Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது  குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார்.…

Read More

Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ! 

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார்.…

Read More

ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகள் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறது. பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள், கம்பீரமான அரண்மனைப் பின்னணிகள், ராமர், சீதையின் திருமணக் காட்சிகள் எனப் பல அழகான தருணங்கள் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ‘மங்கள வண்ணமே’ பாடல் தற்போது வேர்ல்ட் ஆஃப் ராமாயணா மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடலைக் கேட்கலாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அரண்மனையின் பிரம்மாண்டம், புனிதமான திருமண நிகழ்வுகள், அயோத்திக்கு வெளியே அவர்களது…

Read More

எஸ்.ஏ. சந்திரசேகரனை சந்தித்து சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை பெற்றார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்தித்து, சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், பல்வேறு திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றார். அப்பொழுது சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், தான் தலைவராக இருந்த போது சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழ் வெளிவந்தது, அதன் பின்னர் 13 வருடத்திற்கு பிறகு தொடர்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். சங்க வளர்ச்சிக்கும் உறுப்பினர்கள் நலனுக்கும் இந்த சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார். இது போன்ற முன்னாள் தலைவர்கள் ஆலோசனைகள் என்னை போன்று புதிய தலைமைக்கு, நிர்வாகத்தினை நடத்திடவும் மற்றும் திரைப்படத் துறைக்கு இன்னும் நிறைய புதிய திட்டங்கள் கொண்டுவர ஊக்குவிக்கும்…

Read More

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ட்ரீமிங் வெளியீட்டின் முதல் வாரத்திலேயே இப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் மனோரமாமேக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டுள்ளது. சங்கீத் பிரதாப் அறிமுக நாயகனாக நடித்துள்ளார். இதில் ஷரஃபுதீன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோமா நிலையில் இருந்து மீண்டு வரும் ரூபின் (சங்கீத் பிரதாப்), தொலைவில் ஒலிக்கும் சத்தங்களையும் உரையாடல்களையும் கேட்கும் அபூர்வமான திறனைப் பெறுகிறார்.…

Read More

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காதல், நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட மனதுக்கு இதமான காதல் கதைகள், தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களுக்கு விருப்பமான படங்களாக உள்ளன. அந்த வகையில், இன்று அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு, ஆரம்பகட்டப் பிரத்யேகக் காட்சிகளிலேயே கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு, படத்தின் தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. ஏற்கெனவே ‘ஜோ’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தையும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தையும் தயாரித்துள்ள இவர்கள், ‘ஹைக்கூ’ படத்தின் ஆரம்பகட்ட வரவேற்பால் உற்சாகமடைந்துள்ளனர். முதலில் திட்டமிடப்பட்டிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, ரசிகர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துகளும் அதிகரித்த வரவேற்பும் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் பகிர்ந்து…

Read More

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பல பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சித்து குமார். காதலை உணர்வுப்பூர்வமாக இசை மூலம் வெளிப்படுத்துவதிலும் இவர் திறமையாளர் என்பதை ‘தீராக் காதல்’ போன்ற படங்களிலும் நிரூபித்துள்ளார். தற்போது, யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம், இன்று (அக்டோபர் 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இசை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தை முன்னோட்டக் காட்சிகளில் பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதனால் சித்து குமார் மகிழ்ச்சியடைந்துள்ளார். ‘ஹைக்கூ’ படத்தின் இசைப்…

Read More

“சிவப்பு நட்சத்திரம்” திரைப்பட தலைப்பை வெளியிட்டார் நடிகர் சமுத்திரக்கனி!

லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘சிவப்பு நட்சத்திரம்’ என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி தனது சமுக வலைதளங்களில் இன்று வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்! இயற்கை வளங்கள் அனைத்தும் மனித குலத்தின்  பசியை தீர்ப்பதற்கு தான். மாறாக பணம் படைத்தவர்கள் அதனை பதுக்கி வைத்து செயற்கையாக பஞ்சத்தை உருவாக்குவதற்கு அல்ல. இதனை எல்லாம் கண்டும் காணாமல் அடிமையாக வாழ்ந்தால் இங்கு எதுவுமே பிரச்சனையில்லை. அதற்கு எதிராக வாழ்ந்தால் இங்கு எல்லாமே பிரச்சினை தான். என்ற கருவை சுமந்து, மானுடவியலின் பசியை போக்க முன்னெடுக்கிறது காதலும், புரட்சியும், அரசியலும், பொருளாதாரமும் ஆக… கதை கருவின் நாயகனாக டல்ஹவுசி பிரபு நடிக்கிறார். கதை நாயகியாக வர்ஷா நடிக்கிறார். சமூக அரசியல் தலைவனாக பொன்வண்ணன், போலீஸ் கமிஷனராக OAK சுந்தர், நீதிபதியாக பழ கருப்பையா, வில்லன்களாக சித்தார்த், தீரன், பாலமுருகன்,…

Read More

‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெண்களின் உணர்வுகள் தலைமுறைகளைக் கடந்தும் மாறாமல் இருப்பது குறித்தும், யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் குறித்தும், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது குறித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார் நடிகை ஃபெமினா ஜார்ஜ். தனது கதாபாத்திரம் குறித்துப் பேசிய நடிகை ஃபெமினா ஜார்ஜ் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவது எனது கனவாக இருந்தது. அந்த வாய்ப்பு ‘ஹைக்கூ’ போன்ற நம்பிக்கையளிக்கும் படத்தின் மூலம் கிடைத்திருப்பதுடன், உணர்வுப்பூர்வமான பல அடுக்குகளைக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும்…

Read More

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர். மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். மேலும், கல்லூரிகளில் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களிடையே படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய…

Read More