“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

  ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.…

Read More

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி…

Read More

மோகன்லாலின் அதிரடியான “மலைக்கோட்டை வாலிபன்”  டீசர் வெளியானது !!

பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு சிறு துளி போதும், ரசிகர்களுக்கு உற்சாகத்தில் கொந்தளிக்க, தற்போது வெளியாகியுள்ள டீசர், அந்த விருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. புகழ்மிகு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படம் வெளிவருகிறது. ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். நடிகர் மோகன்லால் கூறுகையில், “படைப்பாளி லிஜோ ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார், அதன் ஒரு துளியை இந்த டீசரில் பார்வையாளர்கள் பார்க்க முடியும்.” என்றார். ‘மலைக்கோட்டை வாலிபன்’ யூட்லீ நிறுவனம்…

Read More

ராக்கிங் ஸ்டார் யாஷின்  “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” !!

ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும்  எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது. தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல யூகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அது அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீது அவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பை…

Read More

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு இயக்குநர் அமீரின் மடல்

வணக்கம். நான் இயக்குனர் அமீர்.. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு, ஓர் மனம் திறந்த மடல்.. சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது “பருத்திவீரன்” தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, திரு.சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும், “பருத்திவீரன்”…

Read More

ஹாலிவுட்டில் இடம்பெற்ற தமிழ் இயக்குநர் என சாதனை படைத்த ”அட்லி”

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி. தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு,…

Read More

மிக்ஜம் புயலால் பாதித்த தங்கள் குடியிருப்புவாசிகளுக்கு நிவாரண உதவி அளித்த சின்னத்திரை நடிகர் பாலா

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகிறார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.…

Read More

ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று வெளியிடவுள்ளார் !!

  யாஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமானது!!, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது!! ‘கே.ஜி.எஃப்’ – I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மேலும் தனது பன்முக திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதம் என, ரசிககர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக கொடி நாட்டினார். ஆனால் ‘கே.ஜி.எஃப்: பார்ட் 2’ இன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக, அவர் எந்த படத்தையும் அறிவிக்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.…

Read More

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படமாக  சாதனை படைத்துள்ளது “டங்கி” டிராப் 4 டிரெய்லர் !!

  இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தை டங்கி திரைப்படத்தின் மனம் வருடும் பயணத்துடன் முடிப்பதற்காக, ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்! டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன்,  ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த டிரைலர் நம்மை அழைத்துச் செல்கிறது. ஷாருக்கின் வசீகரத்துடன் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன் மாயாஜாலத்தை நிகழ்த்தும் டங்கி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் அனைத்துவிதமான சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து  103 மில்லியன் பார்வைகளை…

Read More

*சினிமாக்காரன் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படம்!*

நாவல்களை திரைப்படங்களாக மாற்றி தமிழ் சினிமா பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்ட சினிமாக்காரன் எஸ் வினோத் குமார் தனது புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் கதை, வசனம் எழுதுகிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘சேத்துமான்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ‘கனா’ புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஜெய ஜெய ஜெய ஹே’, ‘ஹிருதயம்’ போன்ற…

Read More