சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர்…

Read More

பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம்.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பைவ்-ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார். இவரது நிறுவனம் கடந்த…

Read More

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன்

திரு. வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திருமதி. சைலஜா தேசாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் உடன் கூட்டணி அமைப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன. இந்தப் படத்தை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார். இந்தப் படத்தில் திரைத்துறையில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்: ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு, சுஷின் ஷியாம் இசை மற்றும் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கின்றனர்.   படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரு. வெங்கட் கே நாராயணா பேசும் போது, “எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது. அந்த வகையில் இந்தப் படம்…

Read More

மீண்டும் கம் பேக் கொடுக்கும் ‘ஆரண்ய காண்டம் ‘ புகழ் யாஸ்மின் பொன்னப்பா!!

ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார். கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்” என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன.   தன்னுடைய…

Read More

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறது. இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்…

Read More

‘எமகாதகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.   இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கியுள்ளார். “எமகாதகி” கிராமப் பின்னணியில் அமானுஷ்ய மர்ம…

Read More

பரபரப்பான இறுதிக்கட்ட பணிகளில்,  Sky wanders Entertainment நிறுவனத்தின் முதல் திரைப்படம் !!

இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல் படமாக  இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி.  இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில்  ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை…

Read More

விஜயகாந்த், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது!

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ‘கவிதாலயா’ பாபு தலைமையில், நடிகர் ‘கலைமாமணி’ பூவிலங்கு மோகன், கலை இயக்குனர் சுரேஷ், ஒளிப்பதிவாளர்கள் விக்ரமன், முத்துராஜ், சின்னத்திரை இணை இயக்குநர்கள், இணை ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்! கே.பாலச்சந்தர் இயக்கிய ‘சிந்து பைரவி’ படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் விஜயகாந்த் நடித்திருந்தார். பிறகு விஜயகாந்த்தை ஹீரோவாக வைத்து கே.பாலசந்தர் ஒரு படம் இயக்குவதாக இருந்து என்ற தகவலை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் ‘கவிதாலயா’ பாபு தெரிவித்தார்! பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், பார்த்தசாரதி ஆகியோரிடம் நடிகர் மீசை ராஜேந்திரன் அழைத்துச் சென்று அவர்களோடு சிறிதுநேரம் பேச வைத்தார்!      

Read More

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் (Orumbettavan ഒരുമ്പെട്ടവൻ ஒறும்பேட்டவன்) ‘துணிந்தவன்’!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது .உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை அடிப்படையாகக் கொண்டு ‘துணிந்தவன்’ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜீஷ் தெக்ஷணா காசி – ஹரிநாராயணன் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் தக்ஷணா காசி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இந்தப் படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.உன்னி நம்பியார் இசையமைத்துள்ளார். அச்சு விஜயன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜீமோன் என். எம்.கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். இந்தப் படத்தில் இந்திரன்,ஜாபர், ஜோனி ஆண்டனி, ஐ. என். விஜயன், சுதீஷ், டயானா ஹமீத், அபர்ணா சிவதாஸ், நடித்துள்ளனர். கதையின் பிரதான…

Read More

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும்  “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான “கேம் சேஞ்சர்” படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…

Read More