விஜய்65 படப்பிடிப்பில் கொரானா தொற்று பாதித்த ஊழியர்

விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் விஜய் 65 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 10,2020 அன்று வெளீயானது.ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. சண்டைக்காட்சி மற்றும் பாடல் காட்சி படமாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.சுமார் நூறு பேர் கொண்ட படக்குழுவினர் இப்படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் விமானத்தில் ஏற்றினார்களாம். அங்கு போயும் பரிசோதனை செய்யப்பட்டதாம். அதன்பின் அனைவரும் படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டனராம்.இவ்வளவுக்கும் பிறகு ஒளிப்பதிவு உதவியாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று…

Read More

புதிய அரசு பொறுப்பேற்கும்வரை திரையரங்குகளை மூடுவதில்லை

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு காரணமாக திரையரங்குகளை தொடர்ந்து நடத்துவதில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதுஇம்மாதம் இறுதியில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெரிய படங்களும் மறு தேதி குறிப்பிடபடாமல் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்து உள்ளனர் தற்போது திரையரங்குகளில் சுல்தான்,கர்ணன் ஆகிய இரு படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன கொரானா பயம் காரணமாக குடும்பங்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை அதன் காரணமாக 20% பார்வையாளர்கள் படம் பார்க்க வருவதே அபூர்வமாக இருக்கின்றது. தியேட்டருக்கு பழைய, புதிய படங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது சம்பந்தமாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் இணையவழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது ஏதேனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தும்போது மட்டுமே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தியேட்டரை மூடுவதாக சங்கம் முடிவு எடுக்க முடியும் அப்படிப்பட்ட சூழல் இப்போது…

Read More

புதிய தமிழ்படங்கள் வெளியீடு ஒத்திவைப்பு

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தபடுகிறது அதன் காரணமாக திரையரங்குகளில் இரவு காட்சி இரவு நேர ஊரடங்கு விலக்கிகொள்ளப்படும்வரையில் நடைபெற வாய்ப்பு இல்லை கொரானா தொற்று இரண்டாம் அலை அச்சத்தின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக திரையரங்குகிளில் 10% பார்வையாளர்கள்தான் தியேட்டருக்கு வருகின்றனர் குடும்பத்துடன் படம் பார்க்க வருவது முற்றிலுமாக நின்றுபோனது இந்த நிலையில் திரையரங்குகளில் 3 காட்சிகள் மட்டுமே50%பார்வையாளர்களுடன் படங்களை திரையிட முடியும் வெளிநாட்டு உரிமம், கேரளா, கர்னாடகா உரிமைகளின் மூலம் தேவையான அளவு வியாபாரம் கொரானாவுக்கு பின் இல்லை முழுக்க தமிழக திரையரங்குகள் மூலம் படத்தின் முதலீட்டில் 60% அசலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இதன் காரணமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள “டாக்டர்” சசிக்குமார் – சத்யராஜ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள” எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள் தேதி குறிப்பிடாமல்…

Read More

மீண்டும்ஒத்திவைக்கப்பட்ட டாக்டர் பட வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் டாக்டர். இந்தப் படத்தின் ரிலீஸில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் உருவாகிவருகிறது. இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படங்கள் படமாக்கும் ஸ்டேஜில் இருக்கிறது. இந்நிலையில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் படம் முழுமையாக முடிந்து ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது. சிவகார்த்திகேயனுடன் வினய், ப்ரியங்கா மோகன், யோகிபாபு, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களுமே செம வைரல். இந்நிலையில், இப்படம் கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. தேர்தல் காரணமாகத் தள்ளிப் போனது. அதன்பிறகு, டாக்டர் படம் வருகிற மே 13ஆம் தேதியான ரம்ஜான் பண்டிகை சிறப்பாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, ரம்ஜானுக்கும் டாக்டர் இல்லை…

