JioHotstar-ல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் House of the Dragon சீசன் 3, துரோகங்கள், யுத்தங்கள் மற்றும் மனதை உடைக்கும் சம்பவங்களால் நிரம்பி, இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்கிறது. முதல் எபிசோடிலேயே அதிர்ச்சியூட்டிய இந்த சீசன், சமீபத்திய அத்தியாயங்களில் மேலும் பல திருப்பங்களைக் கொடுத்து ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது. இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு எபிசோடுகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த சீசனின் முக்கிய தருணங்களையும், இன்னும் பதில் கிடைக்காத கேள்விகளையும் பார்ப்போம். *அதிர்ச்சியூட்டிய தொடக்கப் போர்* சீசன் 3 தொடங்கிய முதலே கதையின் பரபரப்பை உயர்த்தியது. மிகப் பெரிய கடற்படைக் போரில், ரேனீரா டார்கேரியனின் மகனும் வாரிசுமான ஜேசேரிஸ் டார்கேரியன் (Jacaerys Targaryen), தனது டிராகன் வெர்மாக்ஸ் (Vermax) கடலில் வீழ்ந்ததைத் தொடர்ந்து உயிரிழக்கிறார். இந்த இழப்பு, டார்கேரியன் குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக…
Read MoreCategory: சினிமா செய்திகள்
சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில் ஜெயராம்–அஷ்வின் நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு!
சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த முதல் கட்ட படப்பிடிப்பு உற்சாகமான சூழலில் நிறைவுபெற்றுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய அம்சமாக, அனைத்து துறையினரின் சிறப்பான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அமைந்தது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழு, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, நடன அமைப்பு மற்றும் உதவிக் குழுவினர் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி, படப்பிடிப்பை எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் நிலவிய உற்சாகமான சூழலும், அனைவரின் ஒற்றுமையும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தயாரிப்பாளர் சாய்…
Read Moreமேலும், தனது ரசிகர்மன்ற (AAFA) உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கினார்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட சுமார் 1000 அல்லு அர்ஜுன் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டார். அன்பும், ஒற்றுமையும் நிறைந்த ஒரு சிறப்பான நிகழ்வாக இது அமைந்தது. இந்த நிகழ்வை சிறப்பாக்கியது அதன் பிரம்மாண்டமான ஏற்பாடு மட்டுமல்ல. ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் பகிர்ந்த அன்பான தருணங்கள்தான். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு மட்டும் அல்லு அர்ஜுன் போஸ் கொடுக்கவில்லை. ரசிகர்களுடன் சிரித்து, நடனமாடி, மனம் திறந்து உரையாடினார். நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தார். அந்தச் சூழல் நடிகர்- ரசிகர்கள் சந்திப்பு சந்திப்பைப் போல அல்லாமல், நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று கூடிய ஒரு குடும்ப விழாவைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.…
Read Moreநடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!
ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார். நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் நடிகை சிம்ரனிடம் எடுத்துரைத்தார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் தெரிவித்தார். இதையறிந்த நடிகை சிம்ரன், நிஷாவை நேரில் சந்திக்க அழைத்தார். அந்த சந்திப்பில், நிஷா நீண்ட நாட்களாகப் பயிற்சி செய்து…
Read Moreஉலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்
தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்துள்ளோம். அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும்…
Read Moreவெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்’ – அமைச்சர் ராஜ்மோகன்
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பாளர் – திரைப்படம் – நட்சத்திர கலைஞர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள் – விளம்பரங்கள் – பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள் – திரையரங்குகள் – ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் – என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான…
Read Moreராஜாஸ் ப்ளேலிஸ்ட் படத்திற்காக எல்லோரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்
அறிமுக நடிகர் ஜெயனுடன் களமிறங்கும் திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்! மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் திரைப்படம்; வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் இணைந்திருக்கும் இசை சார்ந்த குடும்பத் திரைப்படம்! எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ராஜாஸ் பிளேலிஸ்ட்” (Raja’s Playlist) திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது பின்-தயாரிப்பு (Post-Production) பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இத்திரைப்படத்தின் மூலம் மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பின் காரணமாக, தமிழ் சினிமாவின் முன்னணிப் பிரபலங்கள் சிலர் இத்திரைப்படத்திற்காக…
Read Moreதுல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி – AOT திரைப்படக் குழுவினர் – அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘மிட்டாய் மழை- Mittai Mazhai’ யை வெளியிட்டுள்ளனர். ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘மிட்டாய் மழை’ பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்… நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்… பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்… விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல்…
Read Moreஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்ஷன்!
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விஷயங்களும் இதில் உண்டு. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆக்ஷன் நாயகன் வித்யுத் ஜமால், புகழ்பெற்ற யோகா குரு தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அதிரடி ஆக்சன் காட்சிகளோடு இந்த டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், பிரிந்துபோன போர்வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் போர்க்களத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மர்மம் நிறைந்த சுன்-லி (கலினா லியாங்),…
Read Moreதுல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்- அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் – அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது… காதல் – நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை… ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது ‘வானே வானே..’ எனும் முதல் பாடலை வெளியிட்டு,…
Read More
