‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் ‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்… தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து … இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான…

Read More

ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு

மலையாளத் திரைப்பட இசையின் மகத்தான இசை மேதையாக விளங்கிய G. Devarajan அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள முதல் “ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026”, புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக் கலைஞர் T. V. Gopalakrishnan அவர்களுக்கு, தேவராஜன் மாஸ்டரின் அன்புத் துணைவியார் திருமதி Leelamani Devarajan அவர்களால் வழங்கப்படுகிறது. 1927 முதல் 2006 வரை வாழ்ந்த தேவராஜன் மாஸ்டர், மலையாளத் திரைப்பட இசை வரலாற்றின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கவிஞர் Vayalar Ramavarma அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்கள், மலையாளத் திரைப்பட இசையின் பொற்காலத்தை உருவாக்கியவை என்றும் கருதப்படுகின்றன. அவரது இசைப் பங்களிப்பிற்காக, கேரள அரசின் உயரிய திரைப்பட விருதான J. C. Daniel Award உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் Gangai Amaran…

Read More

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘லவ் பைட்’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ‘தாய் கிழவி’ புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ்…

Read More

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி -2” ! ஆதிராஜன் இயக்கத்தில் மாளவிகா மேனன்!

தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்கியிருந்தார் ஆதிராஜன். அதே படநிறுவனமும் அதே இயக்குநரும் மீண்டும் கைக்கோர்க்கிறார்கள், சிலந்தி – பார்ட் 2 வுக்காக. இப்படம் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் பிரமாண்டமான பட்ஜெட்டில் மிரட்டலான த்ரில்லர் படமாக உருவாகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் சினிமா வில் கலக்கிவரும் மாளவிகா மேனன் மாறுபட்ட கேரக்டரில் நாயகியாக நடிக்கிறார். பல மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இதன் படப்பிடிப்பு கம்போடியா வியட்நாம் நாடுகளிலும் நடைபெற உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா, மற்றும்…

Read More

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார். சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சி காலத்திலேயே சில மாணவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் பெறுவது மிகவும்…

Read More

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் பெரிய திரையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க,…

Read More

நாயகனின் ஸ்டைல், புத்திசாலித்தனம், ஆளுமையை கொண்டாடும் “கான் சிட்டி” செகண்ட் சிங்கிள்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில்…

Read More

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும்…

Read More

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில்…

Read More

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’. இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான எம்.ஆர். பாரதி, தனது திரைப்படங்கள் மூலம் உணர்வுப்பூர்வமான பல கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். விமர்சகர்களால் பெரிதும்…

Read More