கதை…
ஜெய்ப்பூரில் கதை தொடங்குகிறது.. தன் நண்பர் மணியுடன் தமிழ்நாட்டு சுவையுடன் ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் சனந்த்.. அங்கு உணவருந்தும் வாடிக்கையாளராக வருகிறார் நாயகி இமையா.. நாயகனின் திறமையை கண்டு ஒரு கட்டத்தில் காதலிக்கிறார் காதலி..
லவ் வெளிப்படுத்தும் போது நாயகன் ஏற்கனவே நான் காதல் வலியில் இருக்கிறேன்.. உன்னை என்னால் காதலிக்க முடியாது என மறுக்கிறார்.. கல்லூரி நாட்களில் மடோனாவை காதலித்ததை சொல்கிறார்.. ஆனால் அவள் என்னை பிரிந்து விட்டாள் என்றும் சொல்கிறார்..
முதலில் மறுக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் இமையாவின் காதலை ஏற்று இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய தயாராகி வருகிறார்கள்..
அந்த சூழ்நிலையில் நாயகனுக்கு திடீரென விபத்து ஏற்படுகிறது.. அப்போது கிட்டத்தட்ட கடந்த 5-6 வருடங்களில் நடந்ததை மறந்து விடுகிறார்.. முன்னாள் காதலி மடோனாவின் நினைவு மட்டுமே அவருக்குள் இருக்கிறது… இந்த சூழ்நிலையில் நாயகி என்ன செய்தார்.? திருமணம் நடந்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
நடிகர்கள்…
Sananth as Shiva
Madonna Sebastian as Sahitya
Emaya T as Sadhana
WhatsApp Mani as Mani
Debnita as Ankita
சனந்த் – இமையா – மடோனா ஆகிய மூவரை பற்றியுமே முழு கதை அமைக்கப்பட்டுள்ளது.. சனந்த் இமையா அளவுக்கு காதலில் மடோனாவின் கெமிஸ்ட்ரி இல்லை..
ஏன் காதலை ஏற்றுக் கொண்டார் ஏன் காதலை வெறுத்தார் என்பதற்கு போதுமான எந்த காரணமும் கொடுக்கப்படவில்லை..
இமையா சனந்த் ஆகியோர் காதலிலும் பெரிய நெருக்கம் இல்லை.. காதலிக்க தயக்கம் கொள்கிறாரோ நாயகன்.?
நட்புக்காக நண்பன் மணி அவரது மனைவி நாயகன் நாயகியின் பெற்றோர்கள் கதைகளத்திற்கு பங்களிப்பிற்கு உதவியுள்ளனர்.. சீரியசான இந்த படத்தில் கொஞ்சம் காமெடி செய்து படத்தை கலகலப்பாக்கி இருக்கிறார் நாயகனின் நண்பன் whatsapp மணி..

தொழில்நுட்ப கலைஞர்கள்….
Writer – Director : Kishore Kumar
Music : Rajesh Murugesan
DOP : Mukeswaran V
Editor : Barath Vikraman
Art Director : G. Durairaj
Costume Designer : Uthara Menon
Lyrics : Vivek, Mohan Rajan, Sarathi
Produced by : Trident Arts – R. Ravindran
Co-Produced by : Step One Studios
PRO : Nikil Murukan
பாடல்களும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.. ஜெய்பூர் முதல் ஊட்டி வரை உள்ள அனைத்து காட்சிகளும் கலர்ஃபுல்.. கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது..
ஒரு நாயகன் இரண்டு நாயகிகள் என முக்கோண காதல் கதையை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் கிஷோர் குமார்.. ஆனால் எந்த காதலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை..
ஆக இந்த ஹார்டின்.. ஏமாற்றமே..
