திருவனந்தபுரம், செப்டம்பர் 4, 2026: கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான ரூஹி மொஹஸ்ஸாப், ஐக்கிய நாடுகள் சபையின் உலகிலேயே இளவயது உரையாளர், இளவயது சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை நடவடிக்கை செயற்பாட்டாளர் என்ற சிறப்புகளைப் பெற்றுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் இந்தியாவின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் ரூஹியை அன்புடன் வரவேற்றார். மரங்களைப் பாதுகாத்தல், காகிதத்தைச் சேமித்தல், மறுசுழற்சி, காலநிலை மீதான அக்கறை மற்றும் குழந்தைகளின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அவரது முயற்சிகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ரூஹி தனது ’காகிதத்தைச் சேமிப்போம்! மரங்களைப் பாதுகாப்போம்!! பூமியைக் காப்போம்!!! (SAVE PAPER • SAVE TREES • SAVE EARTH)’ என்ற செய்தியை அவரிடம் எடுத்துரைத்ததுடன்,…
Read MoreCategory: சினிமா செய்திகள்
சென்னையில் டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ பிரம்மாண்ட தொடக்கத்தில் பாரி இளவழகன், அர்ச்சனா ரவிச்சந்திரன், கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன், பவியாத்ரிகா, ராணவ், இஸ்மத் பானு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு!
சென்னையில் நடைபெற்ற டாக்டர். பி 360-ன் ‘பேபி ஸ்கின் ஹேர்லெஸ் புரோகிராம்’ அறிமுக விழாவில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். டெகா இத்தாலி (DEKA Italy) நிறுவனத்தின் மேம்பட்ட Motus AZ+ லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை, டாக்டர் பி 360 டெர்மட்டாலஜி எக்ஸ்பிரியன்சியல் செண்டரின் நிறுவனர் மற்றும் சரும நிபுணர் டாக்டர் பைரவி செந்தில் அறிமுகப்படுத்தினார். சருமப் பராமரிப்பில் பயாலஜி அடிப்படையிலான தனது அணுகுமுறையுடன், சர்வதேச அளவிலான லேசர் தொழில்நுட்பத்தை இணைத்து, தனிநபரின் தேவைக்கேற்ற சிகிச்சை முறையை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், ‘ஜமா’ திரைப்படத்தின் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன் மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் கிஷன் தாஸ், தீப்ஷிகா சந்திரன்,…
Read More‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!
‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்! • ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.’ சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் உயிரினங்களையும் இதுவரைக்கும் நாம் பார்த்திராத கோணத்தில் கண்டுணர வைக்கும் ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும். சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு…
Read Moreஜாபர் சாதிக் மீதான வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சட்டப் போராட்டத்தில் முக்கிய திருப்பம்!
பிரபல தொழிலதிபரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்தில், தற்போது ஜாபர் சாதிக் தரப்புக்கு முக்கியமான திருப்பமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு நடவடிக்கைகளும் சட்டரீதியாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. குறிப்பாக, அக்டோபர் 7 ஆம் தேதி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஜாபர் சாதிக் தொடர்பான இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு, கடந்த பல மாதங்களாக இந்த விவகாரத்தில் நடைபெற்று வந்த…
Read Moreகமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார்.
கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கமல்ஹாசனும், திரைப்பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் இந்த புதிய தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த ரகசியத்தைக் காக்கும் அதே வேளையில், படத்திற்காக உருவாக்கப்படும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வையை ரசிகர்களுக்கு அளித்து பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தை ராஜ்கமல்…
Read Moreபள்ளி மாணவர்கள் இப்படத்தை பார்க்கும் நிலையை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இயக்குநர் பேரரசு பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை!
‘யானை மரம்’ என்ற திரைப்படம் பார்த்தேன். என்னை, என் சிறுவயது பிராயத்தை பின் நோக்கி இழுத்துச் சென்ற அற்புத படைப்பு. இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன் படத்தை மட்டும் இயக்கவில்லை, நம்மையும் இயக்குகிறார். யானை மரத்திற்கு நீராக சமூக நீதியையும், உரமாக மனிதநேயத்தையும் இட்டிருக்கிறார். முக்கியமாக மாணவ, மாணவிகள் அனைவரும் காண வேண்டிய அறிவுப்பூர்வ படைப்பு. தமிழக அரசு இப்படத்தை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்க்கும் படியான நிலையை உருவாக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார்! தேசிய விருதுக்கு அனுப்ப கூடிய படம் ‘யானை மரம்’ என்று, படம் பார்த்த இ.வி.கணேஷ் பாபு தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு…
Read MoreSikaram 2026 விழாவில் MLA லீமா ரோஸ் வெளியிட்ட “Top 100 Tamil Leaders in Arabia”
துபாய்: உலகின் பல்வேறு துறைகளில் தமிழர்கள் தங்களின் திறமையாலும் உழைப்பாலும் தனி முத்திரை பதித்து வரும் நிலையில், அரேபிய நாடுகளில் தொழில், வணிகம் மற்றும் தலைமைத்துவத்தில் சாதனை படைத்த தமிழர்களின் வெற்றிப் பயணத்தை பதிவு செய்யும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” சிறப்பு நூல், துபாயில் பிரமாண்டமாக நடைபெற்ற Sikaram 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டது. லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் இந்த பெருமைக்குரிய நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் Merlin முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், Vijayan Ayyappan நூலின் முதல் பிரதியை MLA லீமா ரோஸ் அவர்களிடம் வழங்கினார். அரேபிய நாடுகளில் தமிழர்கள் உருவாக்கியுள்ள தொழில் வெற்றிகளையும், அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தலைமைத்துவத்தையும் அங்கீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள…
Read Moreஜப்பானில் தொடங்கி யூடியூபில் வரலாறு படைத்த ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ டிரெய்லர்! ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகிறது!
பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நடிகர்கள் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோருடன், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரைப் பார்ப்பதோடு மட்டுமல்லாது விளையாடவும் முடியும். ஜப்பான் வெளியீட்டுடன் இணைந்து, பாராமெளண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் யூடியூபில் முதல் முறையாக முழுநீள விளையாடும்படியான திரைப்பட டிரெய்லரை அறிமுகப்படுத்தியுள்ளன.…
Read Moreசூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குரலையும் திறமையையும் வெளிப்படுத்தலாம். இது வெறும் ஆடிஷன் மட்டுமல்ல; உங்கள் இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக இருக்கும். 14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் கோவை ஆடிஷனில் கலந்து கொள்ளலாம். *இடம் : *சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி* *துடியலூர் சாலை, சரவணம்பட்டி, கோயம்புத்தூர் – 641 035* *செப்டம்பர் 6, காலை 9 மணி முதல் ஆடிஷன் தொடங்கும் .* *Sony VIZHA* மற்றும் *Sony LIV* இணைந்து வழங்கும் தமிழ் ஐடல், தமிழின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் மிகப்பெரிய முயற்சியாகும்.
Read More‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர்…
Read More
