வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட். விஷ்ணுவர்தன் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ஷிவ் பண்டிட், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியான ‘சிக்மா’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வின்சென்ட் என்ற கிரே ஷேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், ஆக்ஷன்–அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் த்ரில்லருக்கு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மீண்டும் உற்சாகமாக தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஷிவ் பண்டிட் பகிர்ந்து கொண்டதாவது, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 2002 ஆம் ஆண்டு முதன்முதலில் கேமரா முன்பு நின்றேன். ஆனால் நடிப்பு மீதான எனது பயணம் உண்மையில் நான் ஒன்பது வயதாக இருந்தபோதே…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – விஷால் வெங்கட் இயக்கத்தில்
நாசர்- ரெஜினா கஸாண்ட்ரா- ரமேஷ் திலக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்….. தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘பாம்- Bomb’ படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர்- ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக்- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு…
Read Moreசென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு – DHE PUTTU’ எனும் பெயரில் புதிய கேரள கலாச்சார பாணியிலான உணவகத்தை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான திலீப் மற்றும் காவ்யா மாதவன் தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் – காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பி சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வழங்கும் வகையில், சென்னை அண்ணா நகரில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்…
Read Moreநடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்த நிகழ்வு,வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…
Read Moreமிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். சிரிப்பு, மகிழ்ச்சி என நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை…
Read Moreஎன் கணவர் திரு. செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய “காகிதமலர்” என்னும் திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் “Asian Future” பிரிவில் ‘World Premiere’ ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். இந்தச் செய்தி மூலம் படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் அவர்களுக்கும் செழியன் சாரின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், R.P. ராஜா, பேச்சியப்பன் அவர்களுக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தை அனுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், தமது பிஸியான நேரத்திலும் செய்து கொடுத்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், எப்போது…
Read Moreநம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜேசன் சஞ்சய பகிர்ந்து கொண்டதாவது, ”’சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதட்டமாகவும் இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்குவதற்காக ஒரு குழுவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அறிமுக இயக்குநராக என் மீது…
Read Moreடோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!
நடிகர் சனந்த்தின் திரைப்பயணம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. அவரது திறமை முழுமையாக வெளிப்படாமல் போன வலிமிகுந்த காலகட்டமும் இருந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பின் மூலம் உச்சத்தைத் தொட்டு சனந்த் மிளிர்வது, அவருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘டோரதி’ படத்தின் டிரெய்லரில் ஆக்ரோஷமான உடல்மொழியுடன் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் சனந்த் தோன்றியதால், அவர் ஒரு கிராமத்து முரட்டு இளைஞராக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. ஆனால், சுப்பு என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதாபாத்திரத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்த சனந்த், தற்போது தனது திரைப்பயணத்தின் மிகச்சிறந்த நடிப்பு எனப் பலரும் பாராட்டும் ஒரு கதாபாத்திரத்தைப் பெற்றுள்ளார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் அவருக்கு குவிந்து…
Read Moreநகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.
நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது. இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு. கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை…
Read Moreநடிகர் அல்லு அர்ஜுனின் மனைவி, தொழில்முனைவோர், தாய் மற்றும் இந்தியாவின் அதிகம் பின்தொடரப்படும் பிரபலங்களில் ஒருவர் என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அல்லு சினேகா ரெட்டி!
அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார். அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும் லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும்…
Read More