காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட ஒரு தொழில் அதிபரையும், தனது அக்காவையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை…
ஒரு தொழில் அதிபரை அவரது டிரைவருடன் கடத்தி வைத்து விட்டு அவரது மனைவியிடம் 25 கோடியை கேட்கின்றனர் ஆதேஷ் பாலா சாம்ஸ் & மாரீஸ் ராஜா..
இவர்களை கடத்திக் கொண்டு போகும் வழியில் நாயகி அனு-வையும் கடத்திக்கொண்டு அவரையும் அடக்கி வைத்து இருக்கின்றனர்.. தன் அக்காவை தேடி மாஸ்டர் ஹர்ஷித் அங்கு வருகிறான்..
அவன் என்ன சாகசங்கள் செய்தான்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்…
ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர்கள் அனைவரும் தங்கள் பணிய சிறப்பாக செய்திருக்கின்றனர்.. ஒரே இரவில் நடக்கும் கதையை ஒரே நாளில் முழுவதும் படமாக்கிவிட்டது சிறப்பு. அதிலும் ஒரே படத்தை சூட்டிங் முடித்து போஸ்ட் புரடக்சன் பணிகளை செய்து இருப்பது வேற லெவல்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் பிதா..
ஒரு நாள் கூட நிறைவு பெறாத நிலையில் 23 மணி நேரம் 23 நிமிடங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.சுகன்.. இதற்கு முன்பே 23 மணி நேரத்தில் கலைஞர் நகர் என்ற ஒரு படத்தையும் சுகனே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.)
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.
ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன்.
ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.
ஒரே இரவில் விறுவிறுப்பாக சூது கவ்வும் பாணியில் இயக்கியுள்ளார்.. ஒரு சில நேரங்களில் ரிப்பீட் வசனங்கள் போர் அடிக்கிறது.. முக்கியமாக 25 கோடி.. 25 கோடி என்று அடிக்கடி ஆதேஷ் பாலா சத்தமிடுவதை குறைத்து இருக்கலாம்.
என்னதான் பல நாட்கள் ரிகர்சல் எடுத்தாலும் பல பயிற்சிகளை கொடுத்தாலும் ஒரே நாளில் ஒரு படத்தை எடுத்து முடித்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை செய்வது சாதாரண காரியம் அல்ல..
இது கிட்டத்தட்ட மேடை நாடகம் போன்றது தான்.. ஆனால் மேடை நாடகத்தில் எடிட்டிங் பணிகளுக்கு வேலை இருக்காது. ஆனால் அதனை எல்லாம் ஒரு சவாலாக ஏற்று செய்து முடித்திருக்கும் இயக்குனர் சுகனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்..
படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்.. காட்சிகளை எதிர்பார்க்க முடியவில்லை. ஆனாலும் அதை எல்லாம் சுவாரசியப்படுத்தி படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று அடடா இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார் இயக்குனர்..
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.. பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது.. முக்கியமாக திருவிழா நடைபெற்ற ஒரு இடத்தில் கேமராவை வைத்து நடிகர்களை அங்கு நடமாட விட்டு படமாக்கி இருப்பது செம ஐடியா..