸ் பிரகாஷ் மேற்பார்வையில் கலை…

Read More

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படம் – அதிரடியான ஆக்சன் காட்சிகள்- புராண கதைகள் மற்றும் மல்டிவெர்ஸ் சூழலுடன் இணைந்திருக்கும் என உறுதி அளித்திருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் படத்தைப் பற்றிய மர்மத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் பிரபஞ்சங்களின் பல்வேறு அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் – பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. அறிமுக படைப்பாளிகளான ஆனந்த் எஸ் ராஜ் மற்றும் நிதி ராஜ் ஆகியோர்…

Read More

”எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்” – நடிகர் யோகி பாபு விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. மேலும், சில இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் இந்த தகவலை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும்…

Read More

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!

சாஷ்ட சண்முகா கோயில் யாத்திரையின் பகுதியாக, துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர். திருச்செந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் சென்றார். தென்னிந்தியா முழுவதும் உள்ள சாஷ்ட சண்முக க்ஷேத்திர யாத்திரையின் ஒரு பகுதியாக, திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை தரிசனம் செய்தார். ஸ்ரீ பவன் கல்யாண் அவர்களுடன், அவரது மகன் ஸ்ரீ அகிரா நந்தன் மற்றும் TTD குழு உறுப்பினர் ஸ்ரீ ஆனந்த் சாய் ஆகியோரும் உடனிருந்தனர். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீ ஆர்.ஆறுமுருகன் தக்கர், கோவில் இணை கமிஷனர் ஸ்ரீ ஞான ஷைலரன் மற்றும் கோயில்…

Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார்*

முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள ‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன் இந்நிகழ்வின் (MEBC) தலைமை வழிகாட்டியும் மூத்த நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார். இந்தியாவின் பொழுதுபோக்கு துறை கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. இதில் பிராந்திய மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்தியாவை மையமாகக் கொண்ட ‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட்…

Read More

எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” வரும் மார்ச் 7 முதல் திரையரங்குகளில் !

முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கிராமத்து பின்னணியில் ஒரு இளம்பெண்ணின் மரணத்தைச் சுற்றிய காட்சிகளை திகில் கலந்து காட்டும் டீசர், இப்படம் வித்தியாசமான ஹாரர் ஜானரில் ரசிகர்கள் இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது. டீசர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி…

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில்…

Read More

தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க வரும் பாக்யஸ்ரீ!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பாக்கியஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஆழமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாத் துறையில் அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும், இந்த மொழியைக் கற்றுக்கொள்ள சிரத்தை எடுத்துக் கொண்டார் பாக்யஸ்ரீ. இதன் மூலம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடியும் என நம்புகிறார். அவரது கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் இயல்பான திரை இருப்பு அவரை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனித்து நிற்க வைக்கிறது. ‘காந்தா’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பாக்யஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் இது…

Read More

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’

துடிப்புமிக்க இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஹார்ட்டின்’. தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார். ‘மகான்’, ‘பேட்ட’, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில்…

Read More

கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படம்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. இவர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் நம்பத்தகுந்த நடிகராக நீண்ட காலமாக வலம் வருகிறார். தொடர்ச்சியான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக திரைத்துறையினர் பாராட்டை பெற்றவராகவும் அறியப்படுகிறார்.   அந்த வரிசையில், நடிகர் கிருஷ்ணா தன் திரைப்பயணத்தில் 25-வது திரைப்படம் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த திரைப்படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையசம் கொண்டுள்ளது. தற்போதைக்கு “KK 25” என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தை மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பால கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரைத்துறையில் களமிறங்குகின்றனர். முன்னதாக…

Read More