கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பு எண் 1-ஆக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். கதையின் நாயகியாக கௌரி கிஷன் நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கௌரி கிஷனின் முகத்தை மையமாகக் கொண்டு, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தாரகை’ படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, அலன் பி. ஜான் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு…

Read More

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா, KM Health Care Hospitals நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. பாலசுப்ரமணியன், நடிகரும் இயக்குநருமான திரு. சந்திரா லட்சுமணன், மற்றும் Sun News சிறப்பு செய்தியாளர் திரு. ராஜா திருவேங்கடம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக புற்றுநோயை…

Read More

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.

ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது தமிழ் உள்ளடக்கம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது தமிழ் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் திரையைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பகிரப்பட்ட அனுபவங்கள், உரையாடல்கள் மற்றும் கலாச்சார அடையாளமாக மாறுகின்றன. தமிழ் ZEE5-ஐ பொறுத்தவரை, இந்த உறவின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பொறுப்புடன் கூடியதாகும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள, உயர்தரமான கதைசொல்லல் மூலம் அவற்றை தொடர்ந்து உயர்த்துவதும் எங்கள் பொறுப்பாகும். இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்புக்கு இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ஜனநாயகன் முன்னிலை…

Read More

கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் (Vishnu Talkies) வழங்கும் ‘CUSTOMER’ குறும்படம் இன்று (ஆகஸ்ட் 18) மாலை 6:00 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

டி. விக்னேஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இக்குறும்படம், நவீன விளம்பர உலகமும் மார்க்கெட்டிங் தந்திரங்களும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள் தான் உங்களை வாங்குகிறது” (You don’t buy a product, product buys you) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கதைச் சுருக்கம்: தேவி — கணவர் மற்றும் மகனுடன் வாழும் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பப் பெண். தினமும் வேலை, குடும்பப் பொறுப்பு என ஓடிக்கொண்டிருக்கும் அவளுக்கு, தன் தோற்றத்தைப் பற்றி பெரிதாக கவலை இல்லை. ஆனால் தொடர்ந்து அவள் கண்முன்னே தோன்றும்…

Read More

மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”…நடிகை அனிஷ்மா அனில்குமார்!

‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான்…

Read More

MGM Healthcare Malar Removes Massive 890-Gram Brain Tumour, One of the Largest Ever Reported

The tumour was removed through a meticulous craniotomy, an open brain surgical procedure in which a section of the skull is temporarily removed to provide access to the brain. Before surgery, doctors performed specialised preoperative embolisation, an advanced, minimally invasive neurointerventional technique, to significantly reduce the tumour’s blood supply. Chennai, August 18, 2026: In a remarkable feat of modern neurosurgery and interventional neurology, a multidisciplinary team at MGM Healthcare Malar, Adyar, successfully removed a massive 890-gram brain tumour, one of the largest ever reported in clinical practice worldwide. The doctors…

Read More

தமிழ் ஒரிஜினல் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது!

சென்னை, ஆகஸ்ட் 18, 2026: ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உள்ளது. ஒளிபரப்பான நாள் முதல், எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் ‘ரிசார்ட்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான கதைக்களங்கள், தங்களது சொந்த மொழி மற்றும் சந்தையைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ’ரிசார்ட்’ மீண்டும் நிரூபித்துள்ளது. ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள…

Read More

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை ; மூளையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய கட்டி வெற்றிகரமாக அகற்றம்!

மூளைக்குச் செல்லும் வழியை உருவாக்குவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றும் ஒரு நுட்பமான மண்டையோட்டுத் திறப்பு அறுவைசிகிச்சை (கிரானியோடமி) மூலம் இந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது. • அறுவைசிகிச்சைக்கு முன்பு, கட்டியின் இரத்த ஓட்டத்தை கணிசமாகக் குறைப்பதற்காக குறைந்தபட்ச ஊடுருவலுடன் கட்டியை சுருங்கச்செய்வதற்கு இரத்தக்குழாய்களை அடைப்பதற்கான (எம்போலை சேஷன்) செய்யபட்டது. சிகிச்சை சென்னை, ஆகஸ்ட் 18, 2026: நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் நரம்பியல் தலையீட்டு மருத்துவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, அடையாறில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் பல்துறை நிபுணர்கள் குழு, மருத்துவ வரலாற்றில் உலக அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய கட்டிகளில் ஒன்றான, 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. சிக்கலான மண்டையோட்டுத்திறப்பு அறுவைசிகிச்சையின் மூலம் இந்தக் கட்டியை அகற்றுவதற்கு முன்னதாக, கட்டியை சுருங்கச்செய்வதற்கு…

Read More

“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த தனது பயணம், நடிகர்கள் தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் தனது முதல் படத்தை இயக்கிய அனுபவம் குறித்து வளர்ந்து வரும் புதிய தலைமுறை இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்துகொள்கிறார். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகை தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. சிவகுமார் முருகேசன், அபிஷன் ஜீவிந்த், பாரி இளவழகன் உள்ளிட்ட புதிய தலைமுறை படைப்பாளிகள் தங்களுக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள ராஜா கருப்பசாமி, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வித்தியாசமான திருமணத்தை மையமாகக் கொண்டு, அதைச் சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை கதைக்களமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மொத ராத்திரி’ உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன்…

Read More

“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்!

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. சில கதாபாத்திரங்கள் ஒரு நடிகரிடம் எதை எதிர்பார்க்கின்றன என்பதனால் மட்டுமல்லாமல், அவை தங்களுடன் கொண்டுவரும் உலகத்தினாலும் சிறப்பானதாக மாறுகின்றன. பிரியா பவானி சங்கரைப் பொறுத்தவரை, ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அத்தகைய மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில்…

Read More