பிரபலங்களால் பாராட்டப் பெற்ற “கோதையின் குரல்” குறும்படம்

தமிழில் ‘தங்க முட்டை’ மற்றும் தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மை கைண்டா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பான ‘கோதையின் குரல்’ குறும்படம் திரையிடப்பட்டது.…

Read More

இயக்குநர் ஆறுமுகக்குமாருடன் விஜய் சேதுபதி இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டைட்டில் டீசர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘VJS 51’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இன்று மாலை வெளியிடப்படும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி…

Read More

மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் ஒருங்கிணைக்கும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி

இந்திய திரைத்துறையின் தனித்துவமான ஜாம்பவான், தமிழர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி ( live in Concert) வரும் 2024 ஜுலை 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இந்த இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவினில் திரு அருண் அவர்கள் பகிர்ந்து கொண்டதாவது… தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ள இசைஞானி இளையராஜா அவர்களுடன் இணைந்து இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ்…

Read More

வெப்பன் படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக ராஜீவ் மேனன்

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் எழுத்தாளர்-இயக்குநர் குகன் சென்னியப்பன் கூறும்போது, ”இந்த மாதம் உலகம் முழுவதும் உள்ல திரையரங்குகளில் வெளியாக ’வெப்பன்’ திரைப்படம் தயாராகி வருகிறது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தில் எல்லோருமே சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்றும் நம்புகிறேன். சூப்பர் ஹ்யூமன் எலிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லராக ‘வெப்பன்’ படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து…

Read More

விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” மே 17 முதல் அமேசானில்

மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!! சமீபத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைக் குவித்த, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் “ஹாட் ஸ்பாட்” திரைப்படம் வரும் மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகவுள்ளது. கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், தினேஷ் கண்ணன் வெளியிட, ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசிய ஹாட் ஸ்பாட் திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கலையரசன், 96 பட…

Read More

ஆன்மிகத் தொடுதலுடன் அதிரடியான ஆக்‌ஷன் கிளைமாக்ஸ் கொண்ட டபுள் ஐஸ்மார்ட் டீசர்

நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது! ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் ராமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில மோசமான…

Read More

சுஹாசினி மணிரத்னம், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் “தி வெர்டிக்ட்”

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் “தி வெர்டிக்ட்” கோர்ட்ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திரு. பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும். மேலும் ஒரு சுவாரஸ்யமாக, இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் & பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி படப்புகழ் ஒளிப்பதிவாளர் அரவிந்த்…

Read More

அமேசான் ப்ரைமில் ஆகஸ்ட் 29, 2024 முதல் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் : தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சீசன் 2

பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர், இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வ டீஸர் டிரெய்லர் அறிமுகம் மற்றும் கீ ஆர்ட்டுடன் மீண்டும் வருகிறது – இரண்டாவது சீசன் பிரைம் வீடியோவில் 2024ஆகஸ்ட் 29, அன்று அறிமுகமாகிறது J.R.R.டோல்கியன் -இன் பழம்பெரும் புகழ் பெற்ற வில்லன் சௌரன் (sauron) .மிடில் எர்த்தின் செகண்ட் ஏஜ் -ஐ இருளடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான அரங்கை இந்த புதிய சீசன் நிர்மாணிக்கிறது இணைப்பு : https://youtu.be/3RQ92y1IQaI மும்பை, இந்தியா- மே 16, 2024 – பிரைம் வீடியோ, அதன் எதிர் வரவிருக்கும் மாபெரும் வெற்றித் தொடர் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :ரிங்ஸ் ஆஃப் பவர்” இன் இரண்டாவது சீசனின் முதல் காட்சியை அமேசானின் முதல் முதலான அறிமுக நிகழ்ச்சியில் நியூயார்க்…

Read More

திரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு!

கனவுக் கல்வி ! கட்டணமின்றி! “திரைகள் வழி சமத்துவம் நோக்கி” என்ற நோக்குடன் செயல்பட்டு வரும் , இயக்குனர் வெற்றிமாறனின் பன்னாட்டு திரை- பண்பாடு ஆய்வகம் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் (விஸ்டாஸ்) இணைந்து தனித்துவமான, படைப்புலகத்திற்கான பாதையை அறிமுகம் செய்யும் திரைப்படக் கல்வியில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பை ( B.Sc., Film studeis) 100% உதவித்தொகையுடன் வழங்குகிறது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் . முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் திரைத்துறை கனவை நனவாக்க அரிய வாய்ப்பு! B.Sc Film Studies (3 year Degree Course) https://iifcinstitute.com/admission/

Read More

அடையாரில் மற்றொரு நடனப்பள்ளி துவங்கிய கிகி சாந்தனு

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முக திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்கியராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டூடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டிய பயிற்சி பள்ளியை தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் திரையுலகத்திலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நாட்டியம், நடனம் என்பது இளம் வயதினருக்கு அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பு வழங்கும் கலையாக இருந்தாலும்.. அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், சமூகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் கலையாகவும் திகழ்கிறது. இதனால் நாட்டிய பயிற்சி பள்ளிகளில் தங்களது குழந்தைகள் நாட்டிய பயிற்சியைப் பெற பெற்றோர்கள் மனமுவந்து அனுமதி அளிக்கிறார்கள். சிறார்களும், சிறுமிகளும் தங்களின் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறவும், கவன சிதறலிலிருந்து ஒருமுகமான கவனத்தை பெறவும், உத்வேகத்துடன் தொடர்ந்து…

Read More