அதிரடி மாஸ் என்டர்டெயினர்: ‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

நடிகரும், இயக்குநருமான பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘அதிரடி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் ஏற்படுத்தியுள்ளது. பசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்ஸ் (Basil Joseph Entertainments) மற்றும் டாக்டர் அனந்து என்டர்டெயின்மென்ட்ஸ் (Doctor Ananthu Entertainments) இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஒரு முழுமையான மாஸ் என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘மின்னல் முரளி’ படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான அருண் அனிருதன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் மூலம், டொவினோ தாமஸ், பசில் ஜோசப், சமீர் தாஹிர், மற்றும் அருண் அனிருதன் அடங்கிய ‘மின்னல் முரளி’ கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது. படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அக்டோபர் மாத…

Read More

பைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் அவர்களை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி ஆசிரியராக நடிகர் மதன் நடித்திருக்கிறார். தென் தமிழகத்து மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டையும் நிஜ கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் இந்தப்படம் பேசுகிறது. நிஜத்தில் மனத்தில் கணேசனுக்கு உதவிய ஆசிரியர்தான் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்கள். இன்று இயக்குனர் மாரிசெல்வராஜ் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து படக்குழுவின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.   

Read More

அருண்ராஜா காமராஜின் சீடர் இயக்கியுள்ள ‘டியர் ஜீவா’ ; டென்ட்  கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியீடு

தி காம்ரேட் பிலிம்ஸ் சார்பில் J சகாய சதீஷ் மற்றும் சையது ஒமர் முக்தார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டியர் ஜீவா’. பிரகாஷ் வி பாஸ்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லப்பர் பந்து, பாம் என சமீபத்தில் வெளியான வெற்றிப் படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் டிவி புகழ் டிஎஸ்கே (TSK) இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தீப்ஷிகா நடிக்க, முக்கிய வேடங்களில் மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் பேரனும் மோகன் நடித்த ‘ஹரா’ படத்திற்கு இசையமைத்தவருமான ரஷாசாந்த் அர்வின் இசையமைக்க, அரவிந்த் செல்வராஜ் மற்றும் சஞ்சீவ் கண்ணா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ராஜா ஆறுமுகம் கவனித்துள்ளார். இந்த படம் டென்ட் கொட்டாய் ஓடிடி…

Read More

தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை (Dakshina Kashi to Kashi) ரிஷப் ஷெட்டியின் ஆன்மீகப் பயணம்

காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்‌ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக பிரார்த்தனை செய்தார். அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான *காசிக்கு (வாரணாசி)* பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை அவரின்…

Read More

கொகொவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!🪔

தீபாவளி பண்டிகையில் வானம் ஆயிரம் பட்டாசுகளாலும் வாண வேடிக்கையாலும் ஒளிர்ந்தாலும் கொகொவுக்கு மனதில் ஒரே ஒரு ஆசைதான். அது எந்தவிதமான பட்டாசு சத்தமும் இல்லாமல், பயமில்லாமல் கிகியை பாதுகாப்பது! உலகமே பட்டாசு சத்தத்தால் அதிரும்போது அவர்கள் இருவருக்கும் நீங்கள் தரும் மிகச்சிறந்த பரிசு அவர்களை பாதுகாப்பதுதான். இந்த தீபாவளியை சற்றே வித்தியாசமாக கொண்டாடுவோமே! உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு அமைதியான பாதுகாப்பான இடம் ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தந்து உங்கள் அன்பை காண்பியுங்கள். ஏனெனில், செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் மட்டும்தான் உலகம்! எங்கள் சிறிய குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பத்திற்கு, அன்பு நிறைந்த தீப ஒளி நாள் வாழ்த்துக்கள்! கிகி & கொகொவின் தீபாவளி வாழ்த்துக்கள் 🐾 உங்கள் கொண்டாட்டங்கள் பிரகாசமாகவும், உங்கள் அன்பு நிறைந்தவர்களை பாதுகாப்பாகவும் வைத்திருங்கள். அதுதான் உண்மையான கொண்டாட்டம்.

Read More

நடிகை கிருத்தி ஷெட்டியின் கவர்ச்சிகரமான அறிமுகத்தால் தனித்துவம் பெற்றுள்ளது

சென்னை, 18 அக்டோபர் 2025: மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் ரீடெய்லின் பிரீமியம் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டான அசோர்ட், சென்னையின் பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் அதன் புத்தம் புதிய கடையைத் திறப்பதன் மூலம் தெற்கில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. 15,211 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆல்-நியூ ஸ்டோர், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமகால பாணி மூலம் ஃபேஷன் சில்லறை விற்பனையை மேம்படுத்தும் அசோர்ட் இன் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக இருக்கும். பிரமாண்டமான திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், நடிகையும் இளைஞர்களின் ஐகானுமான கிருத்தி ஷெட்டி அசோர்ட் கடையைத் திறந்து வைத்து, ரசிகர்கள் மற்றும் நுகர்வோர்களுடன் உரையாடி, நகரத்தின் டைனமிக் மற்றும் ஃபேஷன்-ஃபார்வாட் ஸ்பிரிட்டைக் கொண்டாடினார். அசோர்ட் என்பது இந்தியாவின் ஒரே ஃபேஷன் நியோஸ்டோர் ஆகும், இது குளோபல் டிரெண்டுகளை ஒருங்கிணைக்கும் வகையில்…

Read More

ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

‘கரவளி’ (Karavali) பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநர் குருதத்த கனிகா (Gurudatta Ganiga )– ராஜ் B. ஷெட்டி உடன் இணைந்து, ‘ஜுகாரி கிராஸ்’ படத்தை துவங்கியுள்ளார் ! பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி! சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது. தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் பிரபல நாவலை படமாக்கும் மிக தைரியமான முயற்சியில் களமிறங்கியுள்ளார். முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த…

Read More

இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025ஐ மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அவிச்சி கல்லூரி இணைந்து சென்னையில் தொடங்கின

ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டு 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 வியாழக்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டது. ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தென் பகுதி அலுவலகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும் தாக்கத்தை உண்டாக்கும் சினிமாவின் கதைசொல்லல், பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர அனுபவங்களைக் கொண்டாடுவதன் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார ஒத்துழைப்பையும் மக்களிடையேயான தொடர்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தஜிகிஸ்தான்,…

Read More

காந்தாரா சேப்டர் 1  –  தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் !,  2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை !!

தமிழ்நாட்டில் காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் அதிரடி வசூல் வேட்டை இன்னும் தொடர்கிறது! ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா சேப்டர் 1” படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன. மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள், நிரம்பிய திரையரங்குகள் என காந்தாரா சேப்டர் 1, தமிழ்நாட்டில் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த மனதை கவரும் பாடல்கள், அரவிந்த் S. காஷ்யப் ஒளிப்பதிவில் ஆச்சரியபட வைக்கும் காட்சிகள் , மற்றும் ரிஷப் ஷெட்டியின் ஆற்றல் மிகு…

Read More

அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் மெஸன்ஜர் திரைப்படம்

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.…

Read More