சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த தலைப்பு வெளியானவுடன் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.‌ மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகிறது.‌ இந்த அறிவிப்பு உண்மையில் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’…

Read More

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றிய பார்வைகளை அழுத்தமாக எடுத்துச்சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள “ரகுதாத்தா” திரைப்படம், வீட்டில் ஓடிடியில் குடும்பத்தோடு ரசித்துக் கொண்டாட மிகச்சரியான திரைப்படமாக அமைந்துள்ளது. முன்னதாக ZEE5 தளத்தில் வெளியான ‘அயலி’ மற்றும் தி ‘கிரேட் இண்டியன் கிச்சன்’…

Read More

‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு!!

பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது.‌ இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக…

Read More

‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரித்தி தாரா!

  மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ‘மையல்’ படத்தில் வலுவான கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் டிராமாவாக உருவாகி இருக்கும் தனது முதல் படத்திலேயே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி என்கிறார் சம்ரித்தி. எந்த சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரித்தி சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ‘ மையல் ’ படத்தில் தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சம்ரித்தி, “இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் நடிகை சம்ரித்தி. மாத்ருபூமி மிஸ் க்ரிஹலக்ஷ்மி ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்டார் மிஸ் ஃபேஸ் ஆஃப் இந்தியா 2021 ஆகிய…

Read More

பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில், ரெட் ஃபிளவர் திரைப்படம் !!

  ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் K மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் “ரெட் ஃபிளவர்” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் இப்படத்திற்காக பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துவக்கியுள்ளார். தமிழ் இசைத்துறையில் நம்பிக்கைக்குரிய புதிய திறமையான சந்தோஷ் ராம், மறக்கமுடியாத மற்றும் புதுமையான ஒலிப்பதிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திரைப்படத்தில் தனது முழுப் படைப்பாற்றலை செலுத்தி வருகிறார். இது குறித்து சந்தோஷ் ராம் கூறுகையில்.. “இது எனது முதல் படம் என்பதால், இசையை தனித்து நிற்கச் செய்ய வேண்டி, என் முழு உழைப்பையும் தந்து வருகிறேன். ரெட்…

Read More

நடிகர் விமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது தொடுத்த வழக்கு ரத்து – ஐ கோர்ட்!

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்த ‘மன்னர் வகையறா’ என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில் நடித்தும், வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் இலாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018-ம் ஆண்டு உத்தரவாதம் அளித்திருந்தார் நடிகர் விமல். ஆனால் சொன்னபடி கடனை திருப்பி செலுத்தாததால் 2020 ஆம் ஆண்டு நடிகர் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் பைனான்சியர் கோபி. இந்நிலையில் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் தப்பிப்பதற்காக குறுக்கு வழியில் இறங்கிய நடிகர் விமல் கடன் கொடுத்த கோபி, கடனுக்கு பரிந்துரை செய்த கோபியின் நண்பரும் ‘லிங்கா’ பட விநியோகஸ்தருமான சிங்காரவேலன் மற்றும் சிங்காரவேலனின் மேலாளர்…

Read More

நடிகை சம்யுக்தா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சுயம்பு’ படத்தில் இருந்து கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டது!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் நடிகை சம்யுக்தா. தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில், நிகில் நடிப்பில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சுயம்பு’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சம்யுக்தா. அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ‘சுயம்பு’ படத்தில் இருந்து அவரது கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் தைரியம் மிக்க வீராங்கனையாக கேடயத்துடன் வில் அம்பு ஏந்தியபடி இருக்கிறார் சம்யுக்தா. நிகிலின் 20வது படமான இதில் அவர் ஒரு போர் வீரனாக நடிக்கிறார். தாகூர் மது வழங்கும் இப்படத்தை பிக்சல் ஸ்டுடியோஸ் மூலம் புவனும் ஸ்ரீகரும் தயாரித்துள்ளனர். சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர். போர் பின்னணியில்…

Read More

PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “!!

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio ) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு ” தில் ராஜா ” என்று பெயரிட்டுள்ளார். சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர். ஒளிப்பதி…

Read More

தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது . தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் ,…

Read More

மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.-சீமான்

அன்புத்தம்பி சூர்யா – ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ‘மெய்யழகன்’ என்று திரைப்படத்திற்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டியதற்கும், அனைவரும் ஆங்கிலத்தில் டீசர் (TEASER) என்று கூறிக்கொண்டிருக்க அதனை ‘கிளர்வோட்டம்’ என்று அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்தமைக்கும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், பாராட்டுகளும்! படம் உருவாக்கத்தில் பங்கு கொண்ட துறைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடும் வழக்கத்தை மாற்றி வண்ணக்கலவை, ஒளிக்கலவை, கள ஒளிப்பதிவு, நிழற்படம், ஆடை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு என அனைத்தையும் அழகுத்தமிழில் குறிப்பிட்டிருப்பது மிகச்சிறப்பு. #கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன். தமிழில்…

Read More