Read More

எட்டாண்டுகளுக்கு பின் இணையும் மதயானை கூட்டணி

2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’. மக்கள் வரவேற்பைப் பெற்ற அப்படத்தில் கதிர், ஓவியா, கலையரசன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் மூலம்தான் கதிர் கதாநாயகனாக அறிமுகமானார்.‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதிர் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை ஏப்ரல் 14 அன்று விப்ரா ரவிச்சந்திரன்வெளியிட்டிருந்தார். இப்பட அறிவிப்புக்குப் பின்னால் பல செய்திகள் இருக்கின்றன. திரையுலகில் பேசப்படுகிற அச்செய்திகள் என்னென்ன? 2019 ஆம் ஆண்டு ‘இராவணக் கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் விக்ரம் சுகுமாரன். இப்படத்தில் நாயகனாக சாந்தனு நடிக்கிறார். அப்படத்தின் முதல்பார்வையும் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடந்து வந்தது.இடையில்…

Read More

தியேட்டர்களை மூடலாமா தியேட்டர் உரிமையாளர்கள் அவசர கூட்டம்

தமிழகம் மீண்டும் ஒரு ஊரடங்கை எதிர்கொள்ளபோகிறது மனதளவில் மக்களை தயார்படுத்துவதற்கான முன்னோட்டம்தான் இரவு நேர ஊரடங்கு என்கிற பேச்சு அதிகரித்து வருகிறது இரவு 9 மணிக்கு ஊரடங்கு நடைமுறை தொடங்குவதால் திரையரங்க தொழில் முடங்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முழுமையான ஊரடங்கு மக்களை பாதிக்காது என்கிற நோக்கத்தில் அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பிற தொழில்களை காட்டிலும் மோசமான நஷ்டத்தை திரையரங்க தொழில் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில் கொரானா ஊரடங்குக்கு பின் ஜனவரி மாதம் திரையரங்குக்கு பொதுமக்கள் படம் பார்க்க வர தொடங்கினார்கள் திரையரங்குகள் ஓரளவு மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஜனவரியில் மாஸ்டர் படத்திற்கு பின் பெரிதாக படங்கள் வெளிவராததால் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடிவைக்கப்பட்டது ஏப்ரல் மாதம் வெளியான சுல்தான்,கர்ணன் ஆகிய இரு படங்களும்…

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா

தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் தமிழ், தெலுங்குபடங்களில் நடித்து வரும் இவர்வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள  “டிரைவர் ஜமுனா” படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான  எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில்  தயாரிக்கின்றார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறினார் தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்திரி  ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.  கிரைம்  த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார்படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, எடிட்டராக ‘அசுரன்’ எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்றைய…

Read More

புதிய தொழில்நுட்பத்தில் டைட்டில் வெளியான முதல் தமிழ் படம்”பார்டர்”

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய்,அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.’AV31′ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின்  பெயர் மற்றும் முதல் பார்வை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய்,  இயக்குனர் கார்த்திக் நரேன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில்…

Read More

அந்நியன் மொழிமாற்றுக்கு எதிராக ஆஸ்கார் ரவிச்சந்திரன் நடவடிக்கை

இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தில்ராஜு இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14,2021) வெளியான செய்திகளில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் மொழிமாற்று என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத்…

Read More

திருநங்கை தினத்தில் அவர்களுக்காக வெளியிடப்பட்ட” இலக்கணப்பிழை”

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது. சமூகத்தில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக ஏளனப் பார்வை, தீண்டாமை என்னும் தண்டனை அனுபவித்து வரும் பாவப்பட்ட ஜீவன்கள் திருநங்கைகள்தான். எனவே, அவர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை ‘திருநங்கையர் நாள்’ எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது. திருநங்கைகள் தினத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் திருமூர்த்தி உருக்கமான குரலில் பாடியுள்ளார். இவர் செவ்வந்தியே மதுவந்தியே பாடல்மூலம்  புகழ் பெற்றவர். கொரானா பரவலால் பாடகர் திருமூர்த்தி சென்னை வர இயலாத சூழலில்…

Read More