ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ஜனவரி 16 அன்று ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ தற்போது ஜப்பானிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஜனவரி 16ஆம் தேதி ஜப்பானில் படம் வெளியாகவுள்ள நிலையில், குடும்பத்துடன் டோக்கியோ சென்றுள்ள நடிகர் அல்லு அர்ஜூன் தனது ஆக்ஷன் எண்டர்டெயினர் படத்தை புரமோட் செய்து வருகிறார். டோக்கியோ நகரத்தின் அழகிய ஸ்கைலைன் இடம்பெற்ற புகைப்படத்தை தனது…
Read MoreCategory: சினிமா செய்திகள்
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா
‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் முருகன், ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற தொடர்.. தற்போது’ சங்காரம்’ எனும் நூலாக தயாராகி இருக்கிறது. வன்முறையும், பேரன்பும் கொண்ட கதை மாந்தர்களால் நிரம்பிய இந்த நாவலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்களது…
Read More‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்! நடிகை ரோஜாவின் கம்பேக்! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது. Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர் ‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் முக்கிய…
Read Moreதிரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1” தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்” விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில்…
Read Moreஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார்!
அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இந்த விளம்பர படம் அமைந்துள்ளது. நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை, பிரம்மாண்டம் மற்றும் தரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பர படம் தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக வெளியிடப்பட உள்ளது. அல்லு அர்ஜுனின் வலுவான திரை இருப்பும், அவருடைய ஸ்டைலும் இந்த விளம்பர படத்தில் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
Read Moreதமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) போட்டியில் அதிகாரப்பூர்வ நுழைவு!
இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் 2026) நாமினேஷன் புராசெஸில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி உலகளாவிய அங்கீகாரம் பெற்றிருக்கும் ‘கெவி’ இனி வெளியாக இருக்கும் பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் முன்மாதிரியாக மாறியுள்ளது. தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆர்ட்அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவான ’கெவி’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கடினமான இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு, கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியது. படத்தில் ஆதவன் மற்றும் ஷீலா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாக்குலின் லிடியா, ஜீவா சுப்ரமணியன்,…
Read More“இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’” -நடிகர் சிவகார்த்திகேயன்!
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 10, 2026 அன்று) வெளியாக உள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி தனது அனுபவங்களை சிவகார்த்திகேயன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார், “’பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகியபோது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என்…
Read Moreஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ | வெளியீட்டு தேதி அறிவிப்பு
குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் – திரு. முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர். நவீன சமூகச் சிந்தனைகளை மையமாகக் கொண்ட ஒரு Contemporary Social Drama ஆக உருவாகியுள்ள ‘யூஃபோரியா’, சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மைச் சவால்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் கதையுடன், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஒருசேர கவரும் வகையில் தனித்துவமான கருத்தில் உருவாகியுள்ளது. மேலும், இன்றைய இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கிடையேயான உறவுகள், புரிதல்கள்,…
Read More“’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடிக்கும்”- இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணி ரத்னம்…
Read Moreதங்கம் & வெள்ளியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 108 முருகன் வேல்கள் !!
புகழ்பெற்ற நகை வியாபாரியும், ஆன்மீகத் தொலைநோக்காளருமான, மகாலட்சுமி கோல்ட் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் கிஷோர் கட்டாரியா, “108 தெய்வீக மகாவேல்” என்ற உலகின் முதல் முயற்சியாக, முருகப்பெருமானின் 108 தனித்துவமான, ஆய்வுசெய்யப்பட்ட வேல்களை தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட, இந்த அபூர்வமான ஆன்மீக–கலை முயற்சியை, பொன் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட 108 மகாவேல்கள் ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, இன்று தனியார் அரங்கில் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஐசரி K கணேஷ் வேல்ஸ் பல்கலைகழகம் நிறுவனர் மற்றும் வேந்தர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, 108 பொன் வேல்களின் திருவிழாவை துவக்கி வைத்தார். மேலும், A2B (Adyar Ananda Bhavan) நிறுவனத்தின் மேலாண்மை…
Read More