‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என தமிழ் ZEE5 அறிவிப்பு

சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் தொடர் மீண்டும் வருகிறது நேஷனல், 7 அக்டோபர் 2026: தமிழ் ZEE5 தனது பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை அறிவித்துள்ளது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடர், முற்றிலும் புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் ஆழமான தார்மீகக் குழப்பங்களுடன், நீதித்துறை அமைப்பை மையமாகக் கொண்ட தனது விறுவிறுப்பான கதையாடலை புதிய அத்தியாயத்துடன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். அவரது வலுவான திரை ஆளுமை கதைக்களத்திற்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அதேசமயம், கதையின் மையத்தில் இருக்கும் தனது கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று…

Read More

‘டோரதி’ படம் மூலம் மிரட்டலான வில்லன் அவதாரம் – நடிகர் சௌந்தரராஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சௌந்தரராஜா. தற்போது வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் ஒரு கொடூரமான வில்லன் அவதாரமெடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கணவராக நடித்திருக்கும் சௌந்தரராஜா, வெறுமனே நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரது ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாகவும், பார்ப்பவர்களுக்கு கோபத்தை தூண்டும் வகையிலும் மிகக் கொடூரமாக அமைந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஒரு முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை சௌந்தரராஜா கச்சிதமாக செய்து முடித்துள்ளார். குறிப்பாக, இவரது மதுரை தமிழும், வசன உச்சரிப்பும் கச்சிதமாகவும், மிக…

Read More

ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதராக அருண் கோவில் காட்சியளிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. முன்பு, இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில், தற்போது அயோத்தியின் மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதராக ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிக்கிறார். ராமாயணத்துடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ள ஒரு நடிகர், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. படக்குழு தங்களது…

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு !!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: இந்த அமைப்பு என்பது நம்மால் முடிந்த  உதவிகள் அனைவருக்கும் செய்வதுதான் நோக்கமே தவிர யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு இல்லை என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடல் ஆரோக்கியம் தான் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்த்தி அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிறகு நன்றாக சம்பாதிக்க வேண்டும் சம்பாதித்து முதலில் உங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நற்பணி என்ற பெயரில் ஓரிரு நாள் மட்டும் செய்து…

Read More

தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலைப் பார்வையை உலகுக்கு எடுத்துச் சென்ற கோபி பிரசன்னா

தைவானில், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டிசைன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக “தாவோயுவான் உலகின் பார்வையில்(Taoyuan POV)” என்ற தலைப்பில் தங்கள் வடிவமைப்பு படைப்புகளைக் காட்சிப்படுத்தவும்  விழாவில் பங்கேற்கவும், ஆட்டோமொபைல் டிசைனர், கிராபிக் டிசைனர் , ப்ராடக்ட் டிசைனர்  போன்ற உலகின் பல்வேறு துறை சார்ந்த, சிறந்த 20  வடிவமைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்டிருந்த நால்வரில், தமிழகத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையில் ‘ஆரண்ய காண்டம்’, ‘கத்தி’, ‘விக்ரம் வேதா’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘ராக்கா’ உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களுக்கு போஸ்டர் டிசைனராக சிறப்பாகப்  பணியாற்றி வரும் திரு. கோபி பிரசன்னா அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார் . மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அவரது வடிவமைப்பு, விழா…

Read More

ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த weekend-ஐ இன்னும் special-ஆ மாற்ற இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியிருக்கிறது. ஒருபக்கம், இசை ரசிகர்களின் மனசுல தனக்கென ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற ‘சரிகமப’-வோட புதிய சீசன். இன்னொரு பக்கம், Mass-க்கும் Class-க்கும் இடையே நடக்கப்போகும் செம கலகலப்பான போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கிற ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’. இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா, மேலும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியுடன் நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப்…

Read More

அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (UnderDog Films) தயாரிப்பு நம்பர் 1 அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், தற்போது திரைத் துறையில் அடுத்த கட்டமாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, “அண்டர்டாக் ஃபிலிம்ஸ்” (Underdog Films) எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 1’ (Production No.1) திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஜீப்ரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், அவரே தயாரித்தும் வருகிறார். இதன் மூலம் நடிகராகவும்…

Read More

ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’  சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் அமர்ந்து தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்து தனது யோகக்கலை திறமையை நிரூபித்தார். இந்த தியானத்தை அமைதியாக நிறைவு செய்த பிறகு, பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு…

Read More

சென்னையில் எழுச்சியுடன் நடந்த நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட,நகர,ஒன்றியம்,பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ரசிகர்களுடன் கலந்துரையாடி விட்டு பிறகு அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.மேலும் நமது அறிவுத் திறன் மற்றும் படிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் புத்தக கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது இதில் முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டர்.மற்றும் இதில் ஏராளமானோர் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். இதில் 2000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது.

Read More

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன் தழுவலாக இது உருவாகியுள்ளது சென்னை, அக்டோபர் 5, 2026: காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் வயதை தலைகீழாக மாற்றும் ஒரு விசித்திரமான திருப்புமுனையுடன் உருவாகியுள்ள ‘லவ் ஆல்வேஸ்’ என்ற புதிய தமிழ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. கிராஸ் பிக்சர்ஸ் மற்றும் குரு பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்தொடர், ‘Here We Go Again’ என்ற பிரபல கொரிய வெப்டூனின் தழுவலாகும். தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கொரிய தழுவல், தென் கொரிய கதையமைப்பையும் தமிழ்ச் சூழலுக்கேற்ற உணர்ச்சிகயும், நகைச்சுவையையும் அட்டகாசமாகப் பிணைத்துக் கொண்டுவருகிறது. விவாகரத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு தம்பதி, எதிர்பாராத சம்பவத்தால் தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் முற்றிலும் வேறுபட்ட…

Read More