ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது . கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நீங்கள் சினிமாவுக்கு கொடுத்தால் சினிமா உங்களுக்கு கொடுக்கும்: இயக்குநர் மித்ரன் பேச்சு!
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ‘ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை’ என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது . அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம் ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.…
Read Moreநிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய பட டைட்டில் வெளியானது!!
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இக்கூட்டணி தங்களின் அடுத்த வெற்றிப் படைப்பிற்காக மீண்டும் இணைந்துள்ளது. நடிகர் நிவின் பாலியின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக அமையும் 50-ஆவது திரைப்படமாக ‘விஜயம்’ உருவாகிறது. இதன் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளத்தில் உள்ள பத்மா திரையரங்கில், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ரேசிங்-ஐ பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்திற்கு அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்கிறார். பாலி ஜூனியர் பிக்சர்ஸ் (Pauly Jr.…
Read More“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்
“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது. Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாடுகளையும், கலாச்சாரங்களையும் தாண்டி ‘பாகுபலி’ எவ்வாறு மக்களின் மனதில் இடம்பிடித்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், உலகின் பல பகுதிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்தார். “இத்தாலியில் கூட மக்கள் என்னை பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு நான் அறப்பணிக்காகச் சென்றபோதும்,…
Read Moreவிறுவிறுப்பான அரசியல் திரில்லரான ‘கராத்தே பாபு’ படத்தில் தவ்தி ஜிவால், கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்
பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆகஸ்ட் 28 அன்று ‘கராத்தே பாபு’ திரையரங்குகளில் வெளியாகும்…
Read Moreபிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது. கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர். இறுதியில், பாரம்பரிய கிராம விருந்துடன் விழா நிறைவடைந்து.…
Read More*நடிகர்கள் ஜீவா – ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*
*நடிகர் ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* ’96 ‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் அண்ட் வார்’ திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட…
Read Moreபூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!
சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான…
Read Moreஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது. விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை (மவுண்ட் ரோடு), ஆச்சி ஹவுஸ், பெருங்குடி மற்றும் அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையின்…
Read Moreயோகி பாபுவின் 300-வது திரைப்படம் “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
Dhev Cinemas Pvt Ltd கிருத்திகா தங்கப்பாண்டி.S, தங்கப்பாண்டி.D தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள *“அர்ஜுனன் பேர் பத்து”* திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300-வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடுமையாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறார். ஆனால் அந்த வாகனம் திருடப்பட்ட பிறகு,…
Read More