அக்டோபர் 7 உலக பருத்தி தினத்தை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையில் பேசிய இந்திய ராஜ்யசபா எம்பி எல்.கே சுதீஷ்

உலக பருத்தி தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வை இந்தியா மற்றும் மாலியின் தூதரகங்கள் இணைந்து நடத்தியது, இதில் உலக அளவில் பருத்தியின் மதிப்பு கூட்டல் அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் கலந்து கொண்டது. அதில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியான தூதர் ஹரிஷ் பார்வதனேனி மகாத்மா காந்தியின் கதர் ஆடை பற்றியும் சுதந்திரம் பற்றியும் விரிவாக பேசினார் அதனைத் தொடர்ந்து பேசிய மாலியின் நிரந்தர பிரதிநிதியான தூதர் இசா கோன்ஃபோரு மாலியின் பொருளாதாரம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரர்களுக்கு பருத்தி முக்கியத்துவம் எவ்வாறு உதவுகிறது என்று பேசினார் அதனைத் தொடர்ந்து பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் அசித் குமார் மால்…

Read More

தி சோஷியல் ரெக்கனிங் விமர்சனம்

ஆரோன் சோர்கின் இயக்கி எழுதியுள்ள ‘தி சோஷியல் ரெக்கனிங் (The Social Reckoning)’ திரைப்படம், 2021-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்திய பிரான்சஸ் ஹாகனின் ‘பேஸ்புக் ஃபைல்ஸ்’ எனும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விறுவிறுப்பான புலனாய்வுப் படமாகும். 2010 இல் வெளியான ‘தி சோஷியல் நெட்வொர்க்’ படத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் இப்படம், வெறும் மார்க் ஜக்கர்பெர்க்கின் வாழ்க்கையை மட்டும் பேசாமல், பெருநிறுவன லாபத்திற்காகப் பயனாளர்களின் பாதுகாப்பைச் சமரசம் செய்த தொழில்நுட்ப அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. தகவல் கசிவாளர் பிரான்சஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்) மற்றும் பத்திரிகையாளர் ஜெஃப் ஹோர்விட்ஸ் (ஜெர்மி ஆலன் ஒயிட்) ஆகியோரின் துணிச்சலான சட்டப் போராட்டத்தை சோர்கின் தனது வழக்கமான கூர்மையான, வேகமான வசனங்களால் அமைத்துள்ளார். ஆனால், இயக்கத்தில், தி சோஷியல் நெட்வொர்க் படத்தின் இயக்குநர் டேவிட் ஃபின்ச்சர் பதித்த…

Read More

”டோரதி’ திரைப்படத்தின் வெற்றியை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய படக்குழு!

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும் 25 திருநங்கைகளின் நலனுக்காகநிதியுதவி வழங்கினர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், மனிதநேயம், கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தின் திரையரங்கு வெற்றியையும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த உணர்வுபூர்வமான வரவேற்பையும் படக்குழு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீவிர உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கியுள்ளது. ‘டோரதி’ திரைப்படம் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களின் உணர்வுகளை நுட்பமாகச் சித்தரித்த விதத்திற்கும், ஒவ்வொருவரின் கண்ணியம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உரிமையை வலியுறுத்தியதற்கும் ரசிகர்கள் தெரிவித்த பாராட்டுகளும், பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட அனுபவங்களும் படக்குழுவினரை நெகிழச் செய்துள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்கும்…

Read More

‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Insomniac’s Dream Creations நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில், ‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முந்தைய படத்தின் மூலம் நேர்த்தியான மர்மம் மற்றும் எமோஷனல் திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்திலும் பரபரப்பான திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். முன்னணி இளம் நடிகர் மணிகண்டன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் , ரத்த வெள்ளத்தில் தலைகீழாக கிடக்கும் பெண், அவரைச் சுற்றி சிதறிக் கிடக்கும் தட்டு, கத்தி, ஸ்பூன், ஃபோர்க், மரக்கரண்டி உள்ளிட்ட பொருட்களுடன், அந்த ரத்தக் காட்சியைக் கடந்து செல்லும்…

Read More

பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது

இந்நிகழ்ச்சி  சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா ரூத் பிரபு, ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஷிதிஜா நஹதா- நிறுவனர் ஃபிட் செஃப் மற்றும் நியூட்ரிஷன் வெல்னஸ் கோச், ஷைனி சுரேந்திரன்- விளையாட்டு, ஹோலிஸ்டிக் தடுப்பு உணவியல் நிபுணர்; மற்றும் முன்னணி மகளிர் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பத்மா ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் நரசா நாராயணி ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். ‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஹார்மோன் சமநிலை, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், மாதவிடாய் காலப் பொருட்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் உடல்நல மாற்றங்கள் குறித்து இந்த…

Read More

சிட்லிங்கியின் மருத்துவப் புரட்சியைப் பதிவு செய்யும் ஆவணப்படம் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’!

நாம் இதுவரை அதிகம் அறிந்திடாத உண்மையை திரையில் கொண்டு வரும் திரைப்படங்கள் உலகைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகின்றன. இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ திரைப்படமும் அத்தகைய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அமைந்துள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ஆவணப்படம். அப்பகுதியில் நிகழ்ந்த அசாதாரணமான மருத்துவ மற்றும் சமூக மாற்றத்தைப் பதிவு செய்கிறது. 2026ஆம் ஆண்டுக்கான 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் (IDSFFK) இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியான சிட்லிங்கியைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், 1990களில் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் எதிர்கொண்ட மருத்துவ நெருக்கடிகளையும், அதைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் அந்தப் பகுதிக்கு வந்து 1993ஆம் ஆண்டு ‘Tribal Health Initiative’ (THI)…

Read More

மக்கள் நாயகன் ராமராஜன் நன்றி தெரிவிக்கிறார்…

இன்று எனது பிறந்த நாளினை, நான் பிரமிக்கும் நாளாக உணரும் படியான எண்ணற்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட நற்பணிகளை செய்த தமிழகம் முழுவதும் உள்ள என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சகோதரர்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி! வாழ்த்துக்கள் தெரிவித்தும், பிரார்த்தனைகள் செய்தும், உங்கள் அன்பின் வெளிப்பாட்டினை நான் அன்பனாய் அறிவேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய என் நெஞ்சில் நிறைந்த திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கும், பெருமதிப்புமிகு பத்திரிகை தொலைக்காட்சி ஊடக மீடியாத்துறை நண்பர்களுக்கும், யூடியூப்பர்ஸ், சினிமா சார்ந்த சேனல் கிரியேட்டர்ஸ்களுக்கும், என் வளர்ச்சியில் அன்றும் இன்றும் பெரும் பங்காற்றிவரும் பிஆர்ஓ க்கள், என் உறவினர்கள், நண்பர்கள்,மற்றும் அன்பு பாராட்டி வரும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், நட்புள்ளம் கொண்ட பல்வேறு சங்க தலைவர்கள், அமைப்பு சார்ந்த தோழர்கள், அனைத்து நடிகர்களின் ரசிக பண்பாளர்கள், அன்று முதல் இன்று…

Read More

மூன்று நண்பர்கள், ஒரு திரைப்படம், ஒரு பயணம்: ஸ்ரீ கார்த்திக்கின் புதுப்பட அப்டேட்

‘கணம்’ படப் புகழ் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்க எடுத்த முயற்சி, தற்போது அடுத்த முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தொடங்குவதில் உள்ள சவால்கள், சரியான கதையைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், நிராகரிப்புகள், அதை‌ தாண்டி தாங்கள் நம்பிய கதையை கண்டறிந்து அதை சொந்த முயற்சியில் உருவாக்க அவர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் என அனைத்தையும் ரீல்ஸ் (Reels) மூலமாக ஆவணப்படுத்தி வந்தனர். தற்போது இந்த நெகிழ்ச்சியான பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் இவர்களுடன் இணைந்துள்ளது. அமலா அக்கினேனி, சர்வானந்த், ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘கணம்’ படத்தின் மூலம்…

Read More

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அன்புடன் வரவேற்றார். முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்கும், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்கும் முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More

அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்ற ‘என்ன விலை’ திரைப்படம்!

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடலோரப் பகுதியான ராமேஸ்வரத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கும் ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நீதி, கண்ணியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றையும் படம் பேசியது. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படத்தின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக இந்த…

Read More