ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்),…

Read More

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் – அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது… காதல் – நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை… ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது ‘வானே வானே..’ எனும் முதல் பாடலை வெளியிட்டு,…

Read More

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா…

Read More

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது…

Read More

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘ஒளிரும் வகுப்பறைகள்’ நூலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பெற்றுக் கொண்டார்; இந்திய மொழிகளில் வெளியிட உறுதி!

மீ பதிப்பகம் சார்பில் மணிகண்டன் வெளியீட்டில், இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதியுள்ள ‘ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி)’ எனும் புதிய நூலை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டார். நூலைப் பெற்றுக் கொண்ட பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், இயக்குநரின் முந்தைய படைப்பான ‘சினிமாவின் ஆன்மா’ நூல் பெற்றது போன்றே, உலக சினிமா ரசனைக் கல்வியை மையமாகக் கொண்டுள்ள இந்த நூலையும் அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு செல்வதற்குத் தேவையான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம் என்று உறுதியளித்து வாழ்த்தினார். நூலின் சிறப்பம்சங்கள்: • நூல் தலைப்பு: ஒளிரும் வகுப்பறைகள் (உலக சினிமா ரசனைக் கல்வி) • ஆசிரியர்: இயக்குநர் / கவிஞர் சீனு ராமசாமி • வெளியீட்டாளர்: மீ பதிப்பகம் (மணிகண்டன்) •…

Read More

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா,…

Read More

விசுவாசங்கள் சிதற, இரத்தம் சிந்துகிறது: ஜியோஹாட்ஸ்டாரின் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 3 – எபிசோட் 6 போரின் தீவிரத்தை மேலும் உயர்த்துகிறது

ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 3-இன் எபிசோட் 6 தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது. டான்ஸ் ஆஃப் தி டிராகன்ஸ் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் புதிய எபிசோட் அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள், உணர்வுபூர்வமான மோதல்கள் மற்றும் போரின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு மிகப்பெரிய யுத்தத்தை ரசிகர்களுக்குக் கொண்டுவந்துள்ளது. ஒரு மாபெரும் போர் அனைத்தையும் மாற்றுகிறது: எபிசோட் 6, செர் கிரிஸ்டன் கோல் தலைமையிலான படையெடுப்புடன் தொடங்குகிறது. பதற்றம் நிறைந்த மோதலாகத் தொடங்கும் இந்தச் சம்பவம், சீசனின் மிகப்பெரிய போர்களில் ஒன்றாக வெடித்து, இரு தரப்பினருக்கும் பேரழிவை ஏற்படுத்துவதோடு, கிரீன்ஸ் மற்றும் பிளாக்ஸ் அணிகளுக்கிடையேயான அதிகாரச் சமநிலையையும் மாற்றுகிறது. ரெய்னிராவின் அரசவையில் பிளவுகள் ஆழமடைகின்றன: கிங்ஸ் லாண்டிங்கில், ரெய்னிரா தனது அரசவையினரிடமிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். ராஜ்யம் முழுவதும் பரவி வரும் கலவரங்களுக்கு எதிராக…

Read More

‘பரிமளா & கோ’வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்

சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’ இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான ‘பரிமளா & கோ’ குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள் மூலம் எதிர்பார்ப்புகளை மீறிய வெற்றியைப் பெற்றது. குடும்ப பார்வையாளர்கள் மட்டுமின்றி நகைச்சுவையை விரும்பும் ரசிகர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று, ZEE5 தளத்தில் பிரபலமான திரைப்படமாக மாறியது. இந்த வெற்றி, மண்ணின் மணம்…

Read More

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் ‘கானா விளக்கு மயிலே…’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படத்தின் எனர்ஜிடிக்கான பாடலான ‘கானா விளக்கு மயிலே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். மற்றொரு பாடலான ‘அடி தேனி சந்தையில்…’ பாடலை லா. வரதன் எழுதியிருக்க…

Read More

சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியீடு! “விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான  திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது…

Read More