எட்டாண்டுகளுக்கு பின் இணையும் மதயானை கூட்டணி

2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் ‘மதயானைக் கூட்டம்’. மக்கள் வரவேற்பைப் பெற்ற அப்படத்தில் கதிர், ஓவியா, கலையரசன்,

வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் மூலம்தான் கதிர் கதாநாயகனாக அறிமுகமானார்.‘மதயானைக் கூட்டம்’ படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதிர் நாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பை ஏப்ரல் 14 அன்று விப்ரா ரவிச்சந்திரன்வெளியிட்டிருந்தார்.

இப்பட அறிவிப்புக்குப் பின்னால் பல செய்திகள் இருக்கின்றன. திரையுலகில் பேசப்படுகிற அச்செய்திகள் என்னென்ன?
2019 ஆம் ஆண்டு ‘இராவணக் கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் விக்ரம் சுகுமாரன். இப்படத்தில் நாயகனாக சாந்தனு நடிக்கிறார். அப்படத்தின் முதல்பார்வையும் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடந்து வந்தது.இடையில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்படம் அப்படியேநின்றுவிட்டதாம்.அந்தப்

படத்தைத் தயாரிப்பதாக முன் வந்திருக்கிறாராம் தயாரிப்பாளர் லிப்ரா சந்திரசேகர்.அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கதிர் நடிக்கும் படத்தை இந்நிறுவனத்துக்கு இயக்கவிருக்கிறாராம் விக்ரம்சுகுமாரன்.இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கதிர் படம் புதிதல்ல. விக்ரம்சுகுமாரன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘தேரும் போரும்’ என்கிற படத்தைத் தான் கதிரை வைத்து இயக்கவிருக்கிறாராம் விக்ரம்சுகுமாரன்.
அந்தப்படம் அறிவிப்போடு நின்றிருந்தது. அதில்தான் அட்டகத்தி தினேஷுக்குப் பதிலாக கதிர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Related posts

Leave a Comment