‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ!

 பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையை…

Read More

‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி திரைப்படம் – ஏன் பார்க்க வேண்டும் தெரியுமா?

சமீபத்தில் ZEE5 இல் வெளியான ‘மனோரதங்கள்’ எனும் ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ளது. இது மற்ற படங்களைப் போல சாதாரண படைப்பல்ல, எப்போதாவது நிகழும் அற்புதமாக நிகழ்ந்துள்ள படைப்பு இது! இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்த படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதைகள் மூலம் இந்த படைப்பு உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் ஏன் உடனடியாக, இந்த திரைப்படத்தை காண வேண்டுமென்பதற்கான, 5 உறுதியான காரணங்களைப் பார்ப்போம். ZEE5 இல் இப்போதே ‘மனோரதங்கள்’ பாருங்கள் ! 1. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று…

Read More

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு. அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின், பாட்டு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார். தமிழ்சினிமாவில் பாடல் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களில் சமூக வலைத்தளத்தள பக்கங்களில் உலகெங்கும் இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களில் அஸ்மினும் ஒருவர். “இளம் வயதில் மொழியை ஆளத்தெரிந்தவராக திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த…

Read More

100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சீயான் விக்ரமின் ‘தங்கலான்’

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து…

Read More

சென்னையில் துவங்கும் கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 . சினிமாவும் கற்றலும் சங்கமிக்கும் பெருவிழா!!

வீ எண்டர்டெயின்மென்ட்ஸ், பாரத் பல்கலைக்கழகத்தின் விசுவல் கம்யூனிகேஷன் துறை, மற்றும் ShortFlix OTT ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கார்னர் சீட்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2024 ஐ பெருமையுடன் வழங்குகிறது. இந்த ஆண்டு விழா, ஆகஸ்ட் 30 மற்றும் 31, 2024 ஆகிய இரு நாட்களிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 242 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களின் இத்தொகுப்பில், மாணவர்களுக்கு உலக சினிமா குறித்த பரந்த பார்வையை உருவாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ShortFlix OTT உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த விழாவின் முக்கியமான அங்கமாக இத்திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படவிருக்கின்றன. மேலும், இந்த நிகழ்வில் பல திரைப்படத் துறையின் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள், மாணவர்கள் சர்வதேச சினிமாக்களை பார்ப்பது மற்றும் விவாதிப்பது மூலம் அவர்களின் கற்றல்…

Read More

மின்னல் முரளி ஹீரோ டோவினோ தாமஸின் 50வது படமான “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர்  வெளியாகியுள்ளது!!

மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பான் இந்திய படைப்பாக, மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் “ஏஆர்எம்” படத்தின், அதிரடியான டிரெய்லர் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “மின்னல் முரளி” மற்றும் “2018 – எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ” ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுதும்  கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸ், அடுத்ததாக பிரம்மாண்டமான “ARM” ஏஆர்எம் எனும் – ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் மூலம் அசத்தவுள்ளார். மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்கத்தில் டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது. மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பிரம்மாண்ட படைப்பாக இப்படம்…

Read More

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி வழங்கும் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் ‘மைனா’ புகழ் சேது நடித்திருக்கும் ‘மையல்’ திரைப்படம்!

நல்ல கதையம்சம் உள்ள கதைகள் மொழிகளைக் கடந்து பலதரப்பட்ட பார்வையாளர்களையும் சென்றடையும். சமீபகாலமாக தமிழ் சினிமா இப்படி பல நம்பிக்கை தரும் படங்களையும் திறமைசாலிகளையும் வரவேற்று வருகிறது. மைனாவில் ‘பாஸ்கர்’ கதாபாத்திரத்தில் நடித்து பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் சேது. இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்கும் ‘மையல்’ என்ற ஆழமான உணர்வுப்பூர்வமான படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ஒரு சாதாரண, அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவுகளால் உண்மையான காதல் சிதைந்து விடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவரின் கொந்தளிப்பான மனநிலையை மையக்கதையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை. மலையாள நடிகை சம்ரிதி தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மற்ற நடிகர்களுடன் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர்…

Read More

நடிகர் பிஜிலி ரமேஷ் மறைவிற்கு “சாலா” படக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்!!

நடிகர் பிஜிலி ரமேஷ் இறப்பு மன வேதனை அளிக்கிறது… திரைத்துறையில் நன்கு வளர்ந்து வரும் வேளையில் அவருக்கு இப்படி நேராமல் இருந்திருக்கலாம்… அவர் கடைசியாக நடித்த படம் “சாலா”, அதில் அவர் கடைசியாக பேசிய வசனம் “நீ விக்கற… அதனாலதான் நான் குடிக்கிறேன், கொரோனா நேரத்துல ஆறு மாசம் கட மூடி தான் இருந்தது நான் குடிக்கவே இல்லையே” இந்த வசனத்தை அவர் பேசி நடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்-டில் என்னிடம் “சார்… இந்த டயலாக்கு உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு சார்… நானும் இந்த குடியை விட தான் போராடிட்டு இருக்கேன் முடியல” என சொன்னார்… குடியினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிமகன்களின் உண்மையான குற்றச்சாற்று “கடைய மூடுங்க” என்பதாகத்தான் இருக்கும்…   சிறுநீரக செயலிழந்து மிகச் சிரமத்துடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்த கடைசி நாட்களில்…

Read More

வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெப்பன்’. சயின்ஸ் ஃபிக்‌ஷன்- சூப்பர் ஹியூமன் ஜானரில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியான மூன்று வாரங்களிலேயே அதிக அளவு பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. இதுகுறித்தான மகிழ்ச்சியை தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் பகிர்ந்து கொண்டதாவது, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட் பலருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக ஓடிடி தளத்தில் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. தியேட்டர் ஆடியன்ஸ்- ஓடிடி பார்வையாளர்களை என இருதரப்பினரையும் ஒருசேர திருப்திப்படுத்துவது எளிதல்ல! அதை ‘வெப்பன்’ செய்திருக்கிறது என்பதே இதற்கு சான்று”…

Read More

நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!

மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Read More