ஆகஸ்ட் 15 முதல் Sony LIV செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து தங்களது பாடல் திறமையை வெளிப்படுத்தலாம்

தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருக்கும். கோயில் பாடல்கள், நாட்டுப்புற இசை, சினிமா பாடல்கள் முதல் சுயாதீன இசை வரை, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உலகம் கேட்க வேண்டிய ஒரு குரல் இருக்கின்றது அந்தக் குரல்களுக்கு தற்போது பெரிய மேடை கிடைத்து உள்ளது. உலகின் பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘Tamil Idol’ நிகழ்ச்சியை முதல் முறையாக தமிழில் Sony Vizha அறிமுகப்படுத்துகிறது. Sony vizha மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து செயல்படவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி தற்போது ‘Tamil Idol’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இது இசை மற்றும் திறமையை மையமாகக் கொண்ட ஒரு புதிய பயணமாக இருக்கும். சிறந்த குரல் வளம், மேடை நிகழ்த்தும் திறன், தனித்துவமான திறமை ஆகியவற்றை கொண்டவர்களை…

Read More

பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு

கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது. பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு முற்றிலும் மாறாக, போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.…

Read More

சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில்…

Read More

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது ‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படம்- தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ( போஸ்ட்…

Read More

ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன்

நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, இதற்கு சாட்சியாக அமைந்தது. குறிப்பாக, 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், மியூசிக் அகாடமியில் புதிய வரலாற்றை மாயா எஸ். கிருஷ்ணன் உருவாக்கியுள்ளார். நிகழ்ச்சி நாளன்று அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பியது. மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்பு பிரச்சாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை போன்றவற்றை நையாண்டி கலந்து…

Read More

பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!

“பேங் பேங்” டீசர் – பிரபு தேவா, வடிவேலு இணையும் வித்தியாசமான ஜாம்பிகள் களம்! KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த…

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து, தொடரும் இந்தப் பயணத்தில் ‘ரஜினியிசம்’ எனும் உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.…

Read More

உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது..

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை.. கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகுப்பந்தயம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்: * சூரி * சுஹாஸ் * மஹிமா நம்பியார் * சத்யராஜ் * ரவீந்திர விஜய் * அச்யுத் குமார் * பாலா சரவணன் * மிதுன் * கீர்த்திகா இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தலைமையிலான “ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS…

Read More

காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார். “நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது. இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின்…

Read More

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை விரிவுபடுத்தும் மனோரமாமேக்ஸ்

மனோரமாமேக்ஸ் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங்கை விரிவுப்படுத்தும் பொருட்டு, ’காட்டாளன்’ திரைப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்கிறது. மலையாள பார்வையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி பார்வையாளர்களை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளடக்கத்தை முதன்முறையாக டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலான கதைகளை ரசிகர்கள் பெருமளவில் விரும்புவதால், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மலையாள திரைப்படங்களை மற்ற பிராந்தியச் சந்தைகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மனோரமாமேக்ஸ் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறது. ‘காட்டாளன்’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் கன்னட வெளியீடுகள் இதன் தொடக்கமாக அமைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்துவதோடு, அந்தந்தப் பகுதி ரசிகர்களும் மலையாளத் திரைப்படக் கதையைத் தங்கள் சொந்த மொழிகளிலேயே பார்த்து…

Read